ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை

மக்கள் அவை (House of Commons) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைத் தொகுதிகளின் சார்பாளர்களாக தேர்தல்களில் முதலில் வந்தவர் வெற்றி என்ற முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவி வகிக்கின்றனர

பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின்
ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் அவை
55வது நாடாளுமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
அவைத்தலைவர்
ஜான் பெர்கோ
சூன் 22, 2009 முதல்
ஆளும் கட்சித் தலைவர்
ஆன்ட்ரூ லான்சிலெ, கன்சர்வேட்டிவ்
செப்டம்பர் 4, 2012 முதல்
நிழல் தலைவர்
ஆஞ்செலா ஈகிள், தொழிற்கட்சி
அக்டோபர் 7, 2011 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்650
அரசியல் குழுக்கள்
மேன்மைதாங்கிய அரசியின் அரசு

அலுவல்முறை எதிர்க்கட்சி

மற்ற எதிர்கட்சிகள்

  •      டெமக்கிராடிக் யூனியனிஸ்ட் கட்சி (8)
  •      இசுகாட்டிஷ் தேசியக் கட்சி (6)
  •      சின் பெய்ன் (4, புறக்கணிப்பு)
  •      பிளைடு சிம்ரு (3)
  •      சோசியல் டெமக்கிராட்டிக் தொழிற்கட்சி (3)
  •      சுயேட்சை (3)
  •      வடக்கு அயர்லாந்தின் அல்லையன்சு கட்சி (1)
  •      பசுமைக் கட்சி (1)
  •      ரெஸ்பெக்ட் கட்சி (1)

அவைத்தலைவர்

  •      அவைத்தலைவரும் துணை அவைத்தலைவர்களும் (4)
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
சம்பளம்ஆண்டுக்கு £65,738
தேர்தல்கள்
முதலாவதாக வந்தவர் வெற்றி
அண்மைய தேர்தல்
மே 6, 2010
அடுத்த தேர்தல்
மே 7, 2015
மறுவரையறைBoundary Commissions
கூடும் இடம்
மக்களவை கூடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்
இலண்டன்
ஐக்கிய இராச்சியம்
வலைத்தளம்
காமன்சு அவை

1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.

வெளி இணைப்புகள்

தொகு