1949
1949 (MCMXLIX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 25 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
- ஜனவரி 25 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமாரானார்.
- ஜனவரி 26 - அவுஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
- மார்ச் 25 - பால்டிக் குடியரசுகளில் இருந்து 92,000 பேர் சோவியத் ஒன்றியத்தின் தூர இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- மே 12 - ஐக்கிய அமெரிக்காவிற்கான இந்தியாவின் முதல் பெண் தூதராக விஜயலட்சுமி பண்டிட் பதவியேற்றார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற அமெரிக்காவிற்கான மூன்றாவது தூதராவார்.
- ஜூன் 29 - கடைசி அமெரிக்கப் படையினர் தென் கொரியாவில் இருந்து வெளியேறினர்.
- ஆகஸ்ட் 5 - 6.75 அளவு நிலநடுக்கம் ஈக்குவாடோரில் இடம்பெற்றதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 8 - பூட்டான் விடுதலை அடைந்தது.
- ஆகஸ்ட் 29 - சோவியத் ஒன்றியம் தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
- செப்டம்பர் 7 - ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு (மேற்கு ஜேர்மனி) உத்தியோகபூர்வமாக உருவாகியது. கொன்ராட் அடெனோர் அதன் முதலாவது அதிபரானார் (federal chancellor)
- செப்டம்பர் 13 - இலங்கை, இத்தாலி உட்பட 6 நாடுகள் ஐநா சபையில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை செய்தது.
- அக்டோபர் 1 - சீன மக்கள் குடியரசு உருவானது.
- அக்டோபர் 7 - ஜேர்மன் சனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி) உருவானது.
- நவம்பர் 15 - மகாத்மா காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக நாதூராம் கோட்சே, நாராயண் அப்டே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- டிசம்பர் 16 - சுகர்னோ இந்தோனீசியாவின் அதிபரானார்.
- டிசம்பர் 30 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
பிறப்புகள்
தொகு- சனவரி 10 - லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (இ. 2002)
- சனவரி 12 - அருக்கி முரகாமி, யப்பானிய எழுத்தாளர்
- மார்ச் 7 - குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி
- மார்ச் 12 - ரோப் கோஹன், அமெரிக்க இயக்குனர்
- மார்ச் 13 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (இ. 2015)
- ஏப்ரல் 13 - கிறித்தபர் ஃகிச்சின்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)
- சூன் 22 - மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க நடிகை
- சூலை 8 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (இ 2009)
- ஆகஸ்டு 31 - ரிச்சர்ட் கியர், அமெரிக்க நடிகர்
- அக்டோபர் 6 - பொபி ஃபாரெல், பொனி எம் இசைக்குழுக் கலைஞர் (இ. 2010)
- அக்டோபர் 8 - சிகர்னி வேவர், அமெரிக்க நடிகை
- அக்டோபர் 21 - பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேல் பிரதமர்
- அக்டோபர் 22 - அர்சென் வெங்கர், பிரெஞ்சு காற்பந்தாட்ட வீரர்
- டிசம்பர் 1 - பப்லோ எசுகோபர், கொலம்பிய போதைப் பொருள் கடத்தல் காரர்
- டிசம்பர் 1 - செபஸ்டியான் பினேரா, சிலி அரசுத்தலைவர்
- டிசம்பர் 4 - ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்
- டிசம்பர் 12 - பில் நை, ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
தொகு- அக்டோபர் 29 - ஜார்ஜ் குர்ச்சீயெவ், உருசிய ஆன்மீகவாதி (பி. 1866)
- நவம்பர் 15 - நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியின் கொலையாளி (பி. 1910)
- நவம்பர் 15 - நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியின் கொலையாளி (பி. 1911)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - யூக்காவா ஹிடேக்கி (Yukawa Hideki)
- வேதியியல் - வில்லியம் ஜியாக் (William Francis Giauque)
- மருத்துவம் - வோல்டர் ஹெஸ் (Walter Rudolf Hess), அன்டோனியோ மொனிஸ் (Antonio Caetano De Abreu Freire Egas Moniz)
- இலக்கியம் - வில்லியம் ஃபோக்னர் (William Faulkner)
- அமைதி - ஜோன் ஓர் (John Boyd Orr)