இசுரேல்-ஹமாஸ் போர்

2023 இசுரேல்-ஹமாஸ் போர் என்பது இசுரேலுக்கும் ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7 அன்றிலிருந்து நடைபெற்றுவரும் போரைக் குறிக்கும். மேற்குக் கரையிலும், இசுரேல்-லெபனான் எல்லையிலும் நடக்கும் மோதல்களும் இந்தப் போர் நடவடிக்கைகளில் அடங்கும்.

2023 இசுரேல்-ஹமாஸ் போர்
அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி
Map of the Gaza Strip and part of Israel. The part of Israel surrounding the Strip is marked as evacuated. Some parts of the Strip is marked as under Israeli control, and the remainder is marked as under Hamas control.
     பாலத்தீனியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாக்கரை

     காசாக்கரையினுள் இசுரேலிய இராணுவத்தின் தற்போதைய ஊடுருவல்

     இசுரேலியப் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலப்பகுதிகள்
 
பாலத்தீனியப் போராளிகளின் அதிகபட்ச ஊடுருவல்
 
பொதுமக்களை வெளியேறுமாறு இசுரேலால் கட்டளையிடப்பட்டுள்ள காசாக்கரையின் நிலப்பகுதிகள்


நாள் 7 அக்டோபர் 2023 – இப்போது வரை
(1 ஆண்டு, 2 மாதம்-கள், 1 வாரம் and 3 நாள்-கள்)
இடம் இசுரேல், பாலத்தீனம், லெபனான் (சிரியாவிலும் ஈராக்கிலும் சிறுசிறு சண்டைகள்)
முடிவு
  • 7 அக்டோபர்: பாலத்தீனியப் போராளி இயக்கமான ஹமாஸ், காசா-இசுரேல் எல்லையில் இசுரேல் நாட்டில் அமைந்துள்ள வேலியை சேதப்படுத்தி இசுரேலின் தென் மாவட்டத்தின் வழியே நுழைந்து தாக்கியது
  • 9 அக்டோபர்: காசாக்கரையில் வான்வழித் தாக்குதல்களை இசுரேலிய இராணுவம் நடத்தியதோடு, காசாக்கரைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள், வளங்களை இசுரேல் துண்டித்தது
  • 13 அக்டோபர்: காசா நகரம் உள்ளிட்ட வடக்கு காசா பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென இசுரேல் எச்சரிக்கை விடுத்தது
  • 27 அக்டோபர்: இசுரேல் இராணுவம் வடக்கு காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து, இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது
  • காசா நகரம் இசுரேல் இராவணுவத்தால் முற்றுகையிடப்பட்டது
  • 24-30 நவம்பர்: இசுரேல்-ஹமாஸ் இடையேயான 4 நாள் போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 7 நாட்களாக நீட்டிக்கப்பட்டது
இழப்புகள்
காசாக்கரை
  • 18,608+ பேர் கொல்லப்பட்டனர்[1][2]
  • 50,594+ பேர் காயமடைந்தனர்[1][2]
  • 7,780+ பேரை காணவில்லை

இசுரேல் நாட்டிற்குள்:

  • 1,000+ போராளிகள் கொல்லப்பட்டனர்[3]
  • 200 போராளிகள் உயிருடன் பிடிக்கப்பட்டனர்

மேற்குக் கரை

  • 282+ பேர் கொல்லப்பட்டனர்[4]
  • 3,367 பேர் காயமடைந்தனர்[5]

லெபனான்

  • 132 பேர் கொல்லப்பட்டனர்[6]

சிரியா

  • 38 பேர் கொல்லப்பட்டனர்

எகிப்து

  • 7 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்
இசுரேல்
  • 1,394+ பேர் கொல்லப்பட்டனர்[a][11]
  • 8,740+ பேர் காயமடைந்தனர்[12]
  • 248+ பேர் கடத்தப்பட்டனர்[b][16]
  • 7 பேரை காணவில்லை[17]
1,900,000 பாலத்தீனியர்கள் காசாக்கரையினுள் இடம்பெயர்ந்துள்ளனர்[c]

500,000 இசுரேலியர்கள் இசுரேலுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர்[19]
55,000 பேர் லெபனானுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர்

அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்கள் காசாக் கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தியது.[20] காசாக்கரையிலிருந்து இசுரேல் நாட்டிற்குள் ஏராளமான தெறிப்புகள் ஏவப்பட்டன. சுமார் 3,000 போராளிகள் காசா-இசுரேல் எல்லையிலுள்ள வேலியை சேதப்படுத்தி இசுரேலிலுக்குள் தென் மாவட்டத்தின் வழியே நுழைந்தனர். இசுரேல் நாட்டின் இராணுவ கட்டமைப்புகள், பொதுமக்கள் வாழும் பகுதிகள் ஆகியன தாக்குதல்களுக்கு உள்ளாயின. ரீ'இம் எனுமிடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான கொலைத் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதல்களின் போதும், அதனைத் தொடர்ந்து இசுரேல் இராணுவம் நடத்திய பதில் தாக்குதல்களாலும் சுமார் 800 பொதுமக்களும் 200 இசுரேல் இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.[21][22] இசுரேல் குடிமக்கள், வெளிநாட்டினர் என சுமார் 240 பேர் பிணையாளர்களாக காசாக்கரையினுள் கொண்டு செல்லப்பட்டனர்.[23]. அக்டோபர் 11 வரை, சுமார் 44 நாடுகள் இத்தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் எனப் பெயரிட்டு கண்டனம் தெரிவித்திருந்தன; மற்ற நாடுகள், இசுரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாலத்தீனியர்களுக்கான நிலப்பகுதிகளை இசுரேல் ஆக்கிரமித்துள்ளதையும் குற்றஞ்சாட்டின.[24][25] காசாக்கரை மீதான தடைகள், பாலத்தீனிய நிலப்பகுதிகளில் இசுரேலிய மக்களை சட்டத்திற்குப் புறம்பாக குடியேற்றுதல், குடியேறிய இசுரேலியர்களால் ஏற்படும் வன்முறை, அண்மையக் காலப் பிரச்சனைகள் ஆகியவற்றின காரணமாக தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அறிவித்தது.[26][27][28][29] ஹமாஸ் தீவிரவாதிகளை இசுரேல் பகுதிகளிலிருந்து வெளியேற்றிய பிறகு, காசாக்கரையிலுள்ள இலக்குகள் மீது மொத்தமாக சுமார் 6,000 குண்டுகளை தொடர்ந்து 6 நாட்களுக்கு இசுரேல் இராணுவம் வான்வழியே இட்டது.[30] அதன்பிறகு, காசாக்கரைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள், வளங்களை இசுரேல் துண்டித்தது. இதனைத் தொடர்ந்து, இசுரேல் இராணுவம் வடக்கு காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து, இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.[31][32]

