2023 இசுரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்

2023 இசுரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் என்பது இசுரேலுக்கும் ஹமாசிற்கும் இடையே நடந்துவரும் போரில் நடைமுறைப்படுத்தப்பட்ட போர் நிறுத்தமாகும். நான்கு நாட்கள் போர் செய்யாது இருத்தல், பிணையாளர்களை விடுவித்தல் ஆகியன இரு பக்கத்தினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. இந்தப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.[1] முற்றுகையிடப்பட்ட இசுரேலிலிருந்து பிணையாளர்களாக காசாக்கரைக்குள் கொண்டு செல்லப்பட்ட 50 பேர் ஹமாஸ் போராளிக் குழுவினரால் விடுவிக்கப்படுவர்; இசுரேல் சிறைச்சாலைகளிலுள்ள 150 பாலத்தீனியர்கள் இசுரேலால் விடுவிக்கப்படுவர். இசுரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள காசாக்கரையினுள் மனிதநேய உதவிகள் நுழைவதற்கு இருதரப்பும் சம்மதித்துள்ளன.[2][3][4]

நவம்பர் 25 வரை, 41 பிணையாளர்களை ஹமாஸ் விடுவித்திருந்தது; 78 பாலத்தீனியக் கைதிகளை இசுரேல் விடுதலை செய்திருந்தது.[5]

போர் நிறுத்தத்தை அடுத்த இரு நாட்களுக்கு நீட்டிப்பதற்கு ஹமாசும் இசுரேல் அரசும் ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் நவம்பர் 27 அன்று தெரிவித்தது.

உடன்பாடு தொகு

கத்தார், எகிப்து, ஐக்கிய அமெரிக்கா நாடுகள் மேற்கொண்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, நவம்பர் 22 அன்று உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.[6] 4 நாட்கள் போர் நிறுத்தம், 50 இசுரேலிய நாட்டின் பிணையாளர்கள் விடுவிப்பு, 150 பாலத்தினீயர்களின் விடுதலை, அதிகப்படியான மனிதநேய உதவிகளை காசாவிற்குள் அனுமதித்தல் ஆகியன இந்த உடன்பாட்டின் முக்கியக் கூறுகளாகும்.[7][8][9] விடுவிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாக இருப்பர்.[10] தெற்கு காசாவின் வான்வெளியில் இசுரேலின் நடமாட்ட நிறுத்தம், வடக்கு காசாவின் வான்வெளியில் நாள்தோறும் 6 மணி நேரத்திற்கு வானூர்திகள் ஏதும் பறக்காமல் இருத்தல் ஆகியனவும் உள்ளடக்கம் என ஹமாஸ் தெரிவித்தது.[11]

போர் நிறுத்தத்தன்போது, காசாவிலுள்ள விடுவிக்கப்படாத பிணையாளர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் சந்திக்க இயலாது என ஹமாஸ் அறிவித்தது.[12] இந்தப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்த இசுரேலியப் பிணையாளர்கள் பிரச்சினை தொடங்கிய 7 அக்டோபர் 2023 முதற்கொண்டே, இந்தப் பிணையாளர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.[13] [14]

போர் நிறுத்தத்தின்போது நடந்த நிகழ்வுகள் தொகு

போர் நடந்துகொண்டிருந்த நாட்களில், இசுரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைகளால் வடக்கு காசாவிலிருந்த பொதுமக்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். மீண்டும் திரும்பக் கூடாது என்றும் அச்சிடப்பட்ட துண்டுச்சீட்டுகள் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காசா நோக்கி செல்லத் தொடங்கினர்.[15]போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப நேரத்தில், காசா நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த பாலத்தீனியர்கள் மீது இசுரேலியப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அல் ஜசீரா ஆங்கிலத் தொலைக்காட்சி தெரிவித்தது.[16][17] இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

போர் நிறுத்த உடன்பாடு மீறப்பட்டதாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர். நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் தொடங்கி, 15 நிமிடத்தில் ஹமாஸ் குழுவானது தெறிப்புகளை ஏவியதாக இசுரேல் குற்றஞ்சாட்டியது. பாலத்தீனியர்கள் மீது இசுரேலின் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் ஹாமாசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காசா உடல்நல அமைச்சகம் தெரிவித்தது.[18] நவம்பர் 24 அன்று வடக்கு காசாவிலிருந்து தெற்கு காசாவிற்குள் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது இசுரேலின் துப்பாக்கி தாங்கிய வீரர்கள் சுட்டு காயப்படுத்தியதாக ஸ்கை நியூசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.[19][20]

