அபிய் அகமது
அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார்.[2][3] 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.[4]
அபிய் அகமது அலி Abiy Ahmed Ali | |
---|---|
2018 இல் அபிய் அகமது | |
எத்தியோப்பியாவின் 15-வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 ஏப்ரல் 2018 | |
குடியரசுத் தலைவர் | முலாத்து தெசோமே சாலி-வோர்க் சேவ்தி |
முன்னையவர் | ஐலிமரியாம் தேசாலென் |
எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியின் 3-வது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 மார்ச்சு 2018 | |
Deputy | தெமென்னி மெக்கோனென் |
ஒரோமோ சனநாயகக் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பெப்ரவரி 2018 | |
Deputy | இலெம்மா மெகர்சா |
முன்னையவர் | இலெம்மா மெகர்சா |
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 6 அக்டோபர் 2015 – 1 நவம்பர் 2016 | |
பிரதமர் | ஐலிமரியாம் தெசாலென் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1976 பெசாசா, எத்தியோப்பியா |
அரசியல் கட்சி | ஒரோமோ சனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி |
துணைவர் | சினாசு த்யாச்செவ்[1] |
பிள்ளைகள் | 3 பெண்கள், வளர்ப்பு மகன் ஒருவர் |
கல்வி | மைக்ரோலிங்க் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி (BA) கிரீனிச்சுப் பல்கலைக்கழகம் (முதுகலை) ஆசுலாந்து பல்கலைக்கழகம் (MBA) அடிசு அபாபா பல்கலைக்கழகம் (PhD) |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2019) |
இணையத்தளம் | FDRE Office of the Prime Minister |
Military service | |
பற்றிணைப்பு | எதியோப்பியா |
கிளை/சேவை | எத்தியோப்பிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1991–2010 |
தரம் | லெப். கேணல் |
போர்கள்/யுத்தங்கள் | எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் ஐநா உருவாண்டா பணி எரித்திரிய-எத்தியோப்பியப் போர் |
ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி,[5] ஒரோமோ சனநாயகக் கட்சி[6] ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[7]
அக்டோபர் 2021 இல், அபி 5 அகமது இரண்டாவது முறையாக 5 ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
வாழ்க்கை வரலாறு
தொகுஇளமை
தொகுஅபிய் அகமது எத்தியோப்பியாவில், காப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் 1976 ஆகத்து 15 ஆம் நாளன்று பிறந்தார்.[8][9][10] இவருடைய தந்தையார் அகமது அலி ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இசுலாமியர்.[11] அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த[12][13] எத்தியோப்பிய மரபு கிறித்துவரான[14] இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே,[15] இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார்.[16])
அபிய் அகமது அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகன். இவரின் தந்தையாருக்கு இவர் 13 ஆவது மகவு.[8][12] இவருடைய இளமைக்கால பெயர் அபியோத்து தமிழில்: "புரட்சி"). 1974 இல் நடந்த எத்தியோப்பியப் புரட்சிக்குப் பிறகு இப்படியான பெயர்கள் கொள்வது வழக்கமாக இருந்தது.[8] அப்பொழுது அபியோத்து என்றறியப்பட்ட அபிய் அகமது உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்தார். பின்னர் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். பல ஆவணங்களின் படி இவர் கல்வியில் மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். பிறருக்கும் கல்வியில் அக்கறை கொள்ளச்செய்தார்.[8]
அகவாழ்க்கை
தொகுஅபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் அம்ஃகாரா இனத்துப் பெண்மணியை[8][12] எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது[17] சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் கோந்தார் என்னும் மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும், தத்து எடுத்துக்கொண்ட ஒரு மகனும் உள்ளனர்.[17] அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் ஒரோமோ, அம்ஃகாரி, திகிரினியா, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும்.[18] இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர்.[17] இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர்.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Lady". FDRE Office of the Prime Minister. Archived from the original on 2019-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
- ↑ "Prime Minister". The Federal Democratic Republic of Ethiopia’s Office of the Prime Minister. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dr Abiy Ahmed sworn in as Prime Minister of Ethiopia". 2018-04-01 இம் மூலத்தில் இருந்து 2018-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180513170416/http://www.fanabc.com/english/index.php/news/item/11721-dr-abiy-ahmed-sworn-in-as-prime-minister-of-ethiopia.
