லிஸ் டிரஸ்
மேரி எலிசபெத் டிரஸ் (Mary Elizabeth Truss, பிறப்பு: 26 சூலை 1975) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2022 செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 25 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பதவியில் இருந்தார். 2022 அக்டோபர் 20 அன்று, மொத்தம் 45 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், நாட்டின் பொருளாதார, அரசியல் நெருக்கடி அதிகரித்திருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.[1][2][3] 49 நாட்கள் மட்டும் பதவியில் இருந்த இவர், ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரி ஆவார்.[4] 2021 முதல் 2022 வரை வெளியுறவு செயலாளராக பணியாற்றினார். 2010 முதல் தென்மேற்கு நோர்ஃபோக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
எலிசபெத் டிரஸ் | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 6 செப்டம்பர் 2022 – 25 October 2022 | |
ஆட்சியாளர்கள் | எலிசபெத் II சார்லசு III |
முன்னையவர் | போரிஸ் ஜான்சன் |
பின்னவர் | இரிசி சுனக்கு |
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் | |
பதவியில் 5 செப்டம்பர் 2022 – 24 அக்டோபர் 2022 | |
முன்னையவர் | போரிஸ் ஜான்சன் |
பின்னவர் | இரிசி சுனக்கு |
வெளியுறவு, பொதுநலவாய, அபிவிருத்தி விவகார செயலாளர் | |
பதவியில் 15 செப்டம்பர் 2021 – 6 செப்டம்பர் 2022 | |
பிரதமர் | போரிஸ் ஜான்சன் |
முன்னையவர் | டொமினிக் ராப் |
பின்னவர் | ஜேம்ஸ் கிளெவர்லி |
பெண்கள் மற்றும் சமத்துவத்துறை அமைச்சர் | |
பதவியில் 10 செப்டம்பர் 2019 – 6 செப்டம்பர் 2022 | |
பிரதமர் | போரிஸ் ஜான்சன் |
முன்னையவர் | ஆம்பர் ரட் |
பின்னவர் | நாதிம் சாகாவி |
| |
பதவியில் 24 சூலை 2019 – 15 செப்டம்பர் 2021 | |
பிரதமர் | போரிஸ் ஜான்சன் |
முன்னையவர் | லியாம் பொக்சு |
பின்னவர் | ஆன்-மரீ திரெவெலியான் |
கருவூல முதன்மை செயலாளர் | |
பதவியில் 11 சூன் 2017 – 24 சூலை 2019 | |
பிரதமர் | தெரசா மே |
முன்னையவர் | டேவிட் கோக் |
பின்னவர் | இரிசி சுனக்கு |
| |
பதவியில் 14 சூலை 2016 – 11 சூன் 2017 | |
பிரதமர் | தெரசா மே |
முன்னையவர் | மைக்கேல் கோவ் |
பின்னவர் | டேவிட் லிடிங்டன் |
சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான செயலாளர் | |
பதவியில் 15 சூலை 2014 – 14 சூலை 2016 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | ஒவென் பட்டர்சன் |
பின்னவர் | ஆன்ட்ரியா லீட்சொம் |
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்விக்கான நாடாளுமன்றத் துணைச் செயலாளர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2012 – 15 சூலை 2014 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
முன்னையவர் | சேரா டீத்தர் |
பின்னவர் | சாம் கைமா |
தென்மேற்கு நோர்ஃபோக் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 மே 2010 | |
முன்னையவர் | கிறித்தோபர் பிரேசர் |
பெரும்பான்மை | 26,195 (50.9%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேரி எலிசபெத் டிரஸ் 26 சூலை 1975 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் (1996 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | லிபரல் சனநாயகவாதிகள் (1996 வரை) |
துணைவர் | இயூ ஓ'லியரி (தி. 2000) |
பிள்ளைகள் | 2 |
கல்வி | மேர்ட்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு (இளங்கலை) |
இவர் வெளியுறவு செயலாளராகவும், பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சராகவும் பணியாற்றினார்.[5] கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இவர், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய பிரதமர்களின் தலைமையில் பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் பொருளாதார ரீதியாக புதிய தாராளவாத மற்றும் சமூக ரீதியாக பழமைவாத கருத்துகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.[6][7][8]
ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் இளங்கலை பயின்ற போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரல் டெமாக்ராட்ஸின் தலைவராக இருந்தார். 1996 இல் பட்டம் பெற்ற பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார்.[9] இவர் ஷெல் மற்றும் கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதன்பிறகு ரிஃபார்ம் எனப்படும் திங்க் டேங்க்கில் துணை இயக்குநராக இருந்தார். 2010 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்று டிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒரு பின்வரிசை உறுப்பினராக இருந்த இவர் குழந்தை பராமரிப்பு, கணிதக் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.[10] இவர் பிரீ எண்டர்பிரைஸ் குரூப் ஆஃப் கன்சர்வேடிவ் எம்.பி. என்ற அமைப்பை நிறுவினார். மேலும் ஆஃப்டர் தி கோலிஷன் (2011) மற்றும் பிரிட்டானியா அன்செயின்ட் (2012) உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை தானாகவும் இணை ஆசிரியராகவும் எழுதியுள்ளார்.
