பரதன் (திரைப்பட இயக்குநர்)

இந்தியத் திரைப்பட இயக்குநர்

பரதன் (Bharathan) (14 நவம்பர் 1946 – 30 ஜூலை 1998) இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார். 1980 பத்மராஜன் மற்றும் கே. ஜி. ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து மலையாளத் திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் போன்ற பலராலும் பாராட்டப்பட்டு புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. மேலும், 1990களில் இந்த பள்ளியில் சிபி மலையில், கமல், அ. க. லோகிததாசு மற்றும் ஜெயராஜ் ஆகியோரும் இதில் இணைந்தனர்.

பரதன்
பிறப்பு(1946-11-14)14 நவம்பர் 1946
என்காக்காடு, வடக்காஞ்சேரி, திருச்சூர், கொச்சி இராச்சியம்
இறப்பு30 சூலை 1998(1998-07-30) (அகவை 51)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிகலை இயக்குநர், சிற்பி, சுவரொட்டி வடிவமைப்பாளர், திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1973 – 98
வாழ்க்கைத்
துணை
கே. பி. ஏ. சி. லலிதா (1978 – 98)
பிள்ளைகள்சிறீகுட்டி, சித்தார்த் பரதன்
உறவினர்கள்பி. என். மேனன் ( மாமா)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

திருச்சூர், நுண்கலைக் கல்லூரியில் தனது பட்டய சான்றினை முடித்த பின்னர், 1972இல் அ. வின்சென்ட் இயக்கிய "கந்தர்வசேத்திரம்" என்ற படத்தின் மூலம் பரதன் ஒரு கலை இயக்குநராக திரைப்படங்களில் அறிமுகமானார். பரவலாக அறியப்படும் இயக்குநரான இவரது மாமா பி. என். மேனன், மூலம் ஈர்க்கப்பட்டார். அவருடைய சில திரைப்படங்களில் ஒரு கலை இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு பத்மராஜனின் கதையை அடிப்படையாகக் கொண்ட "பிரயாணம்" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[1]

பாணி மற்றும் கருப்பொருள்கள்

தொகு

கேரளாவில் கிராமப்புற வாழ்க்கையின் உண்மையான யதார்த்தத்தை இவரது படங்கள் நன்கு பிரதிபலித்தது. இந்திய திரைப்படத்தில் பிரபலமாக இருந்த நட்சத்திர ஆதிக்கக் கலாச்சாரத்தை, இவர் தனது தொழிலின் மூலம் முழுவதுமாகத் தகர்த்தெறிந்தார். இவரது பிற திரைப்படங்களில் முக்கிய திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் வழக்கமாக கதை அல்லது கதை சொல்லும் பாணிகளில் இவர் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. இவரது ஆரம்பகால படங்களில் பலவும் பாலியல் கருப்பொருள்களின் தைரியமான சித்தரிப்புக்காக அறியப்பட்டன. இவருடைய படங்களில் பெரும்பாலும் ஆண்-பெண் உறவு நெறிகள் மற்றும் சமூக மரபுகளை உடைத்தெறிந்தே காணப்படும். இவரது கடைசி சில திரைப்படங்களான மஞ்ஜீரத்வணி, தேவராகம் மற்றும் சூரம் போன்றவை விமர்சகர்களால் மிதமான விமர்சனங்களைப் பெற்றது.

திரைப்பட வாழ்க்கை

தொகு

மலையாளத்திலும் தமிழ் மொழியிலும் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1975 ஆம் ஆண்டில் "பிரயாணத்து"டன் தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். இவரது படங்களில் குறிப்பிடத் தகுந்தவைகளில் சில தேவர் மகன், இரதிநிர்வேதம், சாமரம், பாலங்கள், அமரம், வைசாலி போன்றவை அடங்கும்.[2]

 
திரைக்கதை எழுத்தாளர் அ. க. லோகிததாசு, இயக்குநர் பரதன் , ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு ஆகியோர்

பிற்கால வாழ்வு

தொகு

1998 ஆம் ஆண்டு சூலை 30 ஆம் தேதி சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 52 வயதில் பரதன் இறந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான வடக்காஞ்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இவரது வீட்டின் அருகில் தகனம் செய்யப்பட்டது. இவரது கடைசி படம் சுரம் இவரது மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு வெளியிடப்பட்டது.

சொந்த வாழ்க்கை

தொகு

பரதன், திரைப்பட நடிகையும் நாடக நடிகையுமான கே. பி. ஏ. சி. இலலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல படங்களில் இவர் பணி புரிந்துள்ளார். ரதிநிர்வேதம் (1978) படப்பிடிப்பில் இவர் இலலிதாவை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.[3] கேரள கட்டிடக்கலை அடிப்படையிலான ஒரு அற்புதமான கலையமைப்புடன் கூடிய ஒரு வீட்டினை சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் கட்டினார். இவது மகன் சித்தார்த் பரதன் ஒரு நடிகராகவும், பாடலாசிரியரியராகவும், இயக்குநராகவும் உள்ளார். நம்மாள் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சித்தார்த், 1981இல் வெளிவந்த பரதனின் நித்ரா என்ற திரைப்படத்தை 2012இல் மறுபடியும் படமாக்கினார். இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்னர் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2011-05-25. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Noted Malayalam film director Bharathan dead பரணிடப்பட்டது 26 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்
  3. "Emotional reunion". தி இந்து (Chennai, India). 17 June 2011 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108143954/http://www.hindu.com/fr/2010/11/26/stories/2010112651100400.htm. பார்த்த நாள்: 26 November 2010. 

வெளி இணைப்புகள்

தொகு