ஒருமுக அரசு
ஒருமுக அரசு (unitary state) ஒரே அதிகாரமையத்தைக் கொண்ட அரசு அல்லது நாடு ஆகும்; இதில் நடுவண் அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவியப்படுத்தப்பட்டிருக்கும். ஏதேனும் நிர்வாகப் பிரிவுகள் இருப்பினும் அவை நடுவண் அரசு பகிரும் அதிகாரத்தை மட்டுமே செயலாக்க இயலும். உலகின் பெரும்பாலான நாடுகள் ஒருமுக அரசைக் கொண்டுள்ளன. 193 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு வகிக்கும் 193 நாடுகளில் 165 நாடுகளில் ஒருமுக அரசுமுறையே நிலவுகின்றது.
ஒருமுக அரசுகளுக்க எதிராக கூட்டரசு நாடுகள் (கூட்டாட்சிகள்) அமைந்துள்ளன.
ஒருமுக அரசுகளில் நடுவண் அரசால் உள்தேசிய அலகுகள் உருவாக்கப்படலாம் அல்லது கலைக்கப்படலாம்; அவற்றின் அதிகாரங்கள் விரிவாக்கப்படலாம் அல்லது குறுக்கப்படலாம். அரசியல் அதிகாரம் ஒப்படைவு மூலமாக உள்ளாட்சிகளுக்கு எழுத்துருச் சட்டம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நடுவண் அரசே உச்ச அரசாக விளங்கும்; ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை இரத்தாக்குவதோ கட்டுப்படுத்துவதோ நடுவண் அரசால் இயலும்.
பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து இராச்சியம் ஒருமுக அரசிற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இசுக்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து பகுதிகளுக்கு தன்னாட்சி உரிம அதிகாரங்களை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பகிர்கின்றது; இருப்பினும் அந்த நாடாளுமன்றம் தன்னிட்சையாக சட்டமியற்றி இந்த அதிகாரப் பகிர்வுகளை மாற்றவோ இரத்து செய்யவோ இயலும். (இங்கிலாந்திற்கு தனியான ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் ஏதுமில்லை).[1] பல ஒருமுக அரசுகளில் எந்த பகுதிக்குமே தன்னாட்சி வழங்கப்படுவதில்லை. இத்தகைய நாடுகளில் உட்தேசிய வட்டாரங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்ற முடியாது. இவற்றிற்கு காட்டாக அயர்லாந்து குடியரசு, நோர்வே உள்ளன.[2]
மாறாக கூட்டாட்சி நாடுகளில், உள்தேசிய அரசுகள் தங்கள் அதிகாரங்களை நடுவண் அரசுடன் சரிசமனான நிலையில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி பகிர்ந்து கொண்டுள்ளன; இந்த அதிகாரப் பகிர்வில் மாற்றங்கள் தேவைப்படின் இரு அரசுகளின் ஒப்புதலும் தேவையாகின்றது. இதன்மூலம் உள்தேசிய அலகுகளின் இருத்தலும் அதிகாரங்களும் தன்னிட்சையாக நடுவண் அரசால் மாற்றவியலாது.
