சசிகலா (நடிகை)

இந்திய நடிகை

சசிகலா (Sasikala) (பிறப்பு 27 July 1965) என்று தமிழில் அறியப்பட்ட சசி கௌர் மல்கோத்ரா(Shashi Kaur Malhotra) இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் இளமை காலங்கள் திரைப்படத்தில் அறிமுகமான இவர் சுமார் 33 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இரஜினி என்ற பெயரில் தெலுங்குத் திரைப்பட உலகில் அறியப்பட்டார்.

சசிகலா
பிறப்புசசி கௌர் மல்கோத்ரா
27 சூலை 1965 (1965-07-27) (அகவை 59)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்இரஜினி
செயற்பாட்டுக்
காலம்
1983–1993
வாழ்க்கைத்
துணை
டாக்டர் முல்லகிரி பிரவீன் (தி. 1998)
பிள்ளைகள்3

திரைப்படங்கள்

தொகு

தெலுங்கில் தொரக்கனி தொங்கா,[1] (1988) , பரஜால மனுஷி [2] (1990) ரெண்டு ரெல்லு ஆறு (1986), சீதாராம கல்யாணம் (1986), ஆஹா நா பெல்லண்ட்டா (1987), மஜ்னு (1987) உட்பட 150 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஜெய் கர்நாடகா (1989), மிஸ்டர் இந்தியா (இந்தி) (1987) நீனு நக்கரே ஹாலு சக்கரே (1991) (கன்னடம்) போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் இவர் பரதனின் மலையாளப் படமான பத்தேயம் என்பதில் (1993) நடித்தார்.[3] தமிழ் திரையுலகில் சசிகலா என்று அழைக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

தொகு

டாக்டர் முல்லகிரி பிரவீன் என்பவரை 1998இல் திருமணம் செய்து கொண்டார்; இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.[4]

திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dorakani Donga (1988)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  2. "Prajala Manishi (1990) | V CINEMA - Movie, Review, Cast, Songs & Release Date". www.vcinema.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  3. "Rajani photo gallery - Telugu cinema actress". idlebrain.com.
  4. "Interview With Actress Rajini (Part 5)". Archived from the original on 21 December 2021 – via YouTube.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_(நடிகை)&oldid=3922418" இலிருந்து மீள்விக்கப்பட்டது