எக்குவடோர்
எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது.[1][2][3]
எக்வடோர் குடியரசு República del Ecuador ரெபூப்லிகா டெல் எக்வடோர் | |
---|---|
குறிக்கோள்: "Dios, patria y libertad" எசுப்பானியம் "Pro Deo, Patria et Libertate" இலத்தீன் "கடவுள், தாய்நாடு, சுதந்திரம்" | |
நாட்டுப்பண்: Salve, Oh Patria (எசுப்பானியம்) வணக்கம் தாய்நாடு | |
![]() | |
தலைநகரம் | கித்தோ |
பெரிய நகர் | காயாக்கீல் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
மக்கள் | எக்வடோரியர் |
அரசாங்கம் | தலைவர் இருக்கும் குடியரசு |
ராஃபாயெல் கொறேயா | |
லெனீன் மொரேனோ | |
விடுதலை | |
• ஸ்பெயின் இடம் இருந்து | மே 24 1822 |
• க்ரான் கொலொம்பியா இடம் இருந்து | மே 13 1830 |
பரப்பு | |
• மொத்தம் | 256,370 km2 (98,990 sq mi) (73வது) |
• நீர் (%) | 8.8 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 13,755,680 (65வது) |
• அடர்த்தி | 53.8/km2 (139.3/sq mi) (147வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $61.7 பில்லியன் (70வது) |
• தலைவிகிதம் | $4,776 (111th) |
ஜினி | 42 மத்திமம் |
மமேசு (2007) | ![]() Error: Invalid HDI value · 89வது |
நாணயம் | அமெரிக்க டாலர்2 (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-5 (-63) |
அழைப்புக்குறி | 593 |
இணையக் குறி | .ec |
|
தற்போது ஈக்குவடோர் என அழைக்கப்படும் நாடு முன்னர் அம்ரிஇந்தியன் குழுக்களின் தாயகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இன்கா பேரரசுடன் 15ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டது.16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி எசுப்பானியர்கள் கட்டுக்குள் வந்தது, 1820ஆம் ஆண்டு பெரிய கொலம்பியாவின் பாகமாக விடுத லை பெற்றது. அதிலிருந்து 1830இல் இறையாண்மையுள்ள தனி நாடாக விடுதலையடைந்தது. இரு பேரரசுகளின் மரபு எச்சத்தை இந்தாட்டின் பரந்துபட்ட இன மக்கள் தொகையில் காணலாம். 15.2 மில்லியன் மக்களில் பெரும்பான்மையோர் மெசிசிடோசுக்கள் (ஐரோப்பிய அமெரிஇந்திய கலப்பினம்). அவர்களுக்கு அடுத்து ஐரோப்பியர்கள், அமெரிஇந்தியர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் உள்ளனர்.
எசுப்பானியம் அதிகாரபூர்மான மொழியாகும் இதுவே பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. இருந்தாலும் 13 அமெரிஇந்திய மொழிகளும் அரசால் தகுதிபெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. , .கித்தோ நாட்டின் தலைநகரமாகும். குவாயாகில் நாட்டின் பெரிய நகரமாகும். கித்தோவின் வரலாற்று சிறப்புமிக்க நடுப்பகுதி யுனெசுகோவின் ( ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ) உலகப் பாரம்பரியக் களம் என்று 1978இல் அறிவிக்கபட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய நகரான கியுன்கா உலகப் பாரம்பரியக் களம் என்று அதன் நகர திட்டமிடல், எசுப்பானிய பாணி கட்டடங்கள் போன்றவற்றுக்காக 1999இல் அறிவிக்கப்பட்டது. ஈக்குவடோர் வளரும் நாடாகும் இதன் பொருளாதாரம் பாறைநெய் விவசாய பொருட்களை சார்ந்து உள்ளது. நாடு நடுத்தர வருவாய் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Constitución Política de la República del Ecuador". http://www.ecuanex.net.ec/constitucion/titulo01.html.
- ↑ "Religion affiliations in Ecuador 2020". https://www.statista.com/statistics/1067057/religious-affiliation-in-ecuador/.
- ↑ "Proyecciones Poblacionales". National Institute of Statistics and Censuses (INEC). https://www.ecuadorencifras.gob.ec/proyecciones-poblacionales/.