ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்

ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (George Frederick Ernest Albert; George V; சூன் 3, 1865 – சனவரி 20, 1936) மே 6, 1910 முதல் தமது மறைவு வரை ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும் பிரித்தானிய டொமினியன்கள் மற்றும் இந்தியாவின் பேரரசராகவும் ஆட்சி புரிந்தவர்.

ஜோர்ஜ் V
Full-length portrait in oils of George V
1911இல் சேர் லூக் பில்டெசு வரைந்த முடிசூட்டு விழா ஓவியம்
ஐக்கிய இராச்சியத்தின் மற்றும் மேலாட்சிகளின் அரசர், இந்தியாவின் பேரரசர்
ஆட்சிக்காலம்6 மே 1910 – 20 சனவரி 1936
முடிசூடல்22 சூன் 1911
தில்லி தர்பார்12 திசம்பர் 1911
முன்னையவர்ஏழாம் எட்வர்டு
பின்னையவர்எட்டாம் எட்வர்டு
பிறப்பு(1865-06-03)3 சூன் 1865
மார்ல்பரோ மாளிகை, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு20 சனவரி 1936(1936-01-20) (அகவை 70)
சான்ட்ரிங்காம் மாளிகை, நோர்போக், ஐக்கிய இராச்சியம்
புதைத்த இடம்28 சனவரி 1936
புனித ஜார்ஜ் தேவாலயம், வின்ட்சர் கோட்டை
துணைவர்
மேரி (தி. 1893)
குழந்தைகளின்
#Issue
எட்டாம் எட்வர்டு
ஆறாம் ஜோர்ஜ்
மேரி, இளவரசி
என்றி, இளவரசர்
ஜார்ஜ், இளவரசர்
ஜான், இளவரசர்
பெயர்கள்
ஜோர்ஜ் பிரடெரிக் எர்னஸ்ட்டு ஆல்பர்ட்டு
மரபுவின்சர் (1917க்கு பின்) சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா(1917க்கு முன்)
தந்தைஎட்வர்டு VII
தாய்டென்மார்க்கின் அலெக்சாண்ட்ரா
கையொப்பம்ஜோர்ஜ் V's signature
இராணுவப் பணி
Serviceஅரச கடற்படை
Years of active service1877–1892
தரம்See list
கட்டளை
  • டார்பிடோ படகு 79
  • எச்எம்எஸ் த்ரஷ்
  • எச்எம்எஸ் மெலம்பஸ்

ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியாவின் பேரன் ஆவார். மேலும் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், செருமனியின் இரண்டாம் வில்லியமிற்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். 1877 முதல் 1891 வரை அரச கடற்படையில் பணியாற்றினார். 1901இல் விக்டோரியா அரசியாரின் மறைவிற்குப் பிறகு ஜார்ஜின் தந்தை எட்வர்டு VII அரசராக முடி சூடினார். ஜோர்ஜ் வேல்சு இளவரசராகப் பொறுப்பேற்றார். 1910இல் தமது தந்தையின் மறைவையடுத்து பிரித்தானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார்.தனது தில்லி தர்பாரில் பங்கெடுத்த ஒரே இந்தியப் பேரரசர் இவரேயாகும்.

முதல் உலகப் போரின் (1914–18) முடிவில் பெரும்பாலான மற்ற ஐரோப்பிய இராச்சியங்களின் வீழ்ச்சிக்கு நடுவே பிரித்தானியப் பேரரசு தனது மிகவும் விரிவான ஆட்பகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டது. 1917இல், செருமனிக்கு எதிரான பொதுமக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து தமது அரச மரபான சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தாவை மறுபெயரிட்டு வின்ட்சர் அரசமரபு எனப் பெயர்சூட்டினார். இந்த அரசமரபின் முதல் பேரரசராக விளங்கினார். இவரது ஆட்சியில் சமூகவுடைமை, பொதுவுடைமை, பாசிசம், ஐரிய குடியரசியக்கம், மற்றும் இந்திய விடுதலை இயக்கம் வளர்ந்தோங்கின. இந்த இயக்கங்கள் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்தன. 1911ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை நியமிக்கப்படும் பிரபுக்கள் அவையை விட உயர்நிலைக் கொண்டதாக நிறுவியது. 1924இல் முதல் தொழிற்கட்சி அமைச்சரவையை நியமித்தார். 1931இல் நிறைவேற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் பேரரசின் டொமினியன்கள் தனி, விடுதலை பெற்ற நாடுகளாக அங்கீகரித்து பொதுநலவாய நாடுகளாக அறிவித்தது. தமது ஆட்சியின் பிற்காலத்தில் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருந்த ஜோர்ஜ் அரசர் 1936ஆம் ஆண்டு மறைந்தார். அவருக்குப் பின்னர் அவரது மூத்த மகன் எட்வர்டு VIII முடி சூடினார். இவர் 1911 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்ததன் நினைவாக பெரம்பலூர் பகுதியில் வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால் காலத்தால் அது அழிந்து போனது ஆனால் அதன் நினைவாக இருந்த கல்வெட்டு மட்டுமே மிஞ்சி உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு