ஒண்டுராசு

ஒந்துராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (About this soundகேட்க); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒந்துராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒந்துராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒந்துராசு எனவும் அழைக்கப்பட்டது[5] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒந்துராசு குடியரசு
Republic of Honduras

República de Honduras
கொடி சின்னம்
குறிக்கோள்: 
  • "Libre, Soberana e Independiente"
  • "விடுதலை, இறையாண்மை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: 
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
இனக் குழு (2016)
சமயம்
மக்கள்
  • ஒந்தூரான்
  • கத்ராச்சோ
அரசாங்கம் ஒருமுக சனாதிபதிக் குடியரசு
 •  அரசுத்தலைவர் சியோமாரா காசுட்ரோ
 •  தேசிய காங்கிரசுத் தலைவர் மொரீசியோ ஒலிவா
சட்டமன்றம் தேசிய காங்கிரசு
விடுதலை
 •  அறிவிப்புb எசுப்பானியாவிடம் இருந்து 15 செப்டம்பர் 1821 
 •  1-வது மெக்சிக்கப் பேரரசிடம்
இருந்து
1 சூலை 1823 
 •  ஒந்துராசாக அறிவிப்பு (நடு அமெரிக்கக் குடியரசிடம் இருந்து) 5 நவம்பர் 1838 
பரப்பு
 •  மொத்தம் 112,492 கிமீ2 (101-வது)
43,278 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2016 கணக்கெடுப்பு 9,112,867[1] (95-வது)
 •  2013 கணக்கெடுப்பு 8,303,771
 •  அடர்த்தி 85/km2 (128-ஆம்)
221/sq mi
மொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $49.010 பில்லியன்[2] (104-வது)
 •  தலைவிகிதம் $5,817[2] (133-வது)
மொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $23.835 பில்லியன்[2] (108-வது)
 •  தலைவிகிதம் $2,829[2] (128-வது)
ஜினி (2018)negative increase 52.1[3]
உயர்
மமேசு (2019)Green Arrow Up Darker.svg 0.632[4]
மத்திமம் · 133-வது
நாணயம் இலெம்பீரா (HNL)
நேர வலயம் நடு நேர வலயம் (ஒ.அ.நே−6)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +504
இணையக் குறி .hn
a. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு.
b. நடு அமெரிக்கக் குடியரசின் பகுதி

ஒந்துராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[6]

ஒந்துராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்தொகு

  1. "World Population Prospects: The 2017 Revision". ESA.UN.org (custom data acquired via website). United Nations Department of Economic and Social Affairs, Population Division. 10 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "World Economic Outlook Database, October 2018". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 7 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Gini Index coefficient". CIA World Factbook. 12 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene. United Nations Development Programme. 15 December 2020. பக். 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-126442-5. http://hdr.undp.org/sites/default/files/hdr2020.pdf. பார்த்த நாள்: 16 December 2020. 
  5. "Archeological Investigations in the Bay Islands, Spanish Honduras". Aboututila.com. 2010-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 சூன் 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. Parkinson, Charles (21 ஏப்ரல் 2014). "Latin America is World's Most Violent Region: UN". InSight Crime. 2016-02-09 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டுராசு&oldid=3381311" இருந்து மீள்விக்கப்பட்டது