அரபு-இசுரேல் முரண்பாட்டின் ஒரு பகுதியாக இந்தப் போர் கருதப்படுகிறது. 7 அக்டோபர் 2023 அன்று ஆபரேசன் அல்-அக்ச ஸ்டோர்ம் எனும் பெயரில் போராளி இயக்கக் குழுக்கள் காசாக்கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதலை நடத்தின.[33] இசுரேல் எதிர்த்தாக்குதலை நடத்தியபோது தனது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அயர்ன் சுவார்ட்ஸ் (இரும்பு வாட்கள்) என்பதாக பெயரிட்டது.[34]

காசா-இசுரேல் எல்லையில் இசுரேல் நாட்டில் அமைந்துள்ள வேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த ஹமாஸ் இயக்கம், எல்லையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும், இராணுவ கட்டமைப்புகளிலும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியது. 1948 ஆம் ஆண்டில் நடந்த அரபு-இசுரேல் போருக்குப் பிறகு இசுரேலின் எல்லைக்குட்பட்டப் பகுதியில் நடக்கும் முதலாவது நேரடித் தாக்குதல் இதுவாகும்.[35][36] காலை நேரத்தில் ஏவூர்தி மூலமாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு, இசுரேல் பகுதிக்குள் வாகனங்கள் ஊடுருவிச் சென்றன. இசுரேல் நாட்டுப் பொதுமக்கள் மீதும், இராணுவ கட்டமைப்புகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதலை மூன்றாவது பாலத்தீனியர்கள் கிளர்ச்சி என அரசியல் பார்வையாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.[37]

யோம் கிப்பூர்ப் போருக்குப் பின்னர் சரியாக 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய மோதலை போர் என இசுரேல் அலுவல்முறையில் அறிவித்துள்ளது.[38]

இழப்பு விவரங்கள்

தொகு

வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள்

தொகு

அக்டோபர் 11 அன்றைய வாசிங்டன் போஸ்ட் செய்தியின்படி, 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணவில்லை.[39]

Foreign casualties in the 2023 Israel–Hamas war
நாடு இறந்தவர்கள் கடத்தப்பட்டவர்கள் காணாமற் போனவர்கள் Ref.
  ஐக்கிய அமெரிக்கா 32[40] விவரம் தெரியவில்லை 13 [41]
  தாய்லாந்து 30 17 14 [41][42][43]
  பிரான்சு 21 விவரம் தெரியவில்லை 11 [41]
  உருசியா 19 2 7 [44]
  உக்ரைன் 19 விவரம் தெரியவில்லை 8 [45][46]
  நேபாளம் 10 17 1 [47]
  அர்கெந்தீனா 9 விவரம் தெரியவில்லை 20 [48]
  போர்த்துகல் 9 0 3 [49]
  எதியோப்பியா 7 0 0 [50]
  கனடா 6 விவரம் தெரியவில்லை 2 [41]
  ஐக்கிய இராச்சியம் 6 விவரம் தெரியவில்லை 10 [51]
  உருமேனியா 5 1 2 [52][53]
  ஆஸ்திரியா 4 விவரம் தெரியவில்லை 1 [54][55]
  சிலி 4 1 0 [56]
  சீனா 4 0 2 [41]
  பிலிப்பீன்சு 4 விவரம் தெரியவில்லை 2 [57]
  பெலருஸ் 3 விவரம் தெரியவில்லை 1 [58]
  பிரேசில் 3 விவரம் தெரியவில்லை 0 [59]
  லெபனான் 3 0 0 [60]
  துருக்கி 3 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [61]
  கொலம்பியா 2 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [62]
  பரகுவை 2 விவரம் தெரியவில்லை 2 [63]
  பெரு 2 விவரம் தெரியவில்லை 5 [41]
  தென்னாப்பிரிக்கா 2 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [64]
  சிரியா 2 0 0 [65]
  ஆத்திரேலியா 1 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [66]
  அசர்பைஜான் 1 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [41]
  கம்போடியா 1 0 0 [67]
  எசுத்தோனியா 1 0 0 [68]
  செருமனி 1 5 விவரம் தெரியவில்லை [69]
  ஒண்டுராசு 1 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [70]
  அயர்லாந்து 1 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [63][71]
  இத்தாலி 1 விவரம் தெரியவில்லை 2 [72][73]
  லாத்வியா 1 0 0 [74]
  லித்துவேனியா 1 0 0 [75]
  எசுப்பானியா 1 1 0 [76][77]
  இலங்கை 1 2 2 [78][79]
  சுவிட்சர்லாந்து 1 விவரம் தெரியவில்லை விவரம் தெரியவில்லை [80]
  டென்மார்க் 0 1 0 [81][82]
  மெக்சிக்கோ 0 2 0 [63]
  செர்பியா 0 1 0 [83]
  தன்சானியா 0 0 2 [84]
  கசக்கஸ்தான் 1 0 0 [85]

இதழியலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

தொகு

காசாவில் பணியாற்றும் 6 பாலத்தீனிய இதழியலாளர்கள் பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டனர். இதைத்தவிர, 2 இதழியலாளர்களை காணவில்லை. ஒருவர் காயமுற்றார். 2 இதழியலாளர்களின் வீடுகளும், 4 ஊடகக் கட்டிடங்களும் வான்தாக்குதல்களால் தகர்க்கப்பட்டன.[86]