2012 முதல் 2014 வரை குழந்தைகள் மற்றும் கல்விக்கான நாடாளுமன்ற துணைச் செயலாளராக டிரஸ் பணியாற்றினார்.[11] 2014 அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளராக பிரதமர் டேவிட் கேமரூனால் நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என்ற பிரிட்டன் ஸ்ட்ராங்கர் இன் யூரோப் பிரச்சாரத்தின் ஆதரவாளராக இருந்தபோதிலும், வாக்கெடுப்பின் முடிவு வெளிவந்த பிறகு பிரெக்ஸிட்டை ஆதரித்தார்.[12] ஜூலை 2016இல் கேமரூன் பதவி விலகிய பிறகு, இவர் நீதித்துறைக்கான அரசு செயலாளராகவும், உயராட்சித் தலைவராகவும் பிரதமர் தெரசா மேவால் நியமிக்கப்பட்டார்.[13][14][15] 2017 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, டிரஸ் கருவூலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[16] 2019இல் மே பதவி விலகிய பிறகு, கன்சர்வேடிவ் தலைவராகப் போட்டியிட்ட போரிஸ் ஜான்சனை டிரஸ் ஆதரித்தார். போரிஸ் பிரதமரானதும், பன்னாட்டு வர்த்தகத்திற்கான செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் டிரஸ்ஸை நியமித்தார், பின்னர் 2021இல் டொமினிக் ராப்க்கு மாற்றாக வெளியுறவு செயலாளராக டிரஸ்ஸை நியமித்தார். 19 டிசம்பர் 2021 அன்று லார்ட் பிரோஸ்ட்க்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் EU-UK பார்ட்னர்ஷிப் கவுன்சிலின் UK தலைவருடன் அரசாங்கத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளராக டிரஸ் நியமிக்கப்பட்டார்.[17]
போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடவிருப்பதாக 2022 சூலை 10 இல் டிரசு அறிவித்தார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் நாளிலேயே வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தார், "தேர்தலில் கன்சர்வேடிவ்வாகப் போராடி கன்சர்வேடிவ் ஆக ஆட்சி செய்வேன்" என்று கூறினார், மேலும் "வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்கு மக்களுக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுப்பேன்" என்றும் கூறினார்.[18][19] 2022 சூலை 20 அன்று, டிரசும் முன்னாள் கருவூலக் காப்பாளர் இரிசி சுனக்கும் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இறுதித் தலைமை வாக்கெடுப்புக்கு வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி வாக்கெடுப்பில் சுனக்கு 137 வாக்குகள் பெற்று முதலிடத்தையும், டிரசு 113 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திதையும் பிடித்தனர்.[20][21] பின்னர் கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, டிரசு 57.4% வாக்குகள் பெற்று கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21]
டிரசு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக மகாராணி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எலிசபெத் மகாராணி முன்னிலையில் பதவியேற்றார். வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு மத்தியில், டிரசின் அரசாங்கம், வீடுகள், வணிகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் விலை உத்தரவாதத்தை அறிவித்தது. இது நாட்டில் நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்து, அரசாங்கம் பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து, பெரும்பாலான சலூகைகள் மீளப்பெறப்பட்டன. 2022 அக்டோபர் 20 அன்று, நிதி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், 45 நாட்கள் பதவியில் இருந்த பிறகு, பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக டிரசு அறிவித்தார், இது ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரியாக இவர் வரலாற்றில் இடம்பெற்றார்.[22][23]
மேற்கோள்கள்
தொகு- ↑ Morris, Sophie. "A goodbye speech and a meeting with the King: Here's what's happening today - and when". Sky News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
- ↑ "Liz Truss resigns as prime minister" (in en-GB). Sky News. 20 October 2022. https://news.sky.com/story/liz-truss-to-resign-as-prime-minister-sky-news-understands-12723236.
