துணி
துணி என்பது பஞ்சு நூல் போன்ற இயற்கைப் பொருட்களாலோ, அல்லது நைலான் போன்ற பிற செயற்கைப் பொருள்களாலோ ஆன மெல்லிய நீண்ட இழைகளால் குறுக்கும் நெடுக்குமாக பின்னி நெய்யும், பரப்பளவு கொண்ட ஒரு பொருள். துணி, மாந்தர்கள் அணியும் ஆடையாகவோ, ஆடைக்குப் பயன்படும் பொருளாகவோ நெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளது. துணி நெய்யும் நெசவுத்தொழில் உலகிலேயே மிகப் பழமையான தொழில்களுள் ஒன்று. பொருள்களை எடுத்துச்செல்லும் பை, மூட்டை கட்டும் பொருள், விரிப்பு, கூடாரம் கட்டும் பொருள், காலணிகள், ஓவியம் தீட்டும் பரப்பு அடிப்பொருளாகவும், பாய்மரக் கப்பல்கள், படகுகளில் பாயாகவும் என்று பற்பல பிற பயன்பாடுகளுக்கும் துணி பயன்படுகின்றது. உலகளாவிய பரப்பில் துணிகளின் வணிக அளவு ஆண்டொன்றுக்கு பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் [1]
வகைகள்
தொகு1. பருத்தித்துணி (இயற்கை இழை)
2. பட்டு (பட்டுக்கூடு)
3. கம்பளி (வுல் எனப்படும் மிருக உரோம நெசவு ஆட்டிழை மற்றும் பல)
4. செயற்கை இழைதுணி (பாலியசுடர், விசுகோசு, மற்றும் பல)