ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்) என்பவர் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.[3][4]

ஆர். மாதவன்
Madhavanprof.JPG
இயற் பெயர் மாதவன் ரங்கநாதன்[1][2]
பிறப்பு சூன் 1, 1970 (1970-06-01) (அகவை 50)
ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட்  இந்தியா
வேறு பெயர் மேடி
துணைவர்
சரிதா
(m. 1999)
பிள்ளைகள் 1
குறிப்பிடத்தக்க படங்கள் அலைபாயுதே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஆய்த எழுத்து
மின்னலே

இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்த திரைப்படங்கல் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. அதை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ரன் (2002), அன்பே சிவம் (2003), ஆய்த எழுத்து (2004), இறுதிச்சுற்று (2016), விக்ரம் வேதா (2017) போன்ற பல தமிழ் திரைப்படங்களும் மற்றும் ரங் தெ பசந்தி (2006), குரு (2007), 3 இடியட்சு (2009) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

ரங்கநாதன் மாதவன் 1 ஜூன் 1970 ஆம் ஆண்டு ஜம்சேத்பூர் (இப்போது சார்க்கண்ட்) இந்தியாவில் ஒரு தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ரங்கநாதன் டாட்டா ஸ்டீல் நிர்வாக நிர்வாகியாகவும், இவரது தாயார் சரோஜா இந்தியாவின் வங்கியில் மேலாளராகவும் இருந்தார். இவரது தங்கை தேவிகா ஒரு மென்பொருள் பொறியாளர ஆவார்.[5]

நடிப்புத்துறைதொகு

இவர் முதலில் ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். அதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு 'இண்பெர்னோ' என்ற ஆங்கில த் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்தொகு

வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர் இந்தி பெயரிடப்படாத கதாபாத்திரம்
1997 இண்பெர்னோ ரவி ஆங்கிலம்
1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த் கன்னடம்
2000 அலைபாயுதே கார்த்திக் தமிழ் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
என்னவளே ஜேம்சு வசந்த்
2001 மின்னலே ராஜேஷ் சிவகுமார்
டும் டும் டும் ஆதித்யா
பார்த்தாலே பரவசம் மாதவா
ரகுனா கை தில் மெய்ன் மாதவ் சாஸ்திரி இந்தி
2002 கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன் தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
ரன் சிவா
தில் வில் பியார் வியார் கிரிஷ் இந்தி
2003 அன்பே சிவம் அன்பரசு தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
பரிந்துரை: சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
நள தமயந்தி ராம்ஜி
லேசா லேசா தேவ நாராயணன் சிறப்பு தோற்றம்
பிரியமான தோழி அசேக்
ஜே ஜே ஜெகன்
2004 எதிரி சுப்பிரமணி தமிழ்
ஆய்த எழுத்து இன்பா சேகர் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு ஆங்கிலம் இரு மொழித் திரைப்படம்
மேட் இன் யூ எஸ் அ மலையாளம்
2005 பிரியசகி சந்தான கிருஷ்ணன் தமிழ்
ராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி இந்தி மேலும் எழுத்தாளர்
2006 ரங் தெ பசந்தி அஜய் ரதோட்
தம்பி வேலு தொண்டைமான் தமிழ்
ரெண்டு சக்தி,
கண்ணன்
2007 குரு சியாம் சக்சேனா இந்தி
தட் போர்-லட்டர் வேர்டு அவராக ஆங்கிலம் சிறப்பு தோற்றம்
தில்லி ஹைட்ஸ் அவராக இந்தி சிறப்பு தோற்றம்
ஆர்யா ஆர்யா தமிழ்
எவனோ ஒருவன் சிறீதர் வாசுதேவன் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
2008 வாழ்த்துகள் கதிரவன்
மும்பை மேரி ஜான் நிகில் அகர்வால் இந்தி
திப்பு கன்யன் திப்பு கிரி அவராக மலாய் சிறப்பு தோற்றம்
2009 யாவரும் நலம் மனோகர் தமிழ்
13பி மனோகர் இந்தி இரு மொழித் திரைப்படம்
குரு என் ஆளு குரு தமிழ்
சிக்கந்தர் ராஜேஸ் ராவ் இந்தி
3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி பரிந்துரை: சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை: ஐஐஎஃப்ஏ சிறந்த துணை நடிகர் விருது
2010 ஓம் சாந்தி மேடி தெலுங்கு சிறப்பு தோற்றம்
டீன் பாட்டி சந்தானு இந்தி
ஜூடா ஹி ஜாகி கபீர் சிறப்பு தோற்றம்
மன்மதன் அம்பு மதனகோபால் தமிழ் பரிந்துரை: சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2011 தனு வெட்ஸ் மனு மனோஜ் குமார் சர்மா (மனு) இந்தி
2012 வேட்டை திருமூர்த்தி தமிழ்
ஜோடி பிரேக்கர்ஸ் சித் கண்ணா இந்தி
2013 சன்கிளாஸ் சஞ்சய்
2014 அகேலி அவினாஷ் யூடியூப்பில் வெளியீடு
2015 தனு வெட்ஸ் மனு : ரிட்டர்ன்ஸ் மனோஜ் குமார் சர்மா (மனு)
நைட் ஆஃப் தி லிவிங் டெட்: டார்க்கெஸ்ட் டான் டாம் ஆங்கிலம்
2016 இறுதிச்சுற்று பிரபு செல்வராஜ் தமிழ் இரு மொழித் திரைப்படம்
சாலா கதூஸ் ஆதி தோமர் இந்தி
2017 விக்ரம் வேதா விக்ரம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மகளிர் மட்டும் சுரேந்தர் சிறப்பு தோற்றம்
2018 சபியாசாச்சி அருண் தெலுங்கு
ஜீரோ கார்த்திக் சீனிவாசன் இந்தி
2020 ராகெட்ரி: நம்பி எஃபெக்ட் நம்பி நாராயணன் ஆங்கிலம்
இந்தி
இரு மொழித் திரைப்படம்
ராகெட்ரி: நம்பி விளைவு தமிழ்
நிசப்தம் அந்தோணி இரு மொழித் திரைப்படம்
நிஷாபதம் தெலுங்கு
மாறா மாறா தமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Ranganathan Madhavan" (en). பார்த்த நாள் 16 August 2020.
  2. "Madhavan refutes rumours about working in the Hindi remake of Bhaagamathie - Times of India" (in en). The Times of India. 15 November 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/madhavan-refutes-rumours-about-working-in-the-hindi-remake-of-bhaagamathie/articleshow/72069344.cms. பார்த்த நாள்: 16 August 2020. 
  3. "R Madhavan signs up with Atul Kasbekar's Bling Entertainment". Business of Cinema (2009). மூல முகவரியிலிருந்து 1 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 February 2011.
  4. Sharma, Smrity (13 November 2010). "Surya, Vikram need to learn Hindi: Madhavan". The Times of India. Archived from the original on 16 November 2010. https://web.archive.org/web/20101116181454/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Surya-Vikram-need-to-learn-Hindi-Madhavan/articleshow/6913669.cms. பார்த்த நாள்: 4 February 2011. 
  5. Rangarajan, Malathi (2004). "He loves challenges". The Hindu. Archived from the original on 12 November 2004. https://web.archive.org/web/20041112213630/http://www.hindu.com/fr/2004/10/22/stories/2004102202400100.htm. பார்த்த நாள்: 22 October 2004. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவன்&oldid=3036488" இருந்து மீள்விக்கப்பட்டது