தி டைம்சு (தி டைம்ஸ்; The Times) என்பது 1785 ஆம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஆகும். உலக அளவில் 'டைம்ஸ்' என்ற வார்த்தையை தாங்கி வரும் நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் டைம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த தொடங்கியது இந்த நாளிதழை தொடர்ந்துதான்.

தி டைம்ஸ்
வகைநாளிதழ்
வடிவம்காம்பாக்ட் (திங்கள்–சனி)
பிராட்ஷீட் (ஞாயிறு)
உரிமையாளர்(கள்)நியூஸ் கார்ப்பரேஷன்
ஆசிரியர்ஜேம்ஸ் ஹார்டிங்க்
நிறுவியதுஜனவரி 1, 1785
அரசியல் சார்புமிதவாதம் பழமைவாதம்
தலைமையகம்வாப்பிங்க், லண்டன்
விற்பனை502,436 (மார்ச் 2010)[1]
ISSN0140-0460
இணையத்தளம்www.thetimes.co.uk

வரலாறு

தொகு

தோற்றம்

தொகு

தி டெய்லி யுனிவர்சல் ரெஜிஸ்டர் என்ற பெயரில் ஜான் வால்டர் என்பவரால் 1785 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் தான் தோற்றுவித்த நாளிதழிலேயே எடிட்டராக பணியாற்றிய வால்டர் 1788 ஆம் ஆண்டு தனது நாளிதழின் பெயரை 'தி டைம்ஸ்' என்று மாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை அதே பெயரிலே வெளிவருகிறது.

வடிவமைப்பு

தொகு

ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து பிராட் சீட் என்ற வடிவமைப்பில் வெளிவந்த நாளிதழ் 2004 ஆம் ஆண்டில் டேபுளாய்டு உருவமைப்பிற்கு மாறியது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_டைம்ஸ்&oldid=3397642" இலிருந்து மீள்விக்கப்பட்டது