எல் சால்வடோர்
எல் சல்வடோர் (எசுப்பானிய மொழி: "República de El Salvador") மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன் ஆகும். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும். இதன் தலைநகரம் சான் சல்வடோர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
எல் சல்வடோர் குடியரசு República de El Salvador | |
---|---|
குறிக்கோள்: "Dios, Unión, Libertad" (எசுப்பானிய மொழி) "கடவுள், ஐக்கியம், விடுதலை" | |
தலைநகரம் | சான் சல்வடோர் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானிய மொழி |
மக்கள் | சல்வடோரியன் |
அரசாங்கம் | குடியரசு |
• சனாதிபதி | அண்டோனியோ சாக்கா |
விடுதலை | |
• சுபெயினிடம் இருந்து | செப்டம்பர் 15, 1821 |
• மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து | 1842 |
பரப்பு | |
• மொத்தம் | 21,040 km2 (8,120 sq mi) (152ஆவது) |
• நீர் (%) | 1.4 |
மக்கள் தொகை | |
• சூலை 2007 மதிப்பிடு | 6,948,073 (97ஆவது) |
• 1992 கணக்கெடுப்பு | 5,118,598 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $36.246 பில்லியன் (93ஆவது) |
• தலைவிகிதம் | 5,515 (101ஆவது) |
ஜினி (2002) | 52.4 உயர் |
மமேசு (2006) | 0.722 உயர் · 101ஆவது |
நாணயம் | அமெரிக்க டாலர் (2001–தற்போது வரை)2 |
நேர வலயம் | ஒ.அ.நே-6 |
அழைப்புக்குறி | 503 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SV |
இணையக் குறி | .sv |
பெயர்
தொகுஇந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான "சேவியர்" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
வெளி இணைப்புகள்
தொகு- பிரித்தானிக்க என்சைக்கிளோபீடியா
- சிஐஏ தரவுகள் பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம்