ரன் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரன் (Run) திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மாதவன்,மீரா ஜாஸ்மின்,விவேக்,ரகுவான் மற்றும் பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகை மீராஜாஸ்மின் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
ரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | எ.எம் ரத்னம |
கதை | லிங்குசாமி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | மாதவன் மீரா ஜாஸ்மின் விவேக் அதுல் குல்கர்னி ரகுவரன் அனுராதா ஹாசன் |
விநியோகம் | எவெர்கிரீன் மூவிஸ் இண்டர்நேஷனல் |
வெளியீடு | 2002 |
ஓட்டம் | 180 நிமிடங்கள். |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வகைதொகு
கதைதொகு
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து சென்னையில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குச் செல்லும் நாயகனான மாதவன் அங்கு மீராவைப் பார்த்து காதல் கொண்டு அவர் பின்னால் செல்கின்றார்.ஆனால் பல முறை மீரா தன் அண்ணன் ஒரு பெரிய தாதா எனக் கூறியும் அவள் பின்னே செல்கின்றார்.பின்னர் இருவரும் காதலிக்கின்றனர்.இதனை அறிந்து கொள்ளும் அவள் அண்ணன் மாதவனைக் கொல்ல பல முறை முயற்சி செய்தும் இயலாமல் இறுதியில் மாதவனால் தாக்கப்படுகின்றான்.பின்னர் மாதவனும் மீராவும் சேர்ந்து கொள்கின்றனர்.
விருதுகள்தொகு
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த நடிகர்- மாதவன்
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த புதுமுக நடிகை - மீரா ஜாஸ்மின்
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த நகைச்சுவையாளர் -விவேக்