இசுக்கொட்டிய தேசியக் கட்சி
இசுக்காட்டிய தேசியக் கட்சி (Scottish National Party, SNP, சுகாத்து: Scots Naitional Pairtie) என்பது இசுக்கொட்லாந்தின் தேசியவாத,[13] சமூக-சனநாயக,[14][15][16] அரசியல் கட்சி ஆகும். ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இசுக்கொட்லாந்தின் விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுத்து வருகிறது.[17][18] ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் கன்சர்வேட்டிவ், தொழிற் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி இதுவாகும். இசுக்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் கட்சியாகவும் விளங்குகின்றது. இக்கட்சியின் தலைவராக இசுக்கொட்லாந்தின் தற்போதைய முதல்வர் நிக்கொலா ஸ்டர்ஜன் இருந்து வருகிறார்.
இசுக்காட்டிய தேசியக் கட்சி Scottish National Party | |
---|---|
Pàrtaidh Nàiseanta na h-Alba | |
தலைவர் | நிக்கொலா ஸ்டர்ஜன் |
துணைத் தலைவர் | ஸ்டுவர்ட் ஒசீ |
வெஸ்ட்மின்ஸ்டர் குழுத் தலைவர் | ஆங்கசு ராபர்ட்சன் |
தொடக்கம் | 1934 |
இணைந்தவை | இசுக்கொட்லாந்து தேசியக் கட்சி, இசுக்கொட்டியக் கட்சி |
தலைமையகம் | எடின்பரோ |
மாணவர் அமைப்பு | மாணவ தேசியவாதிகளின் கூட்டு |
இளைஞர் அமைப்பு | விடுதலைக்கான இளம் இசுக்காட்டியர்கள் |
உறுப்பினர் | 115,000+[1] |
கொள்கை | இசுக்கொட்டிய தேசியம்[2][3] குடிமைத் தேசியம்[4][5] சமூக சனநாயகம்[6][7] |
அரசியல் நிலைப்பாடு | மத்திய-இடதுசாரி[8][9][10][11] |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய சுயாதீனக் கூட்டமைப்பு |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | பசுமை-ஐரோப்பிய சுயாதீனக் கூட்டமைப்பு |
நிறங்கள் | மஞ்சள், கருப்பு |
மக்களவையில் இசுக்கொட்டியத் தொகுதிகள் | 56 / 59
|
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இசுக்கொட்டியத் தொகுதிகள் | 2 / 6
|
இசுக்கொட்டிய நாடாளுமன்றம் | 64 / 129
|
இசுக்கொட்லாந்தின் உள்ளூராட்சி அவைகள்[12] | 422 / 1,223
|
இணையதளம் | |
www.snp.org |
1934 ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து தேசியக் கட்சியும், இசுக்கொட்டியக் கட்சியும் இணைந்து இக்கட்சி உருவானது. 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[19] 1999 இல் இசுக்கொட்டிய நாடாளுமன்றம் உருவானதன் பின்னர், எஸ்.என்.பி கட்சி இசுக்காட்டிய நாடாளுமன்ரத்தில் இரண்டாவது பெரிய கட்சியானது. 2007 இசுக்காட்டியத் தேர்தலில் வெற்றி பெற்று சிறுபான்மை அரசாக ஆட்சியைப் பிடித்தது. 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசை அமைத்தது.[20]
மே 2015 இன் படி, இக்கட்சியில் 115,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 64 பேர் இசுக்கொட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், 56 பேர் மக்களவை உறுப்பினர்கள், 424 பேர் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஆவர்.[1][21][22] இக்கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2 பேரையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Murrell, Peter. "Peter Murrell". Twitter. Twitter. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ Hassan, Gerry (2009), The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 5, 9
- ↑ Christopher Harvie (2004). Scotland and Nationalism: Scottish Society and Politics, 1707 to the Present. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-32724-4.
- ↑ Mitchell, James; Bennie, Lynn; Johns, Rob (2012), The Scottish National Party: Transition to Power, Oxford University Press, pp. 107–116
- ↑ Keating, Michael (2009), "Nationalist Movements in Comparative Perspective", The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 214–217
- ↑ Wolfram Nordsieck. "Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck".
- ↑ Hassan, Gerry (2009), The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 4–5
- ↑ Robert Garner; Richard Kelly (15 June 1998). British Political Parties Today. Manchester University Press. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-5105-0.
- ↑ Ari-Veikko Anttiroiko; Matti Mälkiä (2007). Encyclopedia of Digital Government. Idea Group Inc (IGI). p. 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59140-790-4. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
- ↑ Josep M. Colomer (25 July 2008). Political Institutions in Europe. Routledge. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-07354-2.
- ↑ Ibpus.com; International Business Publications, USA (1 January 2012). Scotland Business Law Handbook: Strategic Information and Laws. Int'l Business Publications. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4387-7095-6.
{{cite book}}
:|author2=
has generic name (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "http://www.gwydir.demon.co.uk/uklocalgov/makeup.htm". Gwydir.demon.co.uk. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 1 அக். 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|title=
- ↑ Amir Abedi (2004). Anti-political Establishment Parties: A Comparative Analysis. Psychology Press. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-31961-4.
- ↑ "About Us". Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2015-05-09.
- ↑ Eve Hepburn (18 October 2013). New Challenges for Stateless Nationalist and Regionalist Parties. Routledge. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-96596-1.
- ↑ Bob Lingard (24 July 2013). Politics, Policies and Pedagogies in Education: The Selected Works of Bob Lingard. Routledge. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-01998-3.
- ↑ Frans Schrijver (2006). Regionalism After Regionalisation: Spain, France and the United Kingdom. Amsterdam University Press. p. 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5629-428-1.
- ↑ Michael O'Neill (22 May 2014). Devolution and British Politics. Routledge. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-87365-5.
- ↑ Heisey, Monica. "Making the case for an "aye" in Scotland". Queen's Alumni Review. Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Carrell, Severin (11 மே 2011). "MSPs sworn in at Holyrood after SNP landslide". London: guardian.co.uk. http://www.guardian.co.uk/politics/2011/may/11/scottish-msps-sworn-in-holyrood. பார்த்த நாள்: 12 சூலை 2011.
- ↑ "Current State of the Parties". Scottish Parliament. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Vote 2012: Scotland - Councils". BBC News.
வெளி இணைப்புகள்
தொகு- Scottish National Party - Official website