காந்தி அமைதிப் பரிசு

காந்தியவாதி

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு (International Gandhi Peace Prize) மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு
Gandhi Peace Award Medallion - front side.jpg
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசின் சின்னம்
வழங்குவோர்இந்திய அரசு
விருது(கள்) 1 கோடி (10 மில்லியன்)
முதலில் வழங்கப்பட்டது1995
கடைசியாக வழங்கப்பட்டது2021
சிறப்பம்சங்கள்
மொத்தம் வழங்கப்பட்டவை19
முதலில் வாங்கியவர்ஜூலியஸ் நைரேர்
கடைசியாக வாங்கியவர்சேக் முஜிபுர் ரகுமான்

அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995 ஆம் ஆண்டு, காந்தியின் 125 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன், ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.

காந்தி பரிசு பெற்றவர்கள்தொகு

அந்த ஆண்டிற்கான கூட்டு விருதைக் குறிக்கிறது
வ. எண் ஆண்டு பெறுநர் படம் பிறப்பு / இறப்பு .நாடு விவரம்
1 1995 ஜூலியஸ் நைரேர்[1]   1922–1999   தன்சானியா ஜூலியஸ் கம்பரேஜ் நைரேர் டான்சானியா அரசியல்வாதியும், அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
2 1996 ஏ. டி. ஆரியரத்னே[1]   பி. 1931   இலங்கை சர்வோதயா சிரமதான இயக்கம் நிறுவனர்.
3 1997 கெர்ஹார்ட் ஃபிஷர்[2][3]  – 1921–2006   செருமனி ஜெர்மன் தூதர், தொழு நோய் மற்றும் போலியோ நோய்களுக்கெதிரான இவர் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
4 1998 இராமகிருசுண இயக்கம்[1]  – உருவாக்கம். 1897   இந்தியா பின்தங்கிய குழுக்களிடையே சமூக நலன், சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்காக, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
5 1999 பாபா ஆம்தே[4][1]  – 1914–2008   இந்தியா சமூக சேவகர், குறிப்பாக தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை கவனிப்பதில் அக்கறை காட்டினார்.
6 2000 நெல்சன் மண்டேலா (கூட்டாக)   1918-2013   தென்னாப்பிரிக்கா முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர்
கிராமின் வங்கி (கூட்டாக)  – உருவாக்கம். 1983   வங்காளதேசம் முகமது யூனுஸ் நிறுவியது
7 2001 ஜான் ஹூம்[5][1]   1937–2020   ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து அரசியலாளர், வட அயர்லாந்து அமைதிக்கான முன்னெடுப்பில் முக்கிய நபர்.
8 2002 பாரதிய வித்தியா பவன்[1]  – உருவாக்கம். 1938   இந்தியா இந்திய கலாச்சாரத்தை வலியுறுத்தும் கல்வி நிறுவனம்
9 2003 வாக்லாவ் அவொல்   1936–2011   செக் குடியரசு செக்கோசிலோவாக்கியாவின் கடைசி குடியரசுத் தலைவரும், செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
10 2004 கோரெட்டா ஸ்காட் கிங்[1]   1927–2006   ஐக்கிய அமெரிக்கா செயற்பாட்டாளர் மற்றும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தலைவர்.
11 2005 டெசுமான்ட் டுட்டு[6]   பி. 1931   தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க மதகுரு மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க சமூக உரிமை ஆர்வலர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார், இவர் 1980-களில் நிறவெறியை எதிர்ப்பவராக, உலகளாவிய புகழ் பெற்றார்.
12 2013 சாண்டி பிரசாத் பட்   பி. 1934   இந்தியா சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக ஆர்வலர் மற்றும் சிப்கோ இயக்கத்தின் முன்னோடி.
13 2014 இஸ்ரோ[7]   உருவாக்கம். 1969   இந்தியா இந்திய அரசின் விண்வெளி நிறுவனம். விண்வெளி தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதும் அதன் பயன்பாடுகளை வழங்குவதும் குறிக்கோள் ஆகும்.
14 2015 விவேகானந்த கேந்திரம் [8] உருவாக்கம். 1972   இந்தியா சுவாமி விவேகானந்தர் பிரசங்கித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்து ஆன்மீக அமைப்பு.
15 2016 அட்சய பாத்திரம் அறக்கட்டளை உருவாக்கம்.2000   இந்தியா இந்தியா முழுவதும் பள்ளி மதிய உணவு திட்டத்தை நடத்தும் இந்தியாவில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு
சுலாப் இன்டர்நேஷனல் உருவாக்கம். 1970   இந்தியா மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், பாரம்பரியமற்ற எரிசக்தி ஆதாரங்கள், கழிவு மேலாண்மை மற்றும் கல்வி மூலம் சமூக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு சமூக சேவை அமைப்பு.
16 2017 ஏகல் வித்யாலயா   இந்தியா தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பங்களிப்பு.
17 2018 யோகே சாசகவா   பி. 1939   சப்பான் இந்தியாவிலும், உலகெங்கிலும் தொழு நோய் ஒழிப்பில் இவரது பங்களிப்புக்காக.[9]
18 2019 காபூசு பின் சயீது அல் சயீது   1940-2020   ஓமான் அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பங்களிப்புகளுக்கு.[10]
19 2020 சேக் முஜிபுர் ரகுமான்   1920-1975   வங்காளதேசம் அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு.[11]

மேற்கோள்கள்தொகு

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_அமைதிப்_பரிசு&oldid=3239432" இருந்து மீள்விக்கப்பட்டது