அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்[1].

நோபல் அமைதிப் பரிசு
Nobel Peace Prize
விளக்கம்அமைதிக்காகப் பங்களிப்பு வழங்கியமை
Locationஒஸ்லோ, நோர்வே
வழங்குபவர்நோர்வே நோபல் குழு
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்Nobelprize.org

ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான திசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள் தொகு

இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.

முழுப்பட்டியல்:

2020 உலக உணவுத் திட்டம் (பட்டினியை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்காக கிடைத்தது)
2019 அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali)
2018 டெனிசு முக்வேகி (Denis Mukwege) மற்றும் நாதியா முராது (Nadia Murad)
2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு (International Campaign to Abolish Nuclear Weapons - )
2016 குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியா (Juan Manuel Santos - Colombia)
2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisian National Dialogue Quartet)
2014 கைலாசு சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசப்சையி (கூட்டாக)[2]
2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு
2012 ஐரோப்பிய ஒன்றியம்
2011 எல்லன் சர்லீஃப் (Ellen Sirleaf), லேமா குபோவீ (Leymah Gbowee) மற்றும் தவகேல் கர்மன் (Tawakkul Karman)
2010 லியூ சியாபோ (Liu Xiaobo)
2009 பராக் ஒபாமா (Barack Obama),
2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari)
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோபி அன்னான் (Kofi Annan)
2000 கிம் டாய் ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines), ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா (José Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்சாக் ரபீன் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev)
1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெசுமான்ட் டுட்டு (Desmond Tutu)
1983 லேக் வலேசா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சாதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
1977 சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
1976 பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan)
1975 ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov)
1974 ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato)
1973 ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
1972 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1971 விலி ப்ராண்ட் (Willy Brandt)
1970 நார்மன் போர்லாக் (Norman Borlaug)
1969 சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization)
1968 ரெனே கேசின் (René Cassin)
1967 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1966 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1965 ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
1964 மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King)
1963 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies)
1962 இலைனஸ் பௌலிங் (Linus Pauling)
1961 டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld)
1960 ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli)
1959 பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker)
1958 ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire)
1957 இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson)
1956 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1955 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1954 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1953 ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall)
1952 ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer)
1951 இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux)
1950 ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche)
1949 பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr)
1948 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1947 நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee)
1946 எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott)
1945 கார்டல் ஹள் (Cordell Hull)
1944 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross)
1943 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1938 நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees)
1937 இராபர்ட் செசில் (Robert Cecil)
1936 கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas)
1935 கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky)
1934 ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson)
1933 சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell)
1932 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1931 ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler)
1930 நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom)
1929 ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg)
1928 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1927 ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde)
1926 அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann)
1925 சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes)
1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1922 ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen)
1921 ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange)
1920 இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois)
1919 ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson)
1918 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1917 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross)
1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1914 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1913 ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine)
1912 எலிஃகூ இரூட் (Elihu Root)
1911 டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried)
1910 சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau)
1909 அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant)
1908 க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer)
1907 எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault)
1906 தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt)
1905 பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner)
1904 சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law)
1903 இராண்டல் க்ரெமர் (Randal Cremer)
1902 எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat)
1901 ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy)

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  2. http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141210_nobelprice

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதிக்கான_நோபல்_பரிசு&oldid=3530425" இலிருந்து மீள்விக்கப்பட்டது