- ↑ Busby, Mattha (2019-10-11). "Ethiopian prime minister Abiy Ahmed wins 2019 Nobel peace prize – live news" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/live/2019/oct/11/nobel-peace-prize-greta-thunberg-abiy-ahmed-jacinda-ardern-among-those-tipped-win-live-news.
- ↑ "EPRDF elects Abiy Ahmed chair". The Reporter. 2018-03-27. https://www.thereporterethiopia.com/index.php/article/eprdf-elects-abiy-ahmed-chair. பார்த்த நாள்: 2018-03-28.
- ↑ "Ethiopia's ODP picks new chairman in bid to produce next Prime Minister". Africa News. 22 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
- ↑ Keane, Fergal (3 January 2019). "Ethiopia's Abiy Ahmed: The leader promising to heal a nation". BBC News. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 Endeshaw, Dawit (2018-03-31). "The rise of Abiy 'Abiyot' Ahmed". The Reporter. https://www.thereporterethiopia.com/article/rise-abiy-abiyot-ahmed. பார்த்த நாள்: 2018-03-31.
- ↑ "Abiy Ahmed Ali". DW.com (in ஸ்வாஹிலி). 28 March 2018.
- ↑ Girma, Zelalem (31 March 2015). "Ethiopia in democratic, transformational leadership". Ethiopian Herald இம் மூலத்தில் இருந்து 6 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180506104159/http://www.ethpress.gov.et/herald/index.php/society/item/11415-ethiopia-in-democratic-transformational-leadership.
- ↑ Sengupta, Somini (2018-09-17). "Can Ethiopia's New Leader, a Political Insider, Change It From the Inside Out?". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/09/17/world/africa/ethiopia-abiy-ahmed.html. பார்த்த நாள்: 2018-09-18.
- ↑ 12.0 12.1 12.2 "Dr. Abiy Ahmed's diversity portfolio". Satenaw News. 2018-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ "The Guardian view on Ethiopia: change is welcome, but must be secured". தி கார்டியன். 2019-01-07. https://www.theguardian.com/commentisfree/2019/jan/07/the-guardian-view-on-ethiopia-change-is-welcome-but-must-be-secured.
- ↑ Boko, Hermann (30 July 2018). "Abiy Ahmed: Ethiopia's first Oromo PM spreads hope of reform" (in English, translated from the original French). [FRANCE 24. https://www.france24.com/en/20180730-abiy-ahmed-spreads-hope-reform-ethiopia. பார்த்த நாள்: 14 April 2019.
- ↑ Endeshaw, Dawit (13 March 2018). "The rise of Abiy "Abiyot" Ahmed". The Reporter. https://www.thereporterethiopia.com/article/rise-abiy-abiyot-ahmed. பார்த்த நாள்: 14 April 2019.
- ↑ Endeshaw, Dawit (31 March 2018). "The rise of Abiy "Abiyot" Ahmed". The Reporter. https://www.thereporterethiopia.com/article/rise-abiy-abiyot-ahmed. பார்த்த நாள்: 25 March 2019.
- ↑ 17.0 17.1 17.2 "Dr Abiy Ahmed interview with Amhara TV". ZeHabesha TV. 21 November 2017. Archived from the original on 1 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019 – via YouTube.
- ↑ Manek, Nizar (4 April 2018). "Can Abiy Ahmed save Ethiopia?". Foreign Policy. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "God wants Ethiopians to prosper: The prime minister and many of his closest allies follow a fast-growing strain of Christianity". தி எக்கனாமிஸ்ட். 24 November 2018.