மேலாட்சி அரசு முறை

மேலாட்சி அரசு முறை (Dominion) என்பது பிரித்தானியப் பேரரசில் பெயரளவில் மட்டும் பிரித்தானிய முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழுத் தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாயத்தின் பகுதியாகவே கருதப்பட்டன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க ஒன்றியம், ஐரிய விடுதலை அரசு போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. ஐக்கிய இராச்சியத்தின் நாட்டுத் தலைவர், பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. பாகிஸ்தான், இலங்கை, கென்யா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் குடியேற நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்ற இந்தியா ஜனவரி 26, 1950 அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது இந்திய மேலாட்சி அரசு (Dominion of India) அல்லது "இந்திய ஒன்றியம்" என்றே அறியப்பட்டது. இலங்கை 1972, மே 22 இல் குடியரசானது.

முன்னாள் மேலாட்சி அரசுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாட்சி_அரசு_முறை&oldid=1988824" இலிருந்து மீள்விக்கப்பட்டது