2024 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்

2024 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் (United Kingdom general election) 2024 சூலை 4 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு 650 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஐக்கிய இராச்சியத்தின் 58வது பொதுத் தேர்தல் ஆகும். பிரதமர் இரிசி சுனக்கு தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, கீர் இசுட்டார்மர் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியால் மகத்தான வாக்குகளில் தோற்கடிக்கப்பட்டது.

2024 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்

← 2019 4 சூலை 2024 அடுத்தது →

மக்களவையின் அனைத்து 650 இடங்கள்
அதிகபட்சமாக 326[n 1] தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்60% ( 7.4 சவீ)[2]
அறிவிக்கப்பட்டது
99.85%
17:20 தரவுகளின் படி
  First party Second party Third party
 

தலைவர் கீர் இசுட்டார்மர் இரிசி சுனக்கு எட் டேவி
கட்சி தொழிற்கட்சி கன்சர்வேட்டிவ் லிபரல் டெமக்கிராட்சு
தலைவரான
ஆண்டு
4 ஏப்ரல் 2020 24 அக்டோபர் 2022 27 ஆகத்து 2020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கொல்போர்ன்-செயிண்ட் பன்கிராசு இரிச்மண்ட்-நோர்த்அலெர்ட்டன் கின்சுடன்-சர்பிட்டன்
முந்தைய
தேர்தல்
202 இடங்கள், 32.1% 365 இடங்கள்s, 43.6% 11 இடங்கள், 11.6%
வென்ற
தொகுதிகள்
411[a] 121 72
மாற்றம் Increase 209 244 Increase 61
மொத்த வாக்குகள் 9,712,011 6,814,469 3,499,969
விழுக்காடு 33.8% 23.7% 12.2%
மாற்றம் Increase 1.7% 19.9% Increase 0.6%

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யின் கட்சி வாரியாக தேர்தல் முடிவுகளை அளிக்கும் வரைபடம்

தேர்தலின் பின் மக்களவையின் அமைப்பு

முந்தைய பிரதமர்

இரிசி சுனக்கு
கன்சர்வேட்டிவ்

தேர்தலின் பின் பிரதமர்

கீர் இசுட்டார்மர்
தொழிற்கட்சி

இந்தத் தேர்தல் 2005 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொழிற்கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியுடன், கன்சர்வேட்டிவ் கட்சியின் பதினான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. தொழிற்கட்சி 172-இடங்கள் பெரும்பான்மையுடன் மொத்தம் 411 இடங்களைப் பெற்றது. இருப்பினும், அக்கட்சியின் வாக்குப் பங்கு 33.7% என்பது பிரித்தானியத் தேர்தல் வரலாற்றில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தையும் விட சிறியது. 2005-இற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்திலும், 2010-இற்குப் பிறகு இசுக்காட்லாந்திலும் தொழிற்கட்சி மிகப்பெரிய கட்சியாக மாறியது, வேல்சில் மிகப்பெரிய கட்சி என்ற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.[3] சுயேச்சையான பாலத்தீன சார்பு வேட்பாளர்களிடம் தொழிற்கட்சி ஐந்து இடங்களை இழந்தது, பெரும்பாலும் இசுரேல்-அமாசுப் போரில் இசுரேலுக்கு அதன் உத்தியோகபூர்வ ஆதரவுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.[4] கன்சர்வேடிவ் கட்சி அதன் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது, மொத்தம் 121 இடங்களுடன், 23.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 244 இடங்களை இழந்தது, இதில் பன்னிரண்டு தொகுதிகளில் முன்னாள் பிரதமர் லிசு டிரசு மற்றும் அமைச்சர்கள் போட்டியிட்டனர்.[5] வேல்சில் தன்னிடம் இருந்த அனைத்து இடங்களையும் அது இழந்தது.[6]