மேற்கோள்கள் தொகு

  1. "Israel-Hamas truce deal: All that you need to know". Al Jazeera. 22 November 2023. Archived from the original on 22 November 2023. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  2. Massoud, Bassam; Rose, Emily (22 November 2023). "Israel, Hamas agree 4-day truce for hostage release and aid into Gaza" இம் மூலத்தில் இருந்து 22 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231122145512/https://www.reuters.com/world/middle-east/israeli-government-debates-deal-release-gaza-hostages-truce-2023-11-21/. 
  3. "Qatar announces Israel-Hamas truce-for-hostages deal that would pause Gaza fighting, bring more aid". Associated Press News. 21 November 2023. Archived from the original on 22 November 2023. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  4. "New-York Times". The New York Times. 24 November 2023. Archived from the original on 24 November 2023. பார்க்கப்பட்ட நாள் 24 November 2023.
  5. John, Tara; Izso, Lauren; Michaelis, Tamar; Tanno, Sophie (25 November 2023). "Who are the hostages released on Friday?". CNN இம் மூலத்தில் இருந்து 25 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231125230602/https://www.cnn.com/2023/11/24/middleeast/who-are-the-hostages-released-on-friday-intl/index.html. 
  6. "What does the cease-fire between Israel and Hamas look like?". AP News (in ஆங்கிலம்). 2023-11-22. பார்க்கப்பட்ட நாள் 2023-11-29.
  7. "Israel, Hamas agree to truce, paving way for some captives' release". Al Jazeera (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-29.
  8. Burke, Jason; Michaelson, Ruth; Borger, Julian (2023-11-22). "Israel and Hamas agree deal for release of some hostages and four-day ceasefire" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2023/nov/22/israel-hamas-war-hostages-freed-deal-ceasefire. 
  9. "What can we expect from the four-day truce between Israel and Hamas in Gaza?". France 24 (in ஆங்கிலம்). 2023-11-24. பார்க்கப்பட்ட நாள் 2023-11-29.
  10. Schneider, Tal; Keller-Lynn, Carrie (2023-11-22). "Release of 50 abducted women, children to begin 10 a.m. Thursday – Israeli official". The Times Of Israel. பார்க்கப்பட்ட நாள் 2023-11-19.
  11. "Israel, Hamas agree four-day truce, 50 hostages to go free" (in en). Reuters. 22 November 2023. https://www.reuters.com/world/middle-east/israeli-government-debates-deal-release-gaza-hostages-truce-2023-11-21/. 
  12. "Israeli Hamas-held Hostages Release Imminent; Expected to Land in Israel at 6 P.M. After Gaza-Egypt Handover" (in en). Haaretz இம் மூலத்தில் இருந்து 24 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231124070633/https://www.haaretz.com/israel-news/2023-11-24/ty-article-live/cease-fire-set-to-begin-at-7-a-m-13-women-and-children-to-be-released-in-afternoon/0000018b-ff7f-d4d0-addf-ffffa24a0000. 
  13. "The Red Cross Asked to Visit the Israeli Hostages and Collect Letters From Them. It Has Yet to Happen" (in en). Haaretz இம் மூலத்தில் இருந்து 28 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231028115759/https://www.haaretz.com/israel-news/2023-10-26/ty-article-magazine/.premium/red-cross-asked-to-visit-israeli-hostages-and-get-letters-from-them-it-has-yet-to-happen/0000018b-6cfc-dc5b-abeb-6ffe0e1b0000. 
  14. "Israeli official says Hamas has enough hostages to cover 2-3 day truce extension". Returns.
  15. Jobain, Najib; Federman, Josef; Jeffery, Jack (24 November 2023). "Hamas frees first batch of hostages under truce, including 13 Israelis, officials and media say" இம் மூலத்தில் இருந்து 24 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231124133127/https://apnews.com/article/israel-hamas-war-news-11-24-2023-172256dd593189f7b37f7c62f4739c6b. 
  16. "Israeli forces open fire to stop people returning to north Gaza". Al Jazeera (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2023.
  17. . https://www.palestinechronicle.com/israeli-forces-open-fire-at-palestinians-returning-north-kill-two/. 
  18. Neuman, Scott; Estrin, Daniel; Mann, Brian (24 November 2023). "13 Israelis are among the two dozen hostages freed by Hamas". NPR. Archived from the original on 24 November 2023. பார்க்கப்பட்ட நாள் 24 November 2023.
  19. "Israel-Hamas war: Palestinians hit by sniper fire in northern Gaza on first day of truce". Sky News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.
  20. "Palestinian teenager 'dizzy with happiness' to be freed". BBC News.