இசுரேல்-லெபனான் எல்லையில், அக்டோபர் 13 அன்று இசுரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் காணொலிப் பதிவாளர் கொல்லப்பட்டார். இராய்ட்டர்சு, ஏபி செய்தி நிறுவனங்கள், அல் ஜசீரா தொலைக்காட்சி ஆகியவற்றின் 6 இதழியலாளர்கள் காயமுற்றனர்.[87]

இசுரேலில் ஒளிப்படப் பதிவாளர் ஒருவரைக் காணவில்லை. அவரின் 3 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது; மனைவி கொல்லப்பட்டார்.[88]

ஸ்கை நியூசு அரபியா தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் குழுவினை இசுரேல் காவற்துறை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. செய்தியாளரின் தலையை நோக்கி துப்பாக்கியைக் காட்டியதாகவும், வலுக்கட்டாயமாக உடையை கழற்றவைத்ததாகவும், அவ்விடத்தை விட்டு வெளியேற்றியதாகவும், நகர்பேசிகளை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.[86] அக்டோபர் 13-14 இரவில், பிபிசி அரபிக் செய்தியாளர்கள் குழுவினை இசுரேலிய காவற்துறை தடுத்து நிறுத்தியதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கப்பட்டதாகவும் பிபிசி குற்றஞ்சாட்டியது.[89][90]

உலக நாடுகளின் நிலைப்பாடு

தொகு

பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ஹமாஸ் இயக்கத்திற்கு தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.[91] இவ்வியக்கத்தின் செயல்பாடுகளை தீவிரவாதம் என குற்றஞ்சாட்டியுள்ளன.[92] பாலத்தீனியப் பகுதிகளில் இசுரேலின் ஆக்கிரமிப்புச் செயல்பாடுகளாலேயே இத்தகையப் பிரச்சினை உருவெடுத்ததாக இசுலாமிய நாடுகள் கருத்துகளை வெளியிட்டுள்ளன.[93][94] ஹமாஸ் இயக்கமும், இசுரேலும் போர்க்குற்றங்களைச் செய்வதாக பன்னாட்டு மன்னிப்பு அவை குற்றஞ்சாட்டியுள்ளது.[95] இசுரேலுக்கு இராணுவ உதவி வழங்கவிருப்பதாக ஐக்கிய அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.[96]

போர்க் குற்றங்கள்

தொகு

பாலத்தீனில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை இப்போதைய மோதலுக்கும் நீட்டிக்கப்படுவதாக அக்டோபர் 10 அன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது.[97][98]

ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கைகள்

தொகு

போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் செய்துவரும் போர்க்குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்தது.[98] இசுரேலிலும் காசாவிலும் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளின்போது, போர்க் குற்றங்கள் நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக அக்டோபர் 10 அன்று இசுரேல்-பாலத்தீனிய பிரச்சனைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உண்மையறியும் இயக்கம் கூறியது. பன்னாட்டுச் சட்டத்தை மீறியவர்களும், பொதுமக்களைத் தாக்கியவர்களும் இக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென இவ்வியக்கம் கூறியது.[99][100] ஹமாஸ் போராளிகள் பயங்கரமான குற்றங்களை நிகழ்த்தியதாக தனித்தியங்கும் ஐக்கிய நாடுகள் அவை வல்லுனர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டு அல்லலுற்று வரும் காசா மக்கள் மீது இசுரேல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதாகவும் இவ்வல்லுனர்கள் அக்டோபர் 10 அன்று கண்டனம் தெரிவித்தனர். "இதுவொரு கூட்டாக அளிக்கப்படும் தண்டனையாகும். அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்துத் தாக்கும் இந்த வன்முறைகளுக்கு எவ்வித நியாயப்படுத்துதலும் ஏற்கத்தக்கதன்று. அனைத்துலகச் சட்டத்தின்படி, இவ்வன்முறைகள் போர்க் குற்றங்களாகக் கருதப்படும்" என இந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.[101][102]

பாலத்தீனிய போராளிக் குழுக்களால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள்

தொகு

ஹமாஸ் போராளிக் குழுவும் இதர பாலத்தீனிய படைக்கலன் தாங்கிய குழுக்களும் இசுரேல் நாட்டிலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று, திரளாகக் கொன்றதாகவும் அம்மக்களில் சிலரை காசாவிற்குள் பிணயக் கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல், கண்மூடித்தான கோரத் தாக்குதல்கள், பொதுமக்களை பிணையாளிகளாக கடத்திச் செல்லுதல் ஆகியன அனைத்துலக மனிதநேய சட்டத்தின்படி, போர்க் குற்றங்களாக கருதப்படுமென இந்த கண்காணிப்பகம் அறிவித்தது.[103] இசுரேல் நாட்டின் பொதுமக்களை பாலத்தீனியப் போராளிகள் குறிவைத்துத் தாக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் பன்னாட்டு மன்னிப்பு அவையும் கூறின.[103][104]

இத்தகைய வன்முறைச் செயல்கள் போர்க் குற்றங்களாக கருதப்படும் என்றும், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் சட்ட வல்லுனர்கள் விளக்கினர்.[105][106] பாலத்தீனியக் குழுக்கள் நடத்திய தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்பதாக இசுரேலுக்கான ஐக்கிய நாடுகள் அவை தூதர் வகைப்படுத்தினார்.[107] ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் போர்க் குற்றங்களென இசுரேலைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பாகிய B'Tselem குறிப்பிட்டது.[108]

இசுரேலிய அரசால் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள்

தொகு

காசாக் கரையை முழுமையாக முற்றுகையிடுமாறு தான் ஆணையிட்டுள்ளதாக இசுரேலின் பாதுகாப்பு அமைச்சர் அக்டோபர் 9 அன்று தெரிவித்தார். அதன்படி மின்சாரம், உணவு, எரிபொருள், நீர் ஆகியன துண்டிக்கப்படுமென அறிவித்தார்.[31] காசா மீது நிகழ்த்தப்படும் சரமாரிக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், முற்றுகையும் போர்க் குற்றங்களென ஐக்கிய நாடுகள் அவைக்கான பாலத்தீனிய தூதர் அக்டோபர் 9 அன்று கூறினார்.[109] காசாவுக்கு மின்சாரம் தரக்கூடிய இசுரேலின் மின் நிலையத்தின் இயக்கமானது அக்டோபர் 11 அன்று நிறுத்தப்பட்டது.[110]

