தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
தொழிற் கட்சி (Labour Party) ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பிரித்தானிய அரசியலில் நடு - இடது பார்வை கொண்ட சமூக மக்களாட்சி மற்றும் சனநாயக சோசலிச கட்சியாக விளங்குகிறது. 1920களில் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியைப் பொதுத்தேர்தல்களில் தோற்கடித்து ராம்சே மக்டோனால்டு தலைமையில் சிறுபான்மை அரசு (1924 மற்றும் 1929-31) அமைத்தது. 1940- 45களில் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் அங்கம் ஏற்றது. போருக்குப் பின்னர் 1945இல் கிளெமென்ட் அட்லி தலைமையில் அரசு அமைத்தது. மேலும் 1964 -70 (ஹேரால்டு வில்சன்), 1974 - 79 (வில்சன்/ஜேம்ஸ் கல்லாகன்) காலகட்டங்களில் அரசு அமைத்துள்ளது.
தொழிற் கட்சி | |
---|---|
![]() | |
தலைவர் | எட் மிலிபாண்ட் MP |
துணைத் தலைவர் | ஹாரியேட் ஹர்மான் MP |
தொடக்கம் | 1900 |
தலைமையகம் | 39 விக்டோரியா சாலை, இலண்டன், SW1H 0HA, |
மாணவர் அமைப்பு | தொழிற்கட்சி மாணவர்கள் |
இளைஞர் அமைப்பு | இளைஞர் தொழிற்கட்சி |
உறுப்பினர் (2010) | 193,961 |
கொள்கை | சனநாயக சோசலிசம்[1][2][3] சமூக மக்களாட்சி மூன்றாம் வழி சமூக மக்களாட்சி |
அரசியல் நிலைப்பாடு | நடு -இடது |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு சோசலிசம் |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய சோசலிசத்தினர் கட்சி |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி |
நிறங்கள் | சிவப்பு |
House of Commons | 258 / 650 |
House of Lords | 212 / 724 |
European Parliament | 13 / 73 |
London Assembly | 8 / 25 |
Scottish Parliament | 37 / 129 |
Welsh Assembly | 30 / 60 |
Local Government[4][5][6] | 5,698 / 21,871 |
இணையதளம் | |
www |
கடைசியாக 1997ஆம் ஆண்டு முதல் 2010 வரை டோனி பிளேர்/ கார்டன் பிரவுன் தலைமையேற்ற அரசு அமைத்தது. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் 258 இடங்களில் வென்று அலுவல்முறை எதிர்கட்சியாக விளங்குகிறது. வேல்சு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசு அமைத்துள்ளது. இசுக்காட்லாந்தில் முதன்மை எதிர்கட்சியாக விளங்குகிறது. ஐரோப்பியநாடாளுமன்றத்தில் இதன் ஐரோப்பிய அணி, சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி,13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சி பன்னாட்டு சோசலிசம் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.
இந்தக் கட்சியின் தற்போதையத் தலைவராக எட் மிலிபாண்ட் உள்ளார்.
தொழிற்கட்சி பிரதமர்கள்தொகு
பெயர் | ஒளிப்படம்் | பிறந்த இடம் | பதவிக்காலம் |
---|---|---|---|
ராம்சே மாக்டோனால்டு | இசுக்காட்லாந்து | 1924; 1929 - 1931 | |
கிளமெண்ட் அட்லீ | இங்கிலாந்து | 1945 - 1950; 1950 - 1951 | |
ஹெரால்டு வில்சன் | இங்கிலாந்து | 1964 - 1966; 1966 - 1970; பெப். 1974; அக்.1974 - 1976 | |
ஜேம்ஸ் கால்லகன் | இங்கிலாந்து | 1976 - 1979 | |
டோனி பிளேர் | இசுக்காட்லாந்து | 1997 - 2001; 2001 - 2005; 2005 - 2007 | |
கார்டன் பிரவுன் | இசுக்காட்லாந்து | 2007 - 2010 |
மேற்கோள்கள்தொகு
- ↑ Labour Party Rule Book 2012. The Labour Party. 2012. பக். 6.
- ↑ How we work - How the party works பரணிடப்பட்டது 2013-06-06 at the வந்தவழி இயந்திரம் – Labour.org.uk - Retrieved 12 February 2012.
- ↑ "Labour Leadership Election 2010". Labour Party. 9 ஜூன் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Keith Edkins (6 May 2010). "Local Council Political Compositions". 7 ஜனவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nicholas Whyte (6 May 2010). "The 2005 Local Government Elections in Northern Ireland". Northern Ireland Social and Political Archive. 6 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://news.sky.com/skynews/Interactive-Graphics/Elections-2011
வெளி இணைப்புகள்தொகு
அலுவல்முறை கட்சி வலைத்தளங்கள்தொகு
- Labour
- Scottish Labour
- Welsh Labour பரணிடப்பட்டது 2015-07-01 at the வந்தவழி இயந்திரம்
- London Assembly Labour
- Young Labour பரணிடப்பட்டது 2010-04-14 at the வந்தவழி இயந்திரம் - Party youth wing
- Labour Party in Northern Ireland
- Labour Party in Westminster
பிறதொகு
- "Tony Benn, former Labour MP for 51 years in Parliament, Quotations" பரணிடப்பட்டது 2019-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Unofficial website with an archive of electoral manifestos and a directory of related websites
- Labourhome - unofficial Labour Party grassroots பரணிடப்பட்டது 2017-09-24 at the வந்தவழி இயந்திரம்
- Labour History Group website பரணிடப்பட்டது 2007-02-10 at the வந்தவழி இயந்திரம்
- Unofficial history website பரணிடப்பட்டது 2019-07-06 at the வந்தவழி இயந்திரம்
- Guardian Unlimited Politics—Special Report: Labour Party
- Labour Party aggregated news (multilingual) பரணிடப்பட்டது 2009-09-01 at the வந்தவழி இயந்திரம்
- Labour History Archive and Study Centre holds archives of the National Labour Party
- (பிரெஞ்சு) "Déroute historique des travaillistes". L'Humanité. 5 May 2008. Archived from the original on 2009-09-05. https://web.archive.org/web/20090905214922/http://www.humanite.fr/2008-05-05_International_Deroute-historique-des-travaillistes. ((ஆங்கிலம்) Translation accessible on www.humaniteinenglish.com பரணிடப்பட்டது 2018-06-22 at the வந்தவழி இயந்திரம்)