கே. பி. ஏ. சி. இலலிதா
கே.பி.ஏ.சி. இலலிதா (K. P. A. C. Lalitha) என்ற தனது மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட மகேசுவரி அம்மா(25 பெப்ரவரி 1947 - 22 பெப்ரவரி 2022) ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாள நாடகத்திலும் மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றினார். இவரது நடிப்பு வாழ்க்கை இந்தியாவின் கேரளாவின் காயம்குளத்தில் ஒரு நாடக இயக்கமான கே.பி.ஏ.சி கேரள மக்கள் கலைக் கழகத்துடன் தொடங்கியது. கேரளாவில் பொதுவுடைமை கருத்துக்களை பரப்புவதில் இந்த அரசியல் அரங்கம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது. ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவராக பதவி வகித்தார். மறைந்த மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் பரதனை மணந்தார்.
கே. பி. ஏ. சி. இலலிதா | |
---|---|
கொல்லத்தில் நடந்த கேரள சங்கீத நாடக அகாடமி விருது விழாவில் கே.பி.ஏ.சி.லலிதா (2019) | |
பிறப்பு | மகேசுவரி 25 பெப்ரவரி 1947 காயம்குளம், ஆலப்புழா கேரளா |
இறப்பு | 22 பெப்ரவரி 2022 | (அகவை 73)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை, கேரள சங்கீத நாடக அகாதமியின் தலைவர் |
செயற்பாட்டுக் காலம் | 1968– 2022 |
வாழ்க்கைத் துணை | மறைந்த இயக்குநர் பரதன் |
பிள்ளைகள் | சித்தார்த், சிறீகுட்டி |
விருதுகள் | தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (1990, 2000) |
வலைத்தளம் | |
kpaclalitha |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர், மகேசுவரி என்ற பெயரில் 1947இல் கேரளாவின் பதனம்திட்டாவின் ஆரண்முலா கடைக்கதராயில் வீட்டில் கே. அனந்தன் நாயர், பார்கவி அம்மா ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார்.[1] இவருக்கு இந்திரா, பாபு, இராஜன், சியாமளா ஆகிய நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். இவரது தந்தை காயம்குளத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும், தாய் ஆரண்முலாவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசியாவார். இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆலப்புழாவின் காயம்குளத்திற்கு அருகிலுள்ள இராமபுரத்தில் கழித்தார். நடன வகுப்பில் சேருவதற்காக இவரது குடும்பத்தினர் கோட்டயம் சங்கனாசேரிக்கு குடிபெயர்ந்தனர்.[2] குழந்தையாக இருந்தபோது செல்லப்பன் பிள்ளை என்பவரின் வழிகாட்டுதலிலும் பின்னர் கலாமண்டலம் கங்காதரனின் கீழும் நடனமாடக் கற்றுக்கொண்டார். இவர் தனது 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.[3] மேடையில் இவரது முதல் தோற்றம் கீதாயுடே பாலி என்ற நாடகத்தில் இருந்தது. பின்னர் இவர் கேரளாவில் ஒரு முக்கிய இடதுசாரி நாடக குழுவாக இருந்த கே. பி. ஏ. சியில் (கேரள மக்கள் கலைக் கழகம்) சேர்ந்தார். மேலும், இவருக்கு "இலலிதா" என்ற திரைப் பெயரும் வழங்கப்பட்டது. பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, இலலிதா என்று அழைக்கப்படும் மற்றொரு நடிகையிடமிருந்து வேறுபடுவதற்காக கே. பி. ஏ. சி என்ற குறிச்சொல் இவரது திரைப் பெயரில் சேர்க்கப்பட்டது.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவருக்கு சிறீகுட்டி என்ற ஒரு மகளும், சித்தார்த் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். சித்தார்த், இயக்குநர் கமல் இயக்கிய "நம்மாள்" என்ற படத்தில் ஒரு நடிகராக அறிமுகமானார். நடிப்பில் ஒரு குறுகிய வாழ்க்கைக்குப் பிறகு, சித்தார்த் திரைப்பட இயக்கத்தை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுத்தார். 2012 ஆம் ஆண்டில், "நித்ரா" என்ற படத்துடன் இயக்குநராக அறிமுகமானார். இது 1984 ஆம் ஆண்டில் இதே பெயரில் இவரது தந்தை பரதன் இயக்கி வெளியான திரைப்படத்தின் மறு பதிப்பாகும். இலலிதா 2013 ஆம் ஆண்டில் செருகாட் விருதை வென்ற காத தூதாரம் (தொடர வேண்டிய கதை) என்ற சுயசரிதையை வெளியிட்டார்.[5] 1998 ஆம் ஆண்டில், தனது கணவர் பரதன் இறந்தபோது, இவர் சில மாதங்களுக்கு ஒரு இடைவெளியை எடுத்துக்கொண்டார், சத்யன் அந்திக்காடு இயக்கிய வேண்டும் சில வீட்டுக்காரியங்கள் என்ற (1999) திரைப்படத்தில் பாராட்டப்பட்ட நடிப்புடன் திரும்பி வந்தார். பின்வந்த ஆண்டுகளில் இலலிதாவின் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் சாந்தம் (2000), லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (2000) மற்றும் வால்கண்ணாடி (2002) ஆகியன. ஜெயராஜ் இயக்கிய சாந்தம் (2000) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தனது இரண்டாவது தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் காதலுக்கு மரியாதை (1997), இயக்குநர் மணிரத்தினத்தின் அலைபாயுதே (2000), காற்று வெளியிடை (2017) போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை சாலினியின் தாயாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
தனது கணவர் பரதன் இயக்கிய அமரம் (1991) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[6][7]
இறப்பு
தொகுஇலலிதா 2022 பிப்ரவரி 22 அன்று தனது 73வது வயதில் திருப்பூணித்துறையில் இறந்தார்.[8][9]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "malayalamcinema.com, Official website of AMMA". www.malayalamcinema.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.
- ↑ asianetnews (31 May 2012). ""KPAC Lalitha"-On Record 31,May 2012 Part 1" – via YouTube.
- ↑ [1] பரணிடப்பட்டது 7 மே 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Staff Reporter (22 March 2016). "KPAC Lalitha opts out" – via The Hindu.
- ↑ "Cherukad Award for KPSC Lalitha". Dcbooks.com. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "KPAC Lalitha draws flak". Deccan Chronicle. 16 October 2018.
- ↑ "K P A C Lalitha – International Theatre Festival of Kerala, ITFoK". Archived from the original on 2020-04-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
- ↑ "കെ.പി.എ.സി ലളിത അന്തരിച്ചു". Mathrubhumi. 22 February 2022. https://www.mathrubhumi.com/news/kerala/kpac-lalitha-passed-away-1.7284677.
- ↑ ലേഖകൻ, മാധ്യമം. "കെ.പി.എ.സി ലളിത അന്തരിച്ചു" (in Malayalam). Madhyamam. https://www.madhyamam.com/kerala/kpac-lalitha-passed-940134.