கன்சர்வேடிவ் எதிர்ப்பு தந்திரோபாய வாக்களிப்பு,[7] தொழிற்கட்சி-கன்சர்வேட்டிவ் வாக்குகளின் ஒருங்கிணைந்த 57.4% தொழிற்கட்சியின் எழுச்சிக்குப் பிறகு மிகக் குறைவானது போன்ற காரணங்களால் சிறிய கட்சிகள் இந்தத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டன. எட் டேவி தலைமையிலான தாராளவாத சனநாயகக் கட்சி, மொத்தம் எழுபத்திரண்டு இடங்களை வென்றதன் மூலம் மிக முக்கியமான வெற்றிகளைப் பெற்றது. இது அக்கட்சியின் வரலாற்றில் மிகச் சிறந்த முடிவாகும்.[8] அத்துடன் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆகியது. ஐக்கிய இராச்சிய சீர்திருத்தக் கட்சி மூன்றாவது அதிக வாக்குப் பங்கை அடைந்து ஐந்து இடங்களை வென்றது. இங்கிலாந்து-வேல்சின் பசுமைக் கட்சி நான்கு இடங்களை வென்றது, இரு கட்சிகளுக்கும் இது வரலாற்றில் சிறந்த நாடாளுமன்ற முடிவுகள் ஆகும். வேல்ஸில், பிளெயிட் சிம்ரு கட்சி நான்கு இடங்களை வென்றது. இசுக்காட்லாந்தில், [[இசுக்கொட்டிய தேசியக் கட்சி] 48 இடங்களிலிருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டது, அத்துடன் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியையும் இழந்தது.[9] தனித்துவமான அரசியல் கட்சிகளைக் கொண்ட வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் தனது ஏழு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது, அதனால் மிகப்பெரிய கட்சியாக மாறியது. சனநாயக ஒன்றியக் கட்சி தன்னிடம் இருந்த 8 இடங்களில் ஐந்து இடங்களை மட்டுமே வென்றது. சமூக சனநாயகத் தொழிற்கட்சி இரண்டு இடங்களையும், வடக்கு அயர்லாந்தின் கூட்டணிக் கட்சி, அல்ஸ்டர் ஒன்றியக் கட்சி, பாரம்பரிய ஒன்றியக் குரல், ஒரு சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடத்தையும் வென்றனர்.

கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ்களை விட அதிக முன்னிலையுடன் தொழிற்கட்சி தேர்தலில் நுழைந்தது. அத்துடன் கட்சியின் வெற்றியின் சாத்தியமான அளவு பரப்புரைக் காலத்தில் விவாதத்திற்குரிய விடயமாக இருந்தது.[10][11] பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, குடியேற்றம், எரிசக்தி ஆகியவை முதன்மைப் பரப்புரைத் தலைப்புகளாக இருந்தன. 2023 ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் தொகுதிகளின் காலமுறை மறுஆய்வுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட புதிய தொகுதி எல்லைகளைப் பயன்படுத்தி முதன்முதலில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. பெரிய பிரித்தானியாவில் நேரில் வாக்களிக்க புகைப்பட அடையாளம் தேவைப்பட்ட முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.[b] அத்துடன் நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் அழைப்பு சட்டம் 2022 இன் கீழ் முதன் முதலாக தேர்தல் நடைபெற்றது[12]