வெள்ளைப் பாஸ்பரசைப் பயன்படுத்தும் படைக்கலங்களை இசுரேலிய இராணுவம் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியது. பொதுமக்களை தேவையற்ற வகையில் வதைப்பதன் மூலமாக அனைத்துலக மனிதநேய சட்டத்தை மீறுவதாக இந்தக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.[111] பன்னாட்டு மன்னிப்பு அவையின் இடர்ப்பாடு தடய ஆய்வகம் வெள்ளைப் பாஸ்பரசைப் இசுரேலிய இராணுவம் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இதனை இசுரேலிய இராணுவம் மறுத்துள்ளது.[112][113][114][115]

பரவலான போர்க் குற்றங்களை இசுரேல் நிகழ்த்தியுள்ளதாக ஐரோப்பிய-நடுநிலக் கடல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டது. பொதுமக்கள் புழங்கும் இடங்களான பல்கலைக்கழகங்கள், மசூதி, சந்தைகள், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வீட்டுக் கட்டிடங்கள் ஆகியன நேரடித் தாக்குதலுக்கு உள்ளானதை இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. இதழியலாளர்கள் கொல்லப்படுவதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.[116][117]

வடக்கு காசாவில் வாழும் பாலத்தீனியர்கள் 24 மணிநேரத்தில் இடம்பெயர்ந்து செல்லவேண்டும் என இசுரேல் ஆணையிட்டது. இச்செயலை மானுடத்திற்கு எதிரானது என்றும் அனைத்துலக மனிதநேய சட்டத்தை மீறுதல் என்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்க்கான மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு அலுவலர் பவுலா கவிரியா பெடன்குர் குற்றஞ்சாட்டினார்.[118]

