லெனின் அமைதிப் பரிசு

சோவியத் ஒன்றியத்தின் பன்னாட்டு லெனின் அமைதிப் பரிசு (International Lenin Peace Prize, {{lang-ru|международная Ленинская премия мира) அமைதிக்கான நோபல் பரிசினை ஒத்த அமைதிப் பரிசாகும். முதலில் மக்களிடையே அமைதியை வலுவாக்க பன்னாட்டு ஸ்டாலின் அமைதிப் பரிசு என்றிருந்தது அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே அமைதியை வலுவாக்க பன்னாட்டு லெனின் அமைதிப் பரிசு(உருசியம்: Международная Ленинская премия «За укрепление мира между народами» என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சோவியத் அரசினால் நியமிக்கப்படும் குழுவொன்று இப்பரிசினை வழங்கியது.

லெனின் அமைதிப் பரிசு பதக்கம்

ஸ்டாலின் அமைதிப்பரிசு 21 டிசம்பர் 1949 இல் ஸ்டாலினின் நினைவாக ஒப்பற்ற சோவியத்தின் தலைமையால் (Presidium of the Supreme Soviet) அவரது எழுபதாவது பிறந்தநாளில் நிறுவப்பட்டது. நோபல் பரிசினைப் போலன்றி ஸ்டாலின் அமைதிப்பரிசு ஒரு வருடத்தில் பலருக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலும் பொதுவுடைமையாளர்களுக்கும் சோவியத் ஒன்றியத்தினை ஆதரித்தோருக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.

நிக்கிட்டா குருசேவ்வின் ஆட்சியில் செப்டெம்பர் 6 1956இல் நடந்த சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இருபதாவது மாநாட்டில் இப்பரிசு மக்களிடையே அமைதியை வலுவாக்க பன்னாட்டு லெனின் அமைதிப் பரிசு என பெயர் மாற்றப்பட்டது. முன்னதாக பரிசு பெற்ற அனைவரும் தங்கள் பரிசுகளை திருப்பி புதிய லெனின் பரிசினைப்பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். டிசம்பர் 11 1989 இல் இப்பரிசு லெனின் அமைதிப்பரிசு என பெயரிடப்பட்டது.(உருசியம்: международная Ленинская премия мира)[1]. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் வந்த உருசிய அரசு இப்பரிசினை நிறுத்தியது.

இந்தியாவிலிருந்து இப்பரிசினை வென்றவர்கள்:

  • சாய்புதின் கிட்ச்லு (1952)
  • சர் சாகிப்சிங் சோகே (1953)
  • சர் சி.வி.ராமன் (1957)
  • இராமேஷ்வரி நேரு(பி. 1886) (1961)
  • அருணா அசஃப் அலி (1964)
  • ரோமேஷ் சந்திரா (1967)
  • கே.பி.எஸ்.மேனன் (1977-78)
  • இந்திரா காந்தி (1983-84)

கடைசியாக இப்பரிசு நெல்சன் மண்டேலா1 (1990)[2]

1. 1990ஆம் வருடத்திற்கான பரிசு அவர் தென்னாப்பிரிக்கா சிறையில் இருந்த காரணத்தால் 2002ஆம் ஆண்டுதான் பெற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள்தொகு

  1. "ПОСТАНОВЛЕНИЕ ПРЕЗИДИУМА ВС СССР ОТ 11.12.1989 N 905-1 О МЕЖДУНАРОДНОЙ ЛЕНИНСКОЙ ПРЕМИИ МИРА" (உருசியன்). 2006-10-12.CS1 maint: Unrecognized language (link)
  2. (in உருசியன்) The Great Encyclopedic Dictionary. Moscow: Sovetskaya Enciklopediya. 1991. vol. 1, p. 759. 

மேலும் பார்க்கதொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனின்_அமைதிப்_பரிசு&oldid=3670195" இருந்து மீள்விக்கப்பட்டது