நடு அமெரிக்கா
நடு அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா (Central America, எசுப்பானியம்: Centroamérica அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஒந்துராசு, நிக்கராகுவா, பனாமா.
புவியமைப்பு
தொகுமத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் (202,000 சதுர மைல்), அதாவது பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 0.1% ஒரு பகுதியில் உள்ளது. 2009இல் அதன் மக்கள் தொகை 41.739.000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சதுர கிலோமீட்டருக்கு 77 பேர் அல்லது ஒவ்வொரு சதுர மைலுக்கு 206 பேர் என மக்கள் அடர்த்தி உடையது. மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் இதன் தென்மேற்கில் உள்ளது, கரீபியன் கடல் வடகிழக்கில் உள்ளது, மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா வடக்கில் உள்ளது. பெரும்பாலான மத்திய அமெரிக்கா கரீபியன் படுகை மீது உள்ளது.
அரசியல்
தொகுமத்திய அமெரிக்கா தற்பொழுது, அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மத்திய அமெரிக்க நீதிமன்றம் உருவாகிய 1907 ல் தொடங்கியது.
மத்திய அமெரிக்காவில் மத்திய அமெரிக்க பாராளுமன்றம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மத்திய அமெரிக்க வங்கி மற்றும் மத்திய அமெரிக்க பொது சந்தை போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.
நடு அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகை
தொகுநாட்டின் பெயரும் கொடியும் |
பரப்பளவு கி.மீ2 (km²) |
மக்கள் தொகை (ஜூலை 1, 2005 தோராய மதிப்பீடு) |
மக்கள் தொகை அடர்த்தி (ஒரு கி.மீ 2>ல்) |
தலைநகரம் |
---|---|---|---|---|
பெலீசு | 22,966 | 2,91,000 | 14 | பெல்மோப்பான் |
கோஸ்ட்டா ரிக்கா | 51,100 | 43,27,000 | 85 | சான் ஹொசே |
எல் சல்வடோர | 21,040 | 68,81,000 | 327 | எல் சல்வடோர் |
குவாத்தமாலா | 1,08,890 | 1,25,99,000 | 116 | குவாத்தமாலா நகரம் |
ஒண்டுராசு | 1,12,492 | 72,05,000 | 64 | டெகுச்சிகல்ப்பா |
நிக்கராகுவா | 1,29,494 | 54,87,000 | 42 | மனகுவா |
பனாமா | 75,517 | 32,32,000 | 43 | பனமா நகரம் |
மொத்தம் | 5,21,499 | 4,00,01,000 | 77 |
மக்கள் வகைப்பாடு
தொகுநிலப்பகுதியின் பெயர், கொடியுடன் கொடி (சின்னம்) |
நிலபரப்பு (km²)[1] |
மக்கள் தொகை (July 2009 est.) |
மக்களடர்த்தி (per km²) |
தலைநகரம் | மொழி | மனித மேம்பாட்டு குறியீடு |
---|---|---|---|---|---|---|
பெலீசு | 22,966 | 3,07,000 | 13 | பெல்மோபன் | ஆங்கிலம் | 0.694 High |
கோஸ்ட்டா ரிக்கா | 51,100 | 41,96,000 | 82 | சான் ஹொசே | எசுப்பானியம் | 0.744 High |
எல் சல்வடோர | 21,040 | 61,63,000 | 292 | சான் சால்வடோர் | எசுப்பானியம் | 0.674 Medium |
குவாத்தமாலா | 1,08,890 | 1,40,27,000 | 129 | குவாடிமாலா | எசுப்பானியம் | 0.574 Medium |
ஒண்டுராசு | 1,12,090 | 74,66,000 | 67 | டெகுகிகல்பா | எசுப்பானியம் | 0.625 Medium |
நிக்கராகுவா | 1,30,373 | 57,43,000 | 44 | மனாகுய | எசுப்பானியம் | 0.589 Medium |
பனாமா | 78,200 | 34,54,000 | 44 | பனாமா நகரம் | எசுப்பானியம் | 0.768 High |
Total | 5,23,780 | 4,13,56,000 | 80 | - | - |
நகரம் | நாடு | மக்கள் தொகை | கணக்கெடுப்பு வருடம் | நாட்டின் மக்கள் தொகை விகிதம் |
---|---|---|---|---|
(1) குவாடிமாலா நகரம் | குவாடிமாலா | 3,700,000 | 2010 | 26% |
(2) சான் சால்வடோர் | எல் சால்வடோர் | 2,415,217 | 2009 | 39% |
(3) மனாகுய | நிகராகுய | 1,918,000 | 2012 | 34% |
(4) டெகுகிகல்பா | ஹோண்டுராஸ் | 1,819,000 | 2010 | 24% |
(5) சான் பெட்ரோ சூலா | ஹோண்டுராஸ் | 1,600,000 | 2010 | 21% |
(6) பனாமா நகரம் | பனாமா | 1,400,000 | 2010 | 37% |
(7) சான் ஹொசே [2] | கோஸ்டா ரிக | 1,275,000 | 2013 | 30% |
உயிரினப்பரவல்
தொகுமத்திய அமெரிக்கா மெசோமெரிக்கன் பல்லுயிரிய முக்கியத்தலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது உலகின் பல்லுயிர்களில் 7% கொண்டுள்ளது..[3] இந்த அட்டவணை ஏழு நாடுகளில் தற்போதைய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது:
நாடு | நீர்நில வாழ்விகள் | பறவைகள் | பாலூட்டிகள் | ஊர்வன | புவிக்குரிய முதுகெலும்பிகளில் | குழல்வகை தாவரங்கள் | உயிரினப்பரவல் |
---|---|---|---|---|---|---|---|
பெலீசு | 46[4] | 544[4] | 147[4] | 140[4] | 877[4] | 2894[4] | 3771[4] |
கோஸ்ட்டா ரிக்கா | 183[5] | 838[5] | 232[5] | 258[5] | 1511[5] | 12119[5] | 13630[5] |
எல் சல்வடோர | 30[6] | 434[6] | 137[6] | 106[6] | 707[6] | 2911[6] | 3618[6] |
குவாத்தமாலா | 133[7] | 684[7] | 193[7] | 236[7] | 1246[7] | 8681[7] | 9927[7] |
ஒண்டுராசு | 101[8] | 699[8] | 201[8] | 213[8] | 1214[8] | 5680[8] | 6894[8] |
நிக்கராகுவா | 61[9] | 632[9] | 181[9] | 178[9] | 1052[9] | 7590[9] | 8642[9] |
பனாமா | 182[10] | 904[10] | 241[10] | 242[10] | 1569[10] | 9915[10] | 11484[10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ பகுதிகளும் மக்கள் தொகை மதிப்பீடுகளும் 2008 சிஐஏ உலக மெய்நிகழ்வு நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த மக்கள் தொகை மதிப்பீடுகள் ஜூலை 2007ல் செய்யப்பட்டவை ஆகும்.
- ↑ ccp.ucr.ac.cr/bvp/pdf/proye/distrital.pdf
- ↑ http://www.webng.com/jerbarker/home/eia-toolkit/downloads/Van04/RojasVancouver.pdf
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Belize Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Costa Rica Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. 2005-06-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "El Salvador Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. 2005-06-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 "Guatemala Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 "Honduras Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 "Nicaragua Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 "Panama Deforestation Rates and Related Forestry Figures". Rainforests.mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.