இவற்றையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Including:
    • 854 Israeli civilians[7]
    • 264 Israeli soldiers,[8] 46 police officers and 10 Shin Bet members[9][10]
    • 122 foreign or dual-nationals
  2. Including 17 Nepalis,[13] 11 Thais[14] and 2 Mexicans[15]
  3. Per the UN[18]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Reals, Tucker; Czachor, Emily Mae; Baldwin, Sarah Lynch; Breen, Kerry (11 October 2023). "Israel forms unity government as airstrikes hammer Hamas-ruled Gaza". CBS News. https://www.cbsnews.com/live-updates/israel-hamas-palestinian-war-attacks-gaza-strip/. 
  2. 2.0 2.1 "Palestine Ministry of Health". Facebook. 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  3. "1200 נרצחים ונופלים הי"ד • "תכננו לא פיגוע ונסיגה אלא כיבוש"" (in he). Channel 10. 12 October 2023. https://ch10.co.il/news/851219/. 
  4. "44 شهيدًا منذ السبت .. 9 شهداء برصاص الاحتلال في الضفة اقرأ المزيد عبر المركز الفلسطيني للإعلام". Palestine News & Info Agency. 13 October 2023. p. Arabic. https://palinfo.com/news/2023/10/13/854160/. 
  5. "الصحة: (1448) شهيداً وآلاف الجرحى في فلسطين" (in ar). amad.ps. 12 October 2023. https://www.amad.ps/ar/post/519506. 
  6. "Hezbollah fires on Israel after four members killed in shelling". Dawn. 10 October 2023. https://www.dawn.com/news/1780234/hezbollah-fires-on-israel-after-four-members-killed-in-shelling. 
  7. "IDF: 361 out of 854 bodies of civilians brought to rabbinate are identified, along with 222 soldiers". தி டைம்சு ஆப் இசுரேல். 12 October 2023. https://www.timesofisrael.com/liveblog_entry/idf-361-out-of-854-bodies-of-civilians-brought-to-rabbinate-are-identified-along-with-222-soldiers/. 
  8. "At Least 258 Israeli Soldiers Killed Since Hamas Attack: Army". Barron's. 13 October 2023. https://www.barrons.com/news/at-least-258-israeli-soldiers-killed-since-hamas-attack-army-58dfb66b. 
  9. "IDF names another 31 soldiers killed since Saturday, taking confirmed military toll to 220". தி டைம்சு ஆப் இசுரேல். 12 October 2023. https://www.timesofisrael.com/liveblog_entry/idf-names-another-31-soldiers-killed-since-saturday-taking-confirmed-military-toll-to-220/. 
  10. Fabian, Emanuel. "Authorities name 247 soldiers, 46 police officers killed in 2023 terror clashes". தி டைம்சு ஆப் இசுரேல் இம் மூலத்தில் இருந்து 8 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231008151607/https://www.timesofisrael.com/authorities-name-44-soldiers-30-police-officers-killed-in-hamas-attack/. 
  11. "Israeli death toll from Hamas shock onslaught reaches 1,300". தி டைம்சு ஆப் இசுரேல். 12 October 2023. https://www.timesofisrael.com/liveblog_entry/israeli-death-toll-from-hamas-shock-onslaught-reaches-1300/. 
  12. "Israeli death toll from Hamas attack surpasses 1,000, top military officer says". தி ஹில் (செய்தித்தாள்)]]. 10 October 2023. https://thehill.com/policy/4247805-israeli-death-toll-from-hamas-attack-surpasses-1000-top-military-officer-says/. 
  13. "At least 7 Nepali injured, 17 held captive by Hamas in Israel". India Today. 7 October 2023 இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007122157/https://www.indiatodayne.in/international/story/at-least-7-nepali-injured-17-held-captive-by-hamas-in-israel-690676-2023-10-07. 
  14. "2 Thais killed, 8 injured, 11 kidnapped in Hamas attack on Israel" (in en). Bangkok Post இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009001424/https://www.bangkokpost.com/thailand/politics/2659873. 
  15. "Two Mexican citizens believed to be held captive in Gaza". தி டைம்சு ஆப் இசுரேல் இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009001618/https://www.timesofisrael.com/liveblog_entry/two-mexican-citizens-believed-to-be-held-captive-in-gaza/. 
  16. "הערכות מעודכנות בישראל: יותר מ-1,200 נרצחו ונפלו, מספר החטופים בידי חמאס – למעלה מ-200" (in Hebrew). Ynet. 10 October 2023 இம் மூலத்தில் இருந்து 10 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231010211439/https://www.ynet.co.il/news/article/s14lrbqbp. 
  17. "Israel Believes Some of Those Missing After Hamas' Attack Will Not Be Found". Haaretz (in ஆங்கிலம்).
  18. "Gaza's desperate civilians flee or huddle in hopes of safety, as warnings of Israeli offensive mount". Associated Press. 15 October 2023. https://apnews.com/article/israel-palestinians-gaza-hamas-war-785e0eb833715354cade4694e8ccbf67. "...Juliette Touma, a spokesperson for the U.N. agency for Palestinian refugees. An estimated 1 million people have been displaced in Gaza in one week, she said." 
  19. "60,000 internal Israeli refugees, as Sderot largely evacuated". தி டைம்சு ஆப் இசுரேல். 15 October 2023.
  20. "What is Hamas? The group that rules the Gaza Strip has fought several rounds of war with Israel". Associated Press. 9 October 2023 இம் மூலத்தில் இருந்து 23 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231023140259/https://apnews.com/article/hamas-gaza-palestinian-authority-israel-war-ed7018dbaae09b81513daf3bda38109a. 
  21. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; haaretz_helo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  22. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; HDOIH என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  23. Mills, Andrew; Hassan, Ahmed Mohamed (15 November 2023). "Exclusive: Qatar seeking Israel-Hamas deal to free 50 hostages and 3-day truce". Reuters. https://www.reuters.com/world/middle-east/qatar-seeking-israel-hamas-deal-release-50-hostages-3-day-truce-sources-say-2023-11-15/. 
  24. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DixonHugoReuters என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  25. Waldo, Cleary; Epstein, Gabriel; Hilbush, Sydney (11 October 2023). "International Reactions to the Hamas Attack on Israel". PolicyWatch 3793. The Washington Institute. Archived from the original on 16 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  26. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; aj7oct-invasion என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  27. McKernan, Bethan; Michaelson, Ruth; Graham-Harrison, Emma; Kierszenbaum, Quique; Balousha, Hazem; Taha, Sufian; Sherwood, Harriet; Beaumont, Peter (14 October 2023). "Seven days of terror that shook the world and changed the Middle East". The Observer. Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 20 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231020003656/https://www.theguardian.com/world/2023/oct/14/seven-days-of-terror-that-shook-the-world-and-changed-the-middle-east. 
  28. "Hamas leader says operation 'heroic epic' in response to aggression against Al-Aqsa". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 25 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231025222138/https://www.aa.com.tr/en/middle-east/hamas-leader-says-operation-heroic-epic-in-response-to-aggression-against-al-aqsa/3010615. 
