அலைபாயுதே

2000த்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அலைபாயுதே (Alaipayudhey) மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர்.[2] இது ஒரு காதல் படம் ஆகும்.

அலைபாயுதே
இயக்கம்மணிரத்னம்
கதைஆர். செல்வராஜ்
இசைஏ.ஆர்.ரகுமான்
நடிப்புமாதவன்
ஷாலினி
சுவர்ணமால்யா
அரவிந்த சாமி
குஷ்பு
ஜயசுதா
விவேக்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு2000
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு


கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைபாயுதே&oldid=3576485" இருந்து மீள்விக்கப்பட்டது