சூலை 27
நாள்
(ஜூலை 27 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 27 (July 27) கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.
- 1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது.
- 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.
- 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது.
- 1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
- 1794 – பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
- 1816 – நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.
- 1862 – சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர்.
- 1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர்.
- 1890 – இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.
- 1919 – சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.
- 1921 – இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 1929 – போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் அச்சு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.
- 1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
- 1955 – ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
- 1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.
- 1955 – மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1964 – வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.
- 1975 – விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1981 – மெக்சிக்கோவில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில்னாதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.[1]
- 1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
- 1989 – கொரிய விமானம் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.
- 1990 – பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1990 – திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
- 1996 – அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது.
- 1997 – அல்சீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2002 – உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
- 2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1759 – பியேர் உலூயிசு மவுபெர்திசு, பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1698)
- 1801 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)
- 1850 – ஜார்ஜ் எட்வர்டு டேவிஸ், ஆங்கிலேய வேதிப் பொறியியலாளர் (இ. 1907)
- 1853 – விளாதிமிர் கொரலென்கோ, உக்ரைனிய எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1921)
- 1876 – தேசிக விநாயகம்பிள்ளை, தமிழகக் கவிஞர் (இ. 1954)
- 1879 – சோமசுந்தர பாரதியார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1959)
- 1881 – ஆன்சு பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1945)
- 1897 – ச. வெள்ளைச்சாமி, கொடைவள்ளல், சமூக சேவகர் (இ. 1983)
- 1907 – மௌனி, தமிழக எழுத்தாளர் (இ. 1985)
- 1911 – சங்கம் லக்ஷ்மி பாய், இந்திய சமூக ஆர்வலர், அரசியல்வாதி (இ. 1979)
- 1921 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1926 – நுவான் சியா, கம்போடிய அரசியல்வாதி, கெமர் ரூச்சின் தலைமைக் கருத்தாளர் (இ. 2019)
- 1927 – செல்லையா இராசதுரை, இலங்கை அரசியல்வாதி
- 1940 – பாரதி முகர்ஜி, இந்திய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2017)
- 1940 – கா. அ. ஜெயசீலன், மலையாளக் கவிஞர்
- 1942 – திருச்சி சங்கரன், தமிழக மிருதங்கக் கலைஞர்
- 1955 – அலன் போடர், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1960 – உத்தவ் தாக்கரே, இந்திய அரசியல்வாதியும், சிவ சேனாவின் தலைவர்
- 1963 – சித்ரா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1965 – சசிகலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1967 – ராகுல் போஸ், இந்திய நடிகர்
- 1972 – மாயா ருடால்ப், அமெரிக்க நடிகை
- 1977 – ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஐரிய நடிகர்
- 1987 – அருள்நிதி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1990 – கிருத்தி சனோன், இந்திய நடிகை
இறப்புகள்
- 1844 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1776)
- 1929 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1846)
- 1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)
- 1960 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (பி. 1890)
- 1963 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1877)
- 1963 – ச. து. சு. யோகி, தமிழகத் தமிழறிஞர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் (பி. 1904)
- 1970 – பட்டம் தாணு பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், \காந்தியவாதி (பி. 1885)
- 1975 – அல்பிரட் துரையப்பா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1926)
- 1980 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானிய மன்னர் (பி. 1919)
- 1981 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர் (பி. 1898)
- 1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)
- 1988 – மீ. கல்யாணசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1909)
- 1992 – அம்ஜத் கான், இந்தித் திரைப்பட நடிகர் (பி. 1940)
- 1994 – கெவின் கார்ட்டர், தென்னாப்பிரிக்க ஊடகவியலாளர் (பி. 1960)
- 2015 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழக அறிவியலாளர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (பி. 1931)
- 2016 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (பி. 1938)
- 2017 – தரம்சிங், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் (பி. 1936)
சிறப்பு நாள்
- விடுதலைப் போர் வெற்றி நாள் (வட கொரியா)
மேற்கோள்கள்
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident McDonnell Douglas DC-9-32 XA-DEN Chihuahua-Gen Fierro Villalobos Airport (CUU)". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.