  29. Pacchiani, Luca (7 October 2023). "Hamas deputy chief anticipates hostages will be swapped for Palestinian prisoners". The Times of Israel இம் மூலத்தில் இருந்து 25 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231025222136/https://www.timesofisrael.com/hamas-deputy-chief-anticipates-hostages-will-be-swapped-for-palestinian-prisoners/. 
  30. Ganguly, Manisha; Graham-Harrison, Emma; Burke, Jason; Morresi, Elena; Kirk, Ashley; Swan, Lucy (18 October 2023). "Al-Ahli Arab hospital: piecing together what happened as Israel insists militant rocket to blame" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து 18 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231018190121/https://i.guim.co.uk/img/media/b86e8d6d4133d481c4877d845a149af7031e3660/0_105_6000_3600/master/6000.jpg?width=1900&dpr=1&s=none. 
  31. 31.0 31.1 Abu Alouf, Rushdi; Slow, Oliver (10 October 2023). "Gaza 'soon without fuel, medicine and food' – Israel authorities". BBC News இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009192127/https://www.bbc.com/news/world-middle-east-67051292.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Rushdi" defined multiple times with different content
  32. "Israel calls for evacuation of 1.1 million Palestinians in Gaza; at least 27 Americans killed". CNBC இம் மூலத்தில் இருந்து 12 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231012211959/https://www.cnbc.com/2023/10/12/israel-hamas-war-live-updates-latest-news-on-gaza.html. 
  33. Erlanger, Steven (7 October 2023). "An Attack From Gaza and an Israeli Declaration of War. Now What?" (in en-US). தி நியூயார்க் டைம்சு இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007195542/https://www.nytimes.com/2023/10/07/world/middleeast/israel-gaza-war-hamas-palestinians.html. 
  34. "IDF strikes Hamas as operation 'Iron Swords' commences". தி ஜெருசலம் போஸ்ட். 7 October 2023 இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007220630/https://www.jpost.com/breaking-news/article-762075. 
  35. Beauchamp, Zack (7 October 2023). "Why did Hamas invade Israel?" (in en) இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007185123/https://www.vox.com/2023/10/7/23907323/israel-war-hamas-attack-explained-southern-israel-gaza. 
  36. Erlanger, Steven (7 October 2023). "An Attack From Gaza and an Israeli Declaration of War. Now What?" (in en-US). த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007195542/https://www.nytimes.com/2023/10/07/world/middleeast/israel-gaza-war-hamas-palestinians.html. 
  37. Sengupta, Arjun (7 October 2023). "A Third Intifada? What we know about the latest Hamas-Israel escalation" (in en) இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007160227/https://indianexpress.com/article/explained/explained-global/third-intifada-hamas-israel-escalation-8972498/. "Some observers have referred to the latest escalation as the beginning of the "Third Intifada"." 
  38. "Israel declares war and approves 'significant' steps to retaliate for surprise attack by Hamas". அசோசியட் பிரஸ். 8 October 2023 இம் மூலத்தில் இருந்து 8 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231008051308/https://apnews.com/article/israel-palestinians-gaza-hamas-rockets-airstrikes-tel-aviv-ca7903976387cfc1e1011ce9ea805a71. 
  39. "People from 23 countries killed, missing in Israel-Hamas war: What to know". Washington Post. https://www.washingtonpost.com/world/2023/10/11/israel-hamas-war-foreign-nationals/. 
  40. "Israel-Hamas war: More airstrikes on Gaza as aid remains stuck in Egypt; Israeli troops told to "be ready" to invade". www.cbsnews.com. 19 October 2023.
  41. 41.0 41.1 41.2 41.3 41.4 41.5 41.6 "Foreigners killed, abducted or missing after Hamas attack". France 24. 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  42. Saksornchai, Jintamas; Gomez, Jim (13 October 2023). "Thai and Filipino workers filling labor gap in Israel get caught up in war between Israel and Hamas". Associated Press. https://apnews.com/article/gaza-war-israel-thailand-philippines-foreign-workers-7edcf8a874e77e48d3ffa2bf5aa1a052. 
  43. "Foreign victims of Hamas attack" (in en-gb). BBC News. https://www.bbc.com/news/live/world-middle-east-67108364?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=652a4a02364b3f1612ec4b5f%26Foreign%20victims%20of%20Hamas%20attack%262023-10-14T08%3A16%3A37.934Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:50a07417-f365-49d4-89bd-a214eb13f8d5&pinned_post_asset_id=652a4a02364b3f1612ec4b5f&pinned_post_type=share. 
  44. "Число погибших в Израиле россиян увеличилось до 19". Коммерсантъ (in ரஷியன்). 19 October 2023. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
  45. "Update: 12 Ukrainians killed in Hamas attack on Israel" (in en). The Kyiv Independent. 13 October 2023. https://kyivindependent.com/update-12-ukrainians-killed-in-hamas-attack-on-israel/. 
  46. "Ambassador: Ukrainian killed in Gaza Strip, 18 citizens confirmed killed in Israel" (in en). The Kyiv Independent. 19 October 2023. https://kyivindependent.com/ambassador-ukrainian-dies-in-gaza-strip/. 
  47. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ani என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  48. Kollmann, Raúl (21 October 2023). "Confirman la novena víctima argentina en Israel" (in es). Página 12. https://www.pagina12.com.ar/600749-confirman-la-novena-victima-argentina-en-israel. 
  49. Lopes, Maria (18 October 2023). "Identificados nove mortos em Israel com passaporte português". PÚBLICO (in போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
  50. "Seven Ethiopians reportedly killed in Israel-Hamas War". 12 October 2023.
  51. Stacey, Kiran (16 October 2023). "Six Britons dead and 10 missing after Hamas attack on Israel, Rishi Sunak says". The Guardian. https://www.theguardian.com/uk-news/2023/oct/16/britons-dead-missing-hamas-attack-israel-rishi-sunak. 
  52. "Încă un cetățean de origine română, mort în conflictul din Orientul Mijlociu. Numărul victimelor a ajuns la cinci" (in ரோமேனியன்). Euronews Romania. 22 October 2023. பார்க்கப்பட்ட நாள் 22 October 2023.
  53. "MAE: Un cetățean român a fost răpit de Hamas și luat ostatic în Gaza" (in ro). www.digi24.ro. 22 October 2023. https://www.digi24.ro/stiri/actualitate/mae-un-cetatean-roman-a-fost-rapit-de-hamas-si-luat-ostatic-in-gaza-2551015. 
  54. Austrian Ministry of Foreign Affairs [MFA_Austria]. "It is our sad duty to announce that one of the three missing Austrian-Israeli dual citizens was found dead. He is one of the countless victims of the brutal large-scale attack on #Israel by the terrorist organization #Hamas. The family of the deceased informed us about this today" (Tweet) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 October 2023. Missing or empty |date= (help)
  55. "Zwei weitere Österreicher nach Hamas-Angriff tot". Der Standard. 13 October 2023. https://www.derstandard.at/story/3000000190956/zwei-weitere-oesterreicher-nach-hamas-angriff-tot. 
