அரசுத் தலைவர்
அரசுத் தலைவர் (Head of government) என்பவர் ஒரு நாட்டு அரசின் செயலாட்சிப் பிரிவில் உயரிய அல்லது இரண்டாவது உயரிய அதிகாரி ஆவார். இவர் பொதுவாக செயலாட்சி அதிகாரம் கொண்ட அமைச்சரவை அல்லது செயலரவையைத் தலைமையேற்று வழிநடத்துவார். நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். அதில் நாட்டுத் தலைவர் அரசராகவோ குடியரசுத் தலைவராகவோ இருப்பார். அரசின் தலைவராக தலைமை அமைச்சர் இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார். பிரான்சு போன்ற சில நாடுகளில் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஆகிய இருவருமே அரசத் தலைவர்களாக செயல்படுகின்றனர். சுவிட்சர்லாந்து மற்றும் சான் மரினோ ஆகிய இரு நாடுகளில் மட்டும் பல்வேறு தலைவர்கள் அடங்கிய குழு அரசை தலைமையேற்று நடத்தும் முறை பின்பற்றப்படுகின்றது[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ As in article 7 of the Vienna Convention on the Law of Treaties, article 1 of the Convention on the Prevention and Punishment of Crimes against Internationally Protected Persons, including Diplomatic Agents and the United Nations protocol list)
- ↑ HEADS OF STATE, HEADS OF GOVERNMENT, MINISTERS FOR FOREIGN AFFAIRS பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், Protocol and Liaison Service, United Nations (19 October 2012). Retrieved 29 July 2013.
- ↑ Vienna Convention on the Law of Treaties 1969 பரணிடப்பட்டது 17 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம், International Law Commission, United Nations. Retrieved 29 July 2013.