- ↑ Landler, Mark; Castle, Stephen (20 October 2022). "Conservatives Scramble to Replace Liz Truss as U.K. Leader" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2022/10/20/world/liz-truss-news.
- ↑ "Liz Truss resigns, Rishi Sunak to become U.K. prime minister" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/world/2022/10/25/rishi-sunak-liz-truss-resigns-king-charles/.
- ↑ "Norfolk MP Liz Truss made international trade secretary". 24 July 2019. Archived from the original on 24 July 2019. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
- ↑ "PROFILE: Liz Truss, foreign secretary and Conservative Party leadership candidate". www.aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
- ↑ Foundation, Thomson Reuters. "What are the UK Prime Minister hopefuls' stances on LGBTQ+ rights?". news.trust.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ Mackinnon, Amy. "Liz Truss, True Believer". Foreign Policy (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
- ↑ "BBC Democracy Live: Elizabeth Truss MP". BBC News இம் மூலத்தில் இருந்து 17 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140717090407/http://news.bbc.co.uk/democracylive/hi/representatives/profiles/40370.stm.
- ↑ Anushka Asthana (9 June 2012). "The lady's for turning, right from CND to Conservative". தி டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 14 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160314142729/http://www.thetimes.co.uk/tto/news/politics/article3440383.ece.
- ↑ "Chief Secretary to the Treasury: The Rt Hon Elizabeth Truss MP". gov.uk. 2012. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ Chambre, Agnes (11 October 2017). "Liz Truss says she would now back Brexit". Politics Home. Archived from the original on 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ Bowcott, Owen (21 July 2016). "Liz Truss sworn in as first ever female lord chancellor". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 13 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201013231141/https://www.theguardian.com/politics/2016/jul/21/liz-truss-first-ever-female-lord-chancellor-justice-secretary.
- ↑ Griffiths, Emma (14 July 2016). "Cabinet: Leadsom in, Gove out, Hunt stays: Round-up of today's news". BBC News இம் மூலத்தில் இருந்து 14 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160714223950/http://www.bbc.co.uk/news/live/uk-politics-36570120.
- ↑ Gerber, Louis (14 July 2016). "Liz Truss is the new Secretary of Justice". Cosmopolis (Switzerland) இம் மூலத்தில் இருந்து 19 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220519024706/https://cosmopolis.ch/liz-truss-is-the-new-secretary-of-justice/.
- ↑ "Theresa May carries out Cabinet reshuffle". BBC News. 11 June 2017 இம் மூலத்தில் இருந்து 11 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170611153102/http://www.bbc.co.uk/news/uk-politics-40241229.
- ↑ "Ministerial appointments: 19 December 2021". GOV.UK. Archived from the original on 28 December 2021. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
- ↑ Walker, Peter (10 July 2022). "Foreign Secretary Liz Truss joins Tory leadership race". BBC News இம் மூலத்தில் இருந்து 12 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220712022958/https://www.bbc.co.uk/news/uk-politics-62115709.
- ↑ Riley-Smith, Ben (10 July 2022). "Liz Truss launches leadership bid with tax cut challenge to Rishi Sunak". The Telegraph இம் மூலத்தில் இருந்து 12 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220712020400/https://www.telegraph.co.uk/politics/2022/07/10/liz-truss-launches-leadership-bid-tax-cut-challenge-rishi-sunak/.
- ↑ "Tory leadership election: full results after round five". The Guardian. 21 July 2022 இம் மூலத்தில் இருந்து 6 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220806220641/https://www.theguardian.com/politics/ng-interactive/2022/jul/18/tory-leadership-election-full-results.
- ↑ 21.0 21.1 "How Liz Truss won the Conservative leadership race". BBC News. 5 September 2022 இம் மூலத்தில் இருந்து 5 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220905091715/https://www.bbc.co.uk/news/uk-politics-60037657.
- ↑ "Who is Liz Truss? Political journey of UK's shortest-serving prime minister". BBC News. 20 October 2022. https://www.bbc.com/news/uk-politics-63331087.
- ↑ Culbertson, Alix (21 October 2022). "Liz Truss resigns - and will become shortest-serving prime minister in British history" (in en). Sky News. https://news.sky.com/story/liz-truss-to-resign-as-prime-minister-12723236.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Profile at ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
- Contributions in Parliament at Hansard
- Voting record at Public Whip
- Record in Parliament at TheyWorkForYou
- Appearances on C-SPAN