நாடாளுமன்ற முறை
நாடாளுமன்ற முறை என்பது ஒரு அரசாட்சி முறைமை ஆகும். இம்முறையில், நிறைவேற்றுப் பிரிவைச்சேர்ந்த அமைச்சர்கள் சட்டவாக்க அவையில் இருந்து தெரியப்படுகின்றனர். இவர்கள் சட்டவாக்க சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பர். இதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்றல் ஆகியவற்றுக்கான பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளன. இந்த அரசாட்சி முறைமையில் அரசுத் தலைவர் நடைமுறையில் தலைமை நிறைவேற்றுனர் ஆகவும் தலைமைச் சட்டவாக்குனர் ஆகவும் செயல்படுவார்.
சனாதிபதி முறையுடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற முறையில், நிறைவேற்றல், சட்டவாக்கப் பிரிவுகளிடையே அதிகாரம் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், இம்முறையில் அரசுத் தலைவருக்கும், நாட்டுத் தலைவருக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உண்டு. "பிரதம அமைச்சர்" அல்லது "பிரதமர்" அரசுத் தலைவராக இருப்பார். நாட்டுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஒரு சடங்குமுறைப் பதவியாக இருப்பது வழக்கம். மக்களால் அல்லது நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படும் சனாதிபதி அல்லது அரசியல்சட்ட முடியாட்சியில் இருப்பது போல ஒரு பரம்பரையாக வரும் அரசர் அல்லது அரசி நாட்டுத் தலைவராக இருப்பார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Decreta of León of 1188 – The oldest documentary manifestation of the European parliamentary system". UNESCO Memory of the World. 2013. Archived from the original on 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 21 May 2016.
- ↑ John Keane: The Life and Death of Democracy, London 2009, 169–176.
- ↑ Sánchez, Isabel (2004). La Diputació del General de Catalunya (1413-1479). Barcelona: Institut d'Estudis Catalans. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788472837508.