இரண்டாம் வில்லியம் (செருமனி)

1888 முதல் 1918 வரை செருமனிய பேரரசர் மற்றும் பிரஷ்யாவின் மன்னர்

வில்லியம் II (செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht von Preußen; ஆங்கிலம்:Frederick William Victor Albert of Prussia) (27 சனவரி 1859 – 4 சூன் 1941) பிரசியா மற்றும் செருமனிப் பேரரசின் கடைசி செருமன் பேரரசர் ஆவார்.1888ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை செருமனி பேரரசின் மன்னராக இருந்தார்.1918ஆம் ஆண்டு தனது முடியாட்சியைத் துறந்து நெதர்லாந்தில் வசிக்கலானார். வீமர் நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த செருமனியின் குடியரசு ஆட்சி வீமர் குடியரசு என அழைக்கப்பட்டது. தனது உடலும் செருமனியில் அடக்கம் செய்யலாகாது என்ற அவரது விருப்பத்திற்கிணங்க டூர்ன் நகரில் மறைந்தபோது அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

வில்லியம் II
நோயுள்ள இடது கையை வலதுகை தாங்கிய வண்ணம் .
செருமன் பேரரசர்
ஆட்சிக்காலம்15 சூன் 1888 – 18 நவம்பர் 1918
முன்னையவர்பிரெடெரிக் III
பின்னையவர்முடியாட்சி நீக்கம்
பிரீட்ரிக் எபெர்ட் (சான்சுலர் மற்றும் நிகழ்நிலையில் வீமர் குடியரசின் அரசுத்தலைவர்)
பிறப்பு(1859-01-27)27 சனவரி 1859
பெர்லின், பிரசியா
இறப்பு4 சூன் 1941(1941-06-04) (அகவை 82)
டூர்ன், நெதர்லாந்து
துணைவர்அகஸ்டா விக்டோரியா
ஹெர்மைன் ரெயுசு
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசர் வில்லியம்
இளவரசி ஐடெல் பிரீட்ரிக்
இளவரசர் அடால்பெர்ட்
இளவரசர் அகஸ்ட் வில்லியம்
இளவரசர் ஓசுகர்
இளவரசர் ஜோக்கிம்
இளவரசி விக்டோரியா லூயிசு
பெயர்கள்
செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht
பிரெடெரிக் வில்லியம் விக்டர் ஆல்பர்ட்
தந்தைபிரெட்ரிக் III
தாய்விக்டோரியா
கையொப்பம்வில்லியம் II's signature
வில்லியம் II