இரிசி சுனக்கு

இரிசி சுனக்கு (Rishi Sunak, பிறப்பு:12 மே 1980)[1] ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2022 அக்டோபர் 25 முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், 2022 அக்டோபர் 24 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் மக்களவையில் 2015 முதல் ஓர் உறுப்பினராகவும், நான்கு முக்கிய துறைகளில் ஒன்றான கருவூலத்துறையின் தலைவராகவும் 2020 முதல் 2022 வரை இருந்தவர்.[2]

இரிசி சுனக்கு
2020-இல் ரிசி சுனக்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
25 அக்டோபர் 2022
ஆட்சியாளர்மூன்றாம் சார்லசு
Deputyடொமினிக்கு இராப்பு
ஆலிவர் டவுடன்
Succeedingலிஸ் டிரஸ்
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2022
முன்னையவர்லிஸ் டிரஸ்
நிதித்துறை அமைச்சர்
பதவியில்
13 பிப்ரவரி 2020 – 5 சூலை 2022
பிரதமர்போரிஸ் ஜான்சன்
முன்னையவர்சஜித் ஜாவேத்
பின்னவர்நாதிம் சாகாவி
நிதித்துறை தலைமைச் செயலர்
பதவியில்
24 சூலை 2019 – 13 பிப்ரவரி 2020
பிரதமர்போரிஸ் ஜான்சன்
முன்னையவர்லிஸ் டிரஸ்
பின்னவர்ஸ்டீவ் பர்க்லே
உள்ளாட்சி துறை அமைச்சர்
பதவியில்
9 சனவரி 2018 – 24 சூலை 2019
பிரதமர்தெரசா மே
முன்னையவர்மெர்கஸ் ஜோன்ஸ்
பின்னவர்டியூக் ஹால்
ரிச்மண்ட் யார்க் தொகுதியின்
ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2015
முன்னையவர்வில்லியம் ஹக்
பின்னவர்பதவியில் உள்ளார்
பெரும்பான்மை27,210 (47.2%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மே 1980 (1980-05-12) (அகவை 44)
சவுத்தாம்டன், இங்கிலாந்து
அரசியல் கட்சிகன்சர்வேடிவ் கட்சி
துணைவர்
அக்சதா மூர்த்தி (தி. 2009)
பிள்ளைகள்2
உறவினர்கள்நா. ரா. நாராயணமூர்த்தி (மாமனார்)
சுதா மூர்த்தி (மாமியார்)
கல்விவின்செஸ்டர் கல்லூரி
முன்னாள் கல்லூரிலிங்கன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு (தத்துவம், அரசியல் மற்றும் வணிகவியல்)
ஸ்டான்போர்டு வணிகப் பள்ளி (எம் பி ஏ)
வேலை
  • அரசியல்வாதி
  • வணிகர்
  • முன்னாள் முதலீட்டு பகுப்பாய்வாளர்
இணையத்தளம்Personal website

இவர் ஐக்கிய இராச்சியத்தில் சவுத்தாம்டனில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960களில் குடியேறிய இந்திய (பஞ்சாபு) வமிசாவளி பெற்றோர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[3][4][5] வின்செசுட்டர் கல்லூரியில் படித்தார், பிறகு ஆக்குசுபோர்தில் இலிங்கன் கல்லூரியில் மெய்யியல், அரசியல் பொருளாதரம் ஆகிய துறைகளில் படித்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் புல்பிரைட்டு புலமைப்பரிசில் பெற்று முதுகலை வணிக மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுது தன் எதிர்கால மனைவியாகிய அட்சதா மூர்த்தியைச் சந்தித்தார். அட்சதா இந்தியத் தொழில் அதிபரும், இன்போசிசு நிறுவனருமான நா. ரா. நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். படிப்பு முடிந்ததும், சுனக்கு கோல்டுமன் சாக்சு நிறுவனத்தில் கூடுதல் ஈட்டம் தரும் பாதுகாப்பு முதலீட்டுத் துறை நிறுவனங்களில் பணியாற்றினார். சுனக்கும் அவர் மனைவி அட்சதா மூர்த்தியும் ஐக்கிய இராச்சியத்தில் 222 ஆவது பெரிய பணக்காரர், அவர்களின் மொத்த மதிப்பு £730 மில்லியன் என்று கணக்கிட்டிருக்கின்றார்கள்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Paul, Anna (5 September 2022). "Find out more about Rishi Sunak as the Tory Party leader race concludes". Metro. பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
  2. "The Rt Hon Rishi Sunak MP". GOV.UK. பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
  3. Rishi Sunak. Store Norske Leksikon.
  4. Rishi Sunak. Munzinger-Archiv.
  5. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இரிசி சுனக்கு.
  6. Durbin, Adam (20 May 2022). "Rishi Sunak and Akshata Murthy make Sunday Times Rich List". BBC News. Archived from the original on 9 July 2022. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிசி_சுனக்கு&oldid=3858728" இலிருந்து மீள்விக்கப்பட்டது