  56. "Al menos cuatro chilenos muertos por los ataques de Hamás contra Israel" (in ஸ்பானிஷ்). Europa Press. 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  57. "Fourth Filipino killed in Israel after Hamas attack". ABS-CBN. 19 October 2023. https://news.abs-cbn.com/news/10/19/23/fourth-filipino-killed-in-israel-hamas-war. 
  58. "Foreigners killed, abducted or missing in Hamas attack". France 24. 9 October 2023. https://www.france24.com/en/live-news/20231009-foreigners-killed-missing-or-abducted-in-hamas-attack. 
  59. "Guerra de Israel: Itamaraty confirma terceira brasileira morta no conflito" (in போர்ச்சுகீஸ்). CNN Brasil. 15 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  60. "Two civilians killed in Israel shelling of Lebanon: mayor". France 24. 2023-10-14. https://www.france24.com/en/live-news/20231014-two-civilians-killed-in-israel-shelling-of-lebanon-mayor. 
  61. "İsrail: Hamas'ın saldırılarında 3 Türk vatandaşı öldü" (in tr). NTV. 17 October 2023. https://www.ntv.com.tr/dunya/son-dakika-haberi-israil-hamasin-saldirilarinda-3-turk-vatandasi-oldu,OJhvjwmx2UWUZgwhHUvTdA. 
  62. Garcia Castro, Sebastian (13 October 2023). "Colombiano Antonio Macías fue asesinado en Israel, era pareja de Ivonne Rubio". El Tiempo (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  63. 63.0 63.1 63.2 "Hamas Israel attacks: The international victims of the assault on Israel". BBC News. 9 October 2023 இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009163704/https://www.bbc.com/news/world-middle-east-67054825. 
  64. "Two South Africans killed in Israel-Gaza conflict". The Citizen. 13 October 2023.
  65. "Israeli air strikes kill two workers at Syria's Damascus airport, official says". Reuters. 2023-10-22. https://www.reuters.com/world/middle-east/israeli-air-strikes-kill-two-workers-syrias-damascus-airport-official-2023-10-22/. 
  66. "Australian grandmother Galit Carbone confirmed killed in Israel". ABC News (Australia). 10 October 2023. https://www.abc.net.au/news/2023-10-11/australian-galit-carbone-killed-in-hamas-israel-attack/102955552. 
  67. "Cambodian student killed as Israel fighting rages" (in en). The Phnom Penh Post. 8 October 2023 இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009001126/https://www.phnompenhpost.com/national/cambodian-student-killed-israel-fighting-rages. 
  68. "Estonian citizen among the dead in Hamas attack on Israel" (in en). ERR. 12 October 2023. https://news.err.ee/1609129988/estonian-citizen-among-the-dead-in-hamas-attack-on-israel. 
  69. "Fünf deutsche Geiseln – 22-Jährige ermordet". ZDF (in ஜெர்மன்). 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  70. "Un hondureño y su esposa fueron asesinados en el brutal ataque de Hamás a Israel". HCH (in ஸ்பானிஷ்). 12 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  71. "Missing Irish-Israeli woman Kim Damti confirmed dead". BBC News. 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  72. "Tajani, due italo-israeliani dispersi da 48 ore" (in it). ANSA. 9 October 2023 இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009232804/https://www.ansa.it/sito/notizie/mondo/2023/10/09/tajani-due-italo-israeliani-dispersi-da-48-ore-_52cd0775-dda2-4ff2-841d-76739c97f3d8.html. 
  73. "Israele, i tre italiani dispersi: chi sono. Nir Forti "ferito al rave di Reim", Eviatar e Liliach forse ostaggi di Hamas" [Israel, the three missing Italians: who they are. Nir Forti «injured at the Reim rave», Eviatar and Liliach perhaps hostages of Hamas]. www.ilmessaggero.it (in இத்தாலியன்). 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 14 October 2023.
  74. "«Hamās» teroristu uzbrukumā Izraēlā bojā gājusi Latvijas valstspiederīgā" (in lv). lsm.lv. 15 October 2023. https://www.lsm.lv/raksts/zinas/arzemes/15.10.2023-hamas-teroristu-uzbrukuma-izraela-boja-gajusi-latvijas-valstspiederiga.a527862/. 
  75. "Lietuvos URM patvirtino: Izraelyje žuvęs lietuvis – policijoje dirbęs M. Kuzmickas" (in lt). Lrytas.lt. 8 October 2023. https://www.lrytas.lt/lietuvosdiena/aktualijos/2023/10/08/news/izraelyje-zuvo-lietuvis-28649797. 
  76. "19-year-old Spaniard confirmed dead after Hamas terrorist attack in Israel". 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  77. "Israel incluye al español Iván Illarramendi entre los cerca de 200 secuestrados por Hamas y Pedro Sánchez pide su liberación" (in Spanish). El Mundo. Europa Press. 17 October 2023. https://www.elmundo.es/espana/2023/10/17/652ece79fdddff850b8b45df.html. 
  78. Nihara, Rashi (18 October 2023). "Israel confirms death of Sri Lankan woman" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  79. "Two Sri Lankan women kidnapped at Israel–Jordan border, says Sri Lankan Ambassador". Sri Lanka News – Newsfirst (in ஆங்கிலம்). 17 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  80. Farge, Emma; Janowski, Tomasz (13 October 2023). "Swiss national dead in Israel violence – foreign minister" (in en-US). Reuters. https://www.reuters.com/article/israel-palestinians-switzerland/swiss-national-dead-in-israel-violence-foreign-minister-idUKL8N3BJ40S. 
  81. "Dansk statsborger meldt savnet i Israel" [Danish citizen reported missing in Israel]. DR (in டேனிஷ்). 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  82. "Han talte i telefon med sin danske bror, da Hamas kom: – Jeg har ikke hørt fra ham siden" [He spoke on the phone with his Danish brother when Hamas came: – I haven't heard from him since]. TV2 (in டேனிஷ்). 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
  83. ""Znamo da je Srbin kidnapovan u Gazi, radimo šta možemo" | Svet". Direktno (in செர்பியன்). பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  84. "Tanzanian students missing in Israel following Hamas attack". Africanews. 9 October 2023 இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009170738/https://www.africanews.com/2023/10/09/tanzanian-students-missing-in-israel-following-hamas-attack/. 
  85. "Kazakh national dies in Gaza Strip – Kazakh MFA attack". inform.kz. 9 October 2023. https://en.inform.kz/news/kazakh-national-dies-in-gaza-strip-kazakh-mfa-2420d6/#:~:text=A%20national%20of%20Kazakhstan%20died,of%20Palestine%2C%20died%20as%20well.. 
  86. 86.0 86.1 "At least six Palestinian journalists killed as Israel bombs Gaza". Al Jazeera (in ஆங்கிலம்). 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  87. "Israeli strike in southern Lebanon kills journalist, wounds several". Al Jazeera (in ஆங்கிலம்). 13 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  88. Lidor, Canaan (9 October 2023). "Ynet photographer missing, feared kidnapped along with 3-year-old daughter". The Times of Israel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
  89. "BBC journalists held at gunpoint by Israeli police". BBC. 13 October 2023. பார்க்கப்பட்ட நாள் 14 October 2023.
  90. Darcy, Oliver (13 October 2023). "BBC journalists assaulted and held at gunpoint by Israeli police, network says". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 October 2023.
