மடகாசுகர்

மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

மடகாசுகர் குடியரசு
Repoblikan'i Madagasikara
République de Madagascar
கொடி சின்னம்
குறிக்கோள்: Tanindrazana, Fahafahana, Fandrosoana  (மலகசி)
Patrie, liberté, progrès  (பிரெஞ்சு)
"Fatherland, Liberty, Progress"
நாட்டுப்பண்: Ry Tanindrazanay malala ô!
Oh, Our Beloved Ancestral-land
தலைநகரம்அண்டனானரீவோ
18°55′S 47°31′E / 18.917°S 47.517°E / -18.917; 47.517
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) மலகாசி, பிரெஞ்சு, ஆங்கிலம்1
மக்கள் மலகாசி[1]
அரசாங்கம் குடியரசு
 •  அதிபர் மார்க் ரவலொமனனா
 •  பிரதமர் சார்ல்ஸ் ரபேமனஞ்சரா
விடுதலை பிரான்சிடமிருந்து
 •  நாள் ஜூன் 26 1960 
பரப்பு
 •  மொத்தம் 5,87,041 கிமீ2 (45வது)
2,26,597 சதுர மைல்
 •  நீர் (%) 0.13%
மக்கள் தொகை
 •  ஜூலை 2007 கணக்கெடுப்பு 19,448,815 [2] (55வது)
 •  1993 கணக்கெடுப்பு 12,238,914
 •  அடர்த்தி 33/km2 (171வது)
86/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $17.270 billion (123வது)
 •  தலைவிகிதம் $905 (169வது)
ஜினி (2001)47.5
உயர்
மமேசு (2007)Green Arrow Up Darker.svg 0.533
Error: Invalid HDI value · 143rd
நாணயம் மலகாசி அரியாரி (MGA)
நேர வலயம் EAT (ஒ.அ.நே+3)
 •  கோடை (ப.சே) நடைமுறையிலில்லை (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 261
இணையக் குறி .mg
1Official languages since 27 April 2007

வரலாறுதொகு

 
வரிவால் லெமூர் - இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் நூற்றுக்கும் மேலான லெமூர் வகைகளுள் ஒன்று.[3]
 
விரல் நகத்தின் மீது இளவுயிரி அரியோந்தி - உலகில் உள்ள ஓந்திகள் அனைத்திலும் இந்த மடகாசுக்கர் அரியோந்தியே மிகச்சிறியதாகும்.

மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.

மேற்கோள்கள்தொகு

  1. "Malagasy" is potentially ambiguous with the Malagasy ethnic group, but is preferred by the government over "Madagascan", which it considers incorrect. Embassy of Madagascar, Washington D.C. பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
  2. "CIA - The World Factbook - Madagascar". 2008-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-04-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. Mittermeier, R.A.; Wallis, J.; Rylands, A.B. ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2009) (PDF). Primates in Peril: The World's 25 Most Endangered Primates 2008–2010. Illustrated by S.D. Nash. IUCN/SSC Primate Specialist Group, International Primatological Society, and Conservation International. பக். 1–92. http://www.primate-sg.org/storage/PDF/Primates.in.Peril.2008-2010.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாசுகர்&oldid=3483384" இருந்து மீள்விக்கப்பட்டது