சலாகுதீன் காதர் சௌத்ரி

வங்கதேச அரசியல்வாதி

சலாகுதீன் காதர் சௌத்திரி (Salahuddin Quader Chowdhury; வங்காள மொழி: সালাউদ্দিন কাদের চৌধুরী; மார்ச் 13, 1949[1]நவம்பர் 22, 2015)[3] வங்காளதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகர் ஆவார். சிட்டகொங் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார்.[4] 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது போர்க் குற்றங்கள் இழைத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. க் குற்றஞ்சாட்டப்பட்டது.[5] 2013 செப்டம்பர் 30 இல் இவர் மீதான போர்க் குற்றங்களுக்கு மரண தண்டனை என பன்னாட்டு குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[6] இவரது மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் 2015 நவம்பர் 18 அன்று நிராகரித்தது. அதன் பின்னர் அவர் குடியரசுத் தலவரிடம் பொது மன்னிப்பு வேண்டி முறையிட்டார். அம்மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில்[7] இவரும், இவரது இன்னொரு சகாவான அலி முகம்மது முஜாகீது என்பவரும் 2015 நவம்பர் 22 அன்று காலையில் சிட்டகொங் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தூக்கிலிடப்பட்டனர்.[5][8][9]

சலாகுதீன் காதர் சௌத்திரி
Salahuddin Quader Chowdhury
பிறப்பு(1949-03-13)மார்ச்சு 13, 1949
இறப்புநவம்பர் 22, 2015(2015-11-22) (அகவை 66) [1]
சிற்றறைச் சிறை, டாக்கா
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை
கல்லறைசிட்டகொங்
பணிஅரசியல்வாதி
அறியப்படுவதுஅரசியல், போர்க்குற்றம்
சொந்த ஊர்ரோசான், சிட்டகொங், பாக்கித்தான்
பட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்
பதவிக்காலம்1979-1983, 1986-1987, 1988-1990, 1996-2000, 2001-2005, 2008-2012
அரசியல் கட்சிவங்காளதேச தேசியவாதக் கட்சி
சமயம்இசுலாம்
குற்றச்செயல்சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, படுகொலைகள் என 23 குற்றச்சாட்டுகள்.[2]
Criminal penaltyமரணதண்டனை
பெற்றோர்பாசுலுல் காதர் சௌத்திரி (தந்தை)

இளமைக்காலம்

தொகு

இவர் சிட்டகாங் பகுதியியை சார்ந்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பாஸ்லூல் காதர் செளத்ரி வங்கதேச விடுதலைக்கு முன் பாகிஸ்தான் தேசியக்கட்சியைச் சேர்ந்தவர். மேலும் இவர் வங்கதேச விடுதலையை எதிர்த்தவர். எனவே இவர் மீதும் போர் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும் போது சிறைச்சாலையில் மரணமடைந்தார்.[10]

போர்க்குற்றங்கள்

தொகு
  • 7 இந்துச் சிறார்களைக் கடத்தியது அவர்களில் 6 பேரைக் கொன்றது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து மாத்யா கோரிராவைக் கொலைசெய்தது.
  • குண்டேஷ்வரி ஒளஷதயாலா நிர்வாகி மற்றும் சமூக சேவகரான நூட்டன் சந்திரா சின்ஹாவைக் கொலைசெய்தது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து அர்சான் பகுதியில் 32 பேரைக் கொன்றது மற்றும் கற்பழிப்பு, திருட்டு.
  • சதீஷ் சந்திர பாலித் என்பவரை வீட்டோடு எரித்துக் கொன்றது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஷாஹாபுரா பகுதியில் 76 இந்து மக்களைக் கொன்றது.

மேலும் பல.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://bangla.bdnews24.com/bangladesh/article1003463.bdnews
  2. Vishakha Sonawane (18 November 2015). "Bangladeshi Supreme Court Rejects Appeals Of 2 Senior Leaders Convicted Of War Crimes, Upholds Death Sentence". International Business Times.
  3. "Two top Bangladesh war criminals hanged" (in en-IN). The Hindu. 2015-11-22. http://www.thehindu.com/news/international/two-top-bangladesh-war-criminals-hanged/article7904194.ece. 
  4. "9th Parliament MP List" (PDF). Jatiyo Sangshad. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 April 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. 5.0 5.1 Sarkar, Kailash (17 December 2010). "SQ Chy remanded". The Daily Star. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=166365. பார்த்த நாள்: 20 April 2011. 
  6. "போர்க்குற்றம்: இன்னொரு பங்களாதேஷ் அரசியல்வாதிக்கு மரண தண்டனை".
  7. "Bangladesh president rejects mercy plea of 2 war criminals - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  8. "Charges against SQ Chy". Dhaka Tribune. 1 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001064124/http://www.dhakatribune.com/law-amp-rights/2013/oct/01/charges-against-sq-chy. பார்த்த நாள்: 1 October 2013. 
  9. "Bangladesh MP Salahuddin Quader Chowdhury to hang for war crimes". பிபிசி. 1 October 2013. http://www.bbc.co.uk/news/world-asia-24344868. பார்த்த நாள்: 1 October 2013. 
  10. "Fazlul Quader Chowdhury".
  11. "9 war crimes charges proven against SQ Chy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாகுதீன்_காதர்_சௌத்ரி&oldid=3583935" இலிருந்து மீள்விக்கப்பட்டது