கொச்சி இராச்சியம்

கொச்சி இராச்சியம் (Kingdom of Cochin, அல்லது பெரும்படப்பு சுவரூபம்[1], மட-ராஜ்யம், கோசிறீ இராஜ்யம், குரு சுவரூபம்; மலையாளம்: കൊച്ചി Kocci அல்லது പെരുമ്പടപ്പ്‌ Perumpaṭappu) இடைக்கால இந்து இராச்சியம் ஆகும். பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழான மன்னர் அரசாக விளங்கியது. ஒருகாலத்தில் பொன்னானியிலிருந்து கொச்சி வரையிலான மலபார் பகுதியை ஆண்டுவந்த இந்த இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி கோழிக்கோட்டின் சமோரின் அரசரின் கைப்பற்றுகைகளால் வெகுவாக குறைந்திருந்தது. போர்த்துக்கேய கப்பற்தொகுதிகள் இந்தியா வந்தடைந்தபோது கொச்சி சமோரினின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் உண்ணி கோடா வர்மா திருமுல்பாடு திசம்பர் 24, 1500இல் பெட்ரோ ஆல்வாரெசு காப்ராலை வரவேற்று போர்த்துக்கல்லிற்கும் கொச்சினிக்கும் இடையே சமோரினுக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்; இதன்படி கொச்சி நீண்டகால போர்த்துக்கேய காப்பரசாக (1503–1663) மாறியது. போர்த்துக்கேயர்களுக்குப் பின்னர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் (1663–1795) அதன்பின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் (1795–1858, உறுதியாக 6 மே 6, 1809) கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கின. பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி இராச்சியம் நடுக்காலத்தில் பிற்காலச் சேரர்களின் கீழ் இருந்தது. பெரும்படப்பின் (பொன்னானி வட்டத்தில் உள்ள வன்னேரிநாடு சித்திரகூடம்) பிராமணத் தலைவர் கடைசி சேர அரசரான இராம வர்மா குலசேகராவின் உடன்பிறப்பை மணந்திருந்தார். இதன் விளைவாக சேரர்களிடமிருந்து திருவஞ்சிக்குளம் கோவிலையும் பிற உரிமைகளையும் பெற்றார்.[2] 12வது நூற்றாண்டில் மகோதயாபுரம் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரும்படப்பு சுவரூபமும் மற்ற மாநிலங்களைப் போலவே தன்னாட்சி பெற்ற அரசியல் தனிவுருவானது. இருப்பினும், போர்த்துக்கேய குடியேற்றவாதிகளின் வருகைக்குப் பிறகே பெரும்படப்பு சுவரூபம் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. பெரும்படப்பு ஆட்சியாளர்களுக்கும் எடப்பள்ளி நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கும் இடையே குடும்ப உறவுகள் இருந்தன. இவர்களிடமிருந்து கொச்சியும் வைப்பினும் பெரும்படப்பிற்கு கிடைத்தன; இதனால் கொச்சி அரசர்கள் என அறியப்படலாயினர். கடற்பளபதி செங் ஹேயுடன் பயணித்த மொழிபெயர்ப்பாளரும் முசுலிம் பயணியுமான மா உவான் கொச்சி அரசர் பௌத்த சமயத்தவராக விவரித்துள்ளார்.

கொச்சி இராச்சியம்
കൊച്ചി
പെരുമ്പടപ്പ് സ്വരൂപം
அண் 12வது நூற்றாண்டு–1947
கொடி of கொச்சின்
கொடி
சின்னம் of கொச்சின்
சின்னம்
குறிக்கோள்: "അന്തസ്സ് നമ്മുടെ കുടുംബ നിധി" "மாட்சிமையே எங்கள் குடும்பச் சொத்து"
நாட்டுப்பண்: "ஓம் நமோ நாராயணா"
நிலைபிரித்தானிய இந்தியப் பேரரசின் மன்னர் அரசு
தலைநகரம்மகோதயபுரம் (திருவஞ்சிக்குளம்)
வன்னேரி
கொச்சி
திருப்பூணித்துறை
திருச்சூர்
பேசப்படும் மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
அரசாங்கம்முழுமையான மன்னராட்சி
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) (1814–1947)
வரலாறு 
• தொடக்கம்
அண் 12வது நூற்றாண்டு
• முடிவு
1947
நாணயம்ரூபாய் மற்றும் பிற உள்ளூர் நாணயங்கள்
முந்தையது
பின்னையது
பிற்கால சேர இராச்சியம்
திருவிதாங்கூர்-கொச்சி
யானை மீது கொச்சி அரசர் - யான் ஹூகன் வான் லின்சோடென் ஓவியம்
பரிவாரத்துடன் கொச்சி அரசர் Histoire générale des Voyages

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தொகு

1817-ஆம் ஆண்டு வரை கொச்சி இராச்சியம் தன்னாட்சியுடன் முடியாட்சியாக செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [3][4][5]

இந்திய விடுதலைக்குப் பின் தொகு

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[6] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த சமஸ்தானம், தற்கால கேரளா மாநிலத்தின் பகுதியாக உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_இராச்சியம்&oldid=3551538" இருந்து மீள்விக்கப்பட்டது