  91. "World reaction to surprise attack by Palestinian Hamas on Israel" (in en). அல் ஜசீரா இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007201341/https://www.aljazeera.com/news/2023/10/7/we-are-at-war-reactions-to-palestinian-hamas-surprise-attack-in-israel. 
  92. Michaelson, Ruth (7 October 2023). "Condemnation and calls for restraint after Hamas attack on Israel". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 7 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231007155544/https://www.theguardian.com/world/2023/oct/07/condemnation-and-calls-for-restraint-after-hamas-attack-on-israel. "International leaders condemned an unprecedented incursion by Palestinian militants into southern Israel, while governments across the Middle East called for restraint after an attack that shook the Israeli security establishment." 
  93. Nereim, Vivian (9 October 2023). "Across the Mideast, a Surge of Support for Palestinians as War Erupts in Gaza". தி நியூயார்க் டைம்சு இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009191534/https://www.nytimes.com/2023/10/09/world/middleeast/mideast-palestine-support-gaza.html. 
  94. "Arab states call for restraint after Hamas attack— but some blame Israel". தி பார்வர்ட் இம் மூலத்தில் இருந்து 8 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231008063302/https://forward.com/fast-forward/563491/arab-states-gaza-hamas-israel-attack-blame-reaction/. 
  95. "Israel/OPT: Civilians on both sides paying the price of unprecedented escalation in hostilities between Israel and Gaza as death toll mounts". Amnesty International. 9 October 2023. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023.
  96. "US moves warships closer to Israel after Hamas attack". பிபிசி நியூஸ். 8 October 2023 இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009023420/https://www.bbc.com/news/world-us-canada-67049196. 
  97. "Is Israeli bombing of Gaza a violation of international laws?". அல் ஜசீரா. https://www.aljazeera.com/features/2023/10/12/is-israeli-bombing-of-gaza-a-violation-of-international-laws. 
  98. 98.0 98.1 "Is Israeli bombing of Gaza a violation of international laws?". அல் ஜசீரா. 12 October 2023. https://www.aljazeera.com/features/2023/10/12/is-israeli-bombing-of-gaza-a-violation-of-international-laws. 
  99. Farge, Emma (10 October 2023). "UN rights chief condemns Israeli 'siege' of Gaza, militants' taking of hostages" (in en). ராய்ட்டர்சு. https://www.reuters.com/world/israeli-air-strikes-hit-residences-schools-across-gaza-un-rights-chief-2023-10-10/. 
  100. (10 October 2023). "Commission of Inquiry collecting evidence of war crimes committed by all sides in Israel and Occupied Palestinian Territories since 7 October 2023". செய்திக் குறிப்பு.
  101. "UN experts say Israel's strikes on Gaza amount to 'collective punishment'". ராய்ட்டர்சு. 12 October 2023. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
  102. "Israel/occupied Palestinian territory: UN experts deplore attacks on civilians, call for truce and urge international community to address root causes of violence". United Nations.
  103. 103.0 103.1 "Israel/Palestine: Devastating Civilian Toll as Parties Flout Legal Obligations". Human Rights Watch. 9 October 2023. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023. Palestinian armed group's apparent deliberate targeting of civilians, indiscriminate attacks, and taking of civilians as hostages amount to war crimes under international humanitarian law. Israeli authorities' cutting off electricity to Gaza and other punitive measures against Gaza's civilian population would amount to unlawful collective punishment, which is a war crime. The laws of war apply to all parties to a conflict, irrespective of the lawfulness of their going to war or imbalances of power between the parties.
  104. "Israel/OPT: Civilians on both sides paying the price of unprecedented escalation in hostilities between Israel and Gaza as death toll mounts". Amnesty International. 7 October 2023.
  105. Sharon, Jeremy. "Footage of Hamas assault on civilians shows likely war crimes, experts say". தி டைம்சு ஆப் இசுரேல் (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
  106. "Images of the Mass Kidnapping of Israelis by Hamas". The Atlantic (in ஆங்கிலம்). 9 October 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
  107. Israel UN envoy decries 'war crimes,' UN Security Council meets, By Michelle Nichols, 9 October 2023, https://www.reuters.com/world/middle-east/israel-un-envoy-decries-war-crimes-vows-obliterate-hamas-2023-10-08/ பரணிடப்பட்டது 9 அக்டோபர் 2023 at the வந்தவழி இயந்திரம்
  108. Magid, Jacob; Sharon, Jeremy. "B'Tselem accuses Israel of committing war crimes in its military response to Hamas". டைம்சு ஆப் இசுரேல் (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
  109. Nichols, Michelle (10 October 2023). "Palestinian UN envoy accuses Israel of 'genocidal' campaign against Gaza". Reuters. https://www.reuters.com/world/middle-east/palestinian-un-envoy-accuses-israel-genocidal-campaign-against-gaza-2023-10-10/. 
  110. Batrawy & Estrin (11 October 2023). "Power goes out in Gaza, as Israel tightens siege and bombs the Palestinian territory". NPR. https://www.npr.org/2023/10/11/1205036361/israel-strikes-neighborhoods-across-gaza-as-the-war-with-hamas-intensifies. 
  111. "Israel: White Phosphorus Used in Gaza, Lebanon". Human Rights Watch. 12 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  112. Stepansky, Federica Marsi,Mersiha Gadzo,Edna Mohamed,Joseph. "Thousands flee but no signs of mass exodus after Gaza evacuation warning". www.aljazeera.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  113. Gjevori, Elis (14 May 2021). "Israel's 'Dahiya Doctrine,' a plan for mass civilian deaths in Gaza". Israel's Dahiya Doctrine; a plan for mass civilian deaths in Gaza. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  114. Monks, Kieron (10 October 2023). "The controversial military doctrines Israel could already be using in Gaza". inews.co.uk. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  115. "Israel at War: A Scripps News special report". Scripps News. 12 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  116. "Israel commits widespread war crimes in Gaza, humanitarian catastrophe is imminent". Euro-Med Human Rights Monitor.
  117. "Israel commits widespread war crimes in Gaza, humanitarian catastrophe is imminent [EN/AR] - occupied Palestinian territory" (in ஆங்கிலம்). ReliefWeb. 10 October 2023.
  118. "Israel must rescind evacuation order for northern Gaza and comply with international law: UN expert". Office of the High Commissioner for Human Rights (in English). October 13, 2023. பார்க்கப்பட்ட நாள் October 14, 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

தொடர்பான நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேல்-ஹமாஸ்_போர்&oldid=3939499" இலிருந்து மீள்விக்கப்பட்டது