இறுதி முடிவுகள்

தொகு
 
கட்சி தலைவர் உறுப்பினர்கள் வாக்குகள்
% %
தொழிற்கட்சி கீர் இசுட்டார்மர் 411 63.2%
411 / 650
9,704,655 33.7%
கன்சர்வேட்டிவ் இரிசி சுனக்கு 121 18.6%
121 / 650
6,827,311 23.7%
லிபரல் டெமக்கிராட்சு எட் டேவி 72 11.1%
72 / 650
3,519,199 12.2%
இசுக்கொட்டிய தேசியக் கட்சி யோன் சுவினி 9 1.4%
9 / 650
724,758 2.5%
சின் பெயின் மேரி லூ மெக்டொனால்ட் 7 1.1%
7 / 650
210,891 0.7%
சுயேச்சை இல்லை 6 0.9%
6 / 650
564,243 2.0%
சீர்திருத்தக் கட்சி நைஜல் பராச் 5 0.8%
5 / 650
4,117,221 14.3%
சனநாயக ஒன்றியக் கட்சி கவின் ரொபின்சன் 5 0.8%
5 / 650
172,058 0.6%
பசுமைக் கட்சி கார்லா டென்யர்,
ஏட்ரியன் ராம்சி
4 0.6%
4 / 650
1,841,888 6.4%
பிளெயிட் சிம்ரு ருன் ஆப் இயோர்வர்த் 4 0.6%
4 / 650
194,811 0.7%
சமூக சனநாயக, தொழிற் கட்சி கொலம் ஈசுட்வுட் 2 0.3%
2 / 650
86,861 0.3%
வட அயர்லாந்து கூட்டமைப்பு நயோமி லோங் 1 0.2%
1 / 650
117,191 0.4%
அல்சுட்டர் ஒன்றியக் கட்சி டக் பீட்டி 1 0.2%
1 / 650
94,779 0.3%
பாரம்பரிய ஒன்றியக் குரல் சிம் அலிசுட்டர் 1 0.2%
1 / 650
48,685 0.2%
சபாநாயகர் லின்ட்சி ஹொயில் 1 0.2%
1 / 650
25,238 0.1%

குறிப்புகள்

தொகு
  1. இந்த எண்ணிக்கையில் சபாநாயகர் சர் லின்சி ஹோயில் சேர்க்கப்படவில்லை, அவர் சில ஊடக நிறுவனங்களால் தொழிற்கட்சி இருக்கையில் சேர்க்கப்பட்டார். சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சபாநாயகர் அவர்களுடன் இணைந்த கட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கிறார்.
  2. வடக்கு அயர்லாந்தில், இங்கிலாந்தின் மற்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தேர்தல்களில் வாக்காளர் அறிமுக அட்டை தேவைப்பட்டது.
  1. சின் பெயின் உறுப்பினர்கள் நடைமுறையில் இருக்கையில் அமர்வதில்லை, சபாநாயகர் மற்றும் பிரதிநிதிகள் வாக்களிக்காத நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை நடைமுறையில் சற்றுக் குறைவாகவே உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Government majority". Institute for Government. 20 December 2019. Archived from the original on 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 4 July 2024.
  2. "General Election 2024". Sky News. Archived from the original on 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  3. "UK general election results live: Labour set for landslide as results come in across country". BBC News. 4 July 2024. Archived from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் 4 July 2024.
  4. Stacey, Kiran (2024-07-05). "Senior Labour figures admit stance on Gaza cost party seats" (in en-GB). தி கார்டியன். https://www.theguardian.com/politics/article/2024/jul/05/labour-loses-three-seats-to-pro-palestinian-candidates. 
  5. "Former Prime Minister Liz Truss loses seat in U.K. election". Axios. 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  6. "Rishi Sunak apologises after historic Tory defeat". BBC News. 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  7. "One in five voters say they are voting tactically at the 2024 general election". YouGov. 1 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  8. "Historic firsts from the 2024 general election in numbers and charts". Sky News. Archived from the original on 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  9. ""Labour to form new British government after election landslide"". Courthouse News Service. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  10. Walker, Peter (20 February 2024). "Another Canada 93? Tory Sunak critics fear extinction-level election result". The Guardian இம் மூலத்தில் இருந்து 15 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240615124840/https://amp.theguardian.com/politics/2024/feb/20/canada-93-tory-sunak-critics-extinction-level-election-result. 
  11. Hunt, Wayne (1 June 2024). "Can the Tories avoid the fate of Canada's Conservatives?". The Spectator இம் மூலத்தில் இருந்து 14 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240614045916/https://www.spectator.co.uk/article/can-the-tories-avoid-the-fate-of-canadas-conservatives/. 
  12. "Boris Johnson pushes for power to call election at any time". BBC News. 12 May 2021. Archived from the original on 1 January 2022. பார்க்கப்பட்ட நாள் 1 January 2022. The government has set in motion its plan for prime ministers to regain the power to call general elections whenever they like.

வெளி இணைப்புகள்

தொகு