ஒருமுக அரசுகளின் பட்டியல்
தொகுஒருமுக குடியரசுகள்
தொகு- ஆப்கானித்தான்
- அல்பேனியா
- அல்ஜீரியா
- அங்கோலா
- ஆர்மீனியா
- அசர்பைஜான்
- வங்காளதேசம்
- பெலருஸ்
- பெனின்
- பொலிவியா
- போட்சுவானா
- பல்கேரியா
- புர்க்கினா பாசோ
- புருண்டி
- கமரூன்
- கேப் வர்டி
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
- சாட்
- சிலி
- சீனா[3]
- கொலம்பியா
- காங்கோ
- கோஸ்ட்டா ரிக்கா
- குரோவாசியா
- கியூபா
- சைப்பிரசு
- செக் குடியரசு
- சீபூத்தீ
- டொமினிக்கா
- டொமினிக்கன் குடியரசு
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- கிழக்கு திமோர்
- எக்குவடோர்
- எகிப்து
- எல் சல்வடோர
- எக்குவடோரியல் கினி
- எரித்திரியா
- எசுத்தோனியா
- பிஜி
- பின்லாந்து
- பிரான்சு
- காபொன்
- கம்பியா
- சியார்சியா
- கானா
- கிரேக்க நாடு
- குவாத்தமாலா
- கினியா
- கினி-பிசாவு
- கயானா
- எயிட்டி
- ஒண்டுராசு
- அங்கேரி
- ஐசுலாந்து
- இந்தோனேசியா
- ஈரான்
- அயர்லாந்து
- இசுரேல்
- இத்தாலி
- ஐவரி கோஸ்ட்
- கசக்கஸ்தான்
- கென்யா
- கிரிபட்டி
- கிர்கிசுத்தான்
- லாவோஸ்
- லாத்வியா
- லெபனான்
- லைபீரியா
- லிபியா
- லித்துவேனியா
- மாக்கடோனியா
- மடகாசுகர்
- மலாவி
- மாலைத்தீவுகள்
- மாலி
- மால்ட்டா
- மார்சல் தீவுகள்
- மூரித்தானியா
- மொரிசியசு
- மல்தோவா
- மங்கோலியா
- மொண்டெனேகுரோ
- மொசாம்பிக்
- மியான்மர்
- நமீபியா
- நவூரு
- நிக்கராகுவா
- நைஜர்
- வட கொரியா
- பலாவு
- பலத்தீன்
- பனாமா
- பரகுவை
- பெரு
- பிலிப்பீன்சு
- போலந்து
- போர்த்துகல்
- உருமேனியா
- ருவாண்டா
- சமோவா
- சான் மரீனோ
- சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
- செனிகல்
- செர்பியா
- சீசெல்சு
- சியேரா லியோனி
- சிங்கப்பூர்
- சிலவாக்கியா
- சுலோவீனியா
- தென்னாப்பிரிக்கா
- தென் கொரியா
- இலங்கை
- சுரிநாம்
- சிரியா
- சீனக் குடியரசு
- தஜிகிஸ்தான்
- தன்சானியா
- டோகோ
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- தூனிசியா
- துருக்கி
- துருக்மெனிஸ்தான்
- உகாண்டா
- உக்ரைன்
- உருகுவை
- உஸ்பெகிஸ்தான்
- வனுவாட்டு
- வியட்நாம்
- யேமன்
- சாம்பியா
- சிம்பாப்வே
ஒருமுக மன்னராட்சிகள்
தொகு- அந்தோரா
- அன்டிகுவா பர்புடா
- பகுரைன்
- பஹமாஸ்
- பார்படோசு
- பெலீசு
- பூட்டான்
- புரூணை
- கம்போடியா
- டென்மார்க்
- கிரெனடா
- ஜமேக்கா
- சப்பான்
- யோர்தான்
- குவைத்
- லெசோத்தோ
- லீக்கின்ஸ்டைன்
- லக்சம்பர்க்
- மொனாகோ
- மொரோக்கோ
- நெதர்லாந்து
- நியூசிலாந்து[4]
- நோர்வே
- ஓமான்
- பப்புவா நியூ கினி
- கத்தார்
- செயிண்ட். லூசியா
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
- சவூதி அரேபியா
- சொலமன் தீவுகள்
- எசுப்பானியா
- சுவீடன்
- தாய்லாந்து
- தொங்கா
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்[5]
- வத்திக்கான் நகர்
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்
தொகுமக்கள்தொகை அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்
தொகுபரப்பளவு அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ Devolution within a unitary state, like federalism, may be symmetrical, with all sub-national units having the same powers and status, or asymmetric, with sub-national units varying in their powers and status.
- ↑ சுவல்பார்டுக்கு பெருநிலப்பகுதியை விட குறைந்த தன்னாட்சியே வழங்கப்பட்டுள்ளது; இதனை நேரடியாக நடுவண் அரசு கட்டுப்படுத்துகின்றது.
- ↑ Roy Bin Wong (1997). China Transformed: Historical Change and the Limits of European Experience. Cornell University Press.
- ↑ "Story: Nation and government – From colony to nation". The Encyclopedia of New Zealand. Manatū Taonga Ministry for Culture and Heritage. 29 August 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
- ↑ "Social policy in the UK". An introduction to Social Policy. Robert Gordon University - Aberdeen Business School. Archived from the original on 4 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)