ரகுவரன்
ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.
ரகுவரன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 11, 1958[1] கொல்லன்கோடு, பாலக்காடு மாவட்டம், கேரளா |
இறப்பு | மார்ச் 19, 2008 சென்னை, தமிழ்நாடு |
துணைவர் | ரோகிணி ((1996-2004) மணமுறிவு |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுநடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். மேலும் இவர் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் தனது குடும்பத்துடன் குடியேறினர். அதன் பின் ரகுவரன் அவர்கள் கோவையில் தனது கல்லூரி கல்வியான இளங்கலை பட்டத்தை படித்து முடித்தார். இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.[3]
மறைவு
தொகுஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[4]. நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.
குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள்
தொகுநடித்த சில திரைப்படங்கள்
தொகு1982 முதல் 1989 வரை
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1982 | காக்கா | மலையாளம் | எதிர்நாயகன் | |
ஏழாவது மனிதன் | தமிழ் | கதாநாயகன் | ||
1983 | ஒரு ஓடை நதியாகிறது | தமிழ் | கதாநாயகன் | |
ருக்மா | மலையாளம் | |||
சில்க் சில்க் சில்க் | தமிழ் | எதிர்நாயகன் | ||
1984 | நீ தொடும் போது | தமிழ் | கதாநாயகன் | |
முடிவல்ல ஆரம்பம் | தமிழ் | கதாநாயகன் | ||
1985 | குற்றவாளி | தமிழ் | எதிர்நாயகன் | |
எங்கிருந்தாலும் வாழ்க | தமிழ் | கதாநாயகன் | ||
1986 | மிஸ்டர் பாரத் | தமிழ் | எதிர்நாயகன் | |
சம்சாரம் அது மின்சாரம் | சிதம்பரம் | தமிழ் | இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் சிறப்பாக பேசப்பட்டது | |
மீண்டும் பல்லவி | தமிழ் | கதாநாயகன் | ||
மந்திரப் புன்னகை | டேனியல் மிரான்டா | தமிழ் | எதிர்நாயகன் | |
1987 | பாசிவதி பிராணம் | வேணு | தெலுங்கு | எதிர்நாயகன் |
ஊர்க்காவலன் | தமிழ் | எதிர்நாயகன் | ||
மைக்கேல் ராஜ் | தமிழ் | கதாநாயகன் | ||
மேகம் கறுத்திருக்கு | தமிழ் | |||
கூட்டுப் புழுக்கள் | தமிழ் | கதாநாயகன் | ||
கவிதை பாட நேரமில்லை | தமிழ் | கதாநாயகன் | ||
மனிதன் | தமிழ் | எதிர்நாயகன் | ||
மக்கள் என் பக்கம் | தமிழ் | |||
பூவிழி வாசலிலே | தமிழ் | எதிர்நாயகன் | ||
1988 | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | அலெக்ஸ் | தமிழ் | |
கலியுகம் | தமிழ் | கதாநாயகன் | ||
தாய் மேல் ஆணை | தமிழ் | கதாநாயகன் | ||
கைநாட்டு | தமிழ் | கதாநாயகன் | ||
குற்றவாளி | தமிழ் | கதாநாயகன் | ||
கோயில் மணி ஓசை | தமிழ் | எதிர்நாயகன் | ||
இரண்டில் ஒன்று | தமிழ் | எதிர்நாயகன் | ||
என் வழி தனி வழி | தமிழ் | கதாநாயகன் | ||
அண்ணாநகர் முதல் தெரு | தமிழ் | |||
1989 | சிவா | தமிழ் | ||
ருத்ரநேத்ரா | பிளாக் கோப்ரா | தெலுங்கு | எதிர்நாயகன் | |
லங்கேஷ்வருது | தெலுங்கு | எதிர்நாயகன் | ||
ரெட்டை குழல் துப்பாக்கி | தமிழ் | எதிர்நாயகன் | ||
ராஜா சின்ன ரோஜா | ரகு | தமிழ் | எதிர்நாயகன் | |
சிவா | பவானி | தெலுங்கு | எதிர்நாயகன் | |
இது உங்க குடும்பம் | தமிழ் | கதாநாயகன் | ||
தனுஷ்கோடி | மலையாளம் |
1990 முதல் 1999 வரை
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | வியூகம் | டோனி லாயிஸ் | மலையாளம் | கதாநாயகனாக |
புரியாத புதிர் | தமிழ் | எதிர்நாயகன் | ||
இசாத்தார் | இந்த்ரசித் சபர்வால் | இந்தி | எதிர்நாயகன் | |
அஞ்சலி | சேகர் | தமிழ் | கதாநாயகனாக | |
தியாகு | தமிழ் | கதாநாயகனாக | ||
சிவா | பவானி | இந்தி | எதிர்நாயகன் | |
பகலில் பௌர்ணமி | தமிழ் | எதிர்நாயகன் | ||
1991 | சைத்தான்யா | தெலுங்கு | எதிர்நாயகன் | |
1992 | சூர்ய மானசம் | மலையாளம் | எதிர்நாயகன் | |
தெய்வத்திந்த விக்ரிதைகள் | அல்போன்ஸோ | மலையாளம் | கதாநாயகனாக | |
கிழக்கன் பத்ரோஸ் | மலையாளம் | எதிர்நாயகன் | ||
தூள் பறக்குது | தமிழ் | கதாநாயகனாக | ||
கவசம் | மலையாளம் | கதாநாயகனாக | ||
1993 | ஆத்தீகம் என்ன இத்தீகம் | மலையாளம் | எதிர்நாயகன் | |
1994 | பாச மலர்கள் | தமிழ் | ||
காதலன் | மல்லிகார்ச்சுனா | தமிழ் | எதிர்நாயகன் | |
1995 | பாட்ஷா | மார்க் ஆண்டனி | தமிழ் | எதிர்நாயகன் |
கோலங்கள் | பைரவன் | தமிழ் | எதிர்நாயகன் | |
மாந்திரீகம் | அப்துல் ரகுமான் | மலையாளம் | ||
பீட்டர் ஸ்காட் | மலையாளம் | |||
முத்து | திவான் | தமிழ் | எதிர்நாயகன் | |
தொட்டா சிணுங்கி | கோபால் | தமிழ் | கதாநாயகன் | |
1996 | ரகசக் | இந்தி | எதிர்நாயகன் | |
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் | கன்னடம் | எதிர்நாயகன் | ||
செல்வா | வரதராஜன் | தமிழ் | எதிர்நாயகன் | |
டேக் இட் ஈசி ஊர்வசி | தமிழ் | |||
1