அகிம்சை

காயப்படுத்த வேண்டாம்' அல்லது ‘இரக்க உணர்வு

அகிம்சை, அல்லது அஹிம்சை (ஒலிப்பு) (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி:[1] ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.[2][3][4]

மகாவீரா்

“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள்.[5][6] அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.[7]

சைனம், இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.[3] அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்துகளைக் கொண்டது.[8] பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அகிம்சைக் கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அகிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அகிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது.[3][9] பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் அகிம்சை மற்றும் புலால் மறுத்தலை தனிநபர் நற்பண்புகளாக வலியுறுத்தி அவற்றை தனது நூலின் மைய போதனைகளாக அமைத்தார்.[10] மிகப் பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்தாமை‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Rune E. A. Johansson (6-12-2012). Pali Buddhist Texts: An Introductory Reader and Grammar. Routledge. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-11106-8. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. "Sanskrit dictionary reference". Archived from the original on 2020-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  3. 3.0 3.1 3.2 Stephen H. Phillips & other authors (2008), in Encyclopedia of Violence, Peace, & Conflict (Second Edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373985-8, Elsevier Science, Pages 1347–1356, 701–849, 1867
  4. Dundas, Paul: The Jains, second edition, London 2002, p. 160; Wiley, Kristi L.: Ahimsa and Compassion in Jainism, in: Studies in Jaina History and Culture, ed. Peter Flügel, London 2006, p. 438; Laidlaw pp. 153–154.
  5. Mayton, D. M., & Burrows, C. A. (2012), Psychology of Nonviolence, The Encyclopedia of Peace Psychology, Vol. 1, pages 713–716 and 720–723, Wiley-Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9644-4
  6. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், see Ahimsa
  7. Bajpai, Shiva (2011). The History of India - From Ancient to Modern Times, Himalayan Academy Publications (Hawaii, USA), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-38-8; see pages 8, 98
  8. John Arapura in K. R. Sundararajan and Bithika Mukerji Ed. (1997), Hindu spirituality: Postclassical and modern, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1937-5; see Chapter 20, pages 392–417
  9. Chapple, C. (1990). Nonviolence to animals, earth and self in Asian Traditions (see Chapter 1). State University of New York Press (1993)
  10. Das, G. N. (1997). Readings from Thirukkural. Abhinav Publications. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-1701-7342-6.
  11. Gandhi, M. (2002). The essential Gandhi: an anthology of his writings on his life, work, and ideas. Random House Digital, Inc.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிம்சை&oldid=3913598" இலிருந்து மீள்விக்கப்பட்டது