டோனி பிளேர்
டோனி பிளேர் (Tony Blair), (பி. மே 6, 1953) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் ஜூன் 27, 2007 அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
டோனி பிளேர் Tony Blair | |
---|---|
பிறப்பு | 6 மே 1953 (அகவை 71) எடின்பரோ |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
வேலை வழங்குபவர் |
|
வாழ்க்கைத் துணை/கள் | Cherie Blair |
குழந்தைகள் | Euan Blair, Nicholas Blair, Kathryn Blair, Leo George Blair |
குடும்பம் | William Blair, Sarah Blair |
விருதுகள் | Charlemagne Prize, Presidential Medal of Freedom, Knight of the Garter |
இணையம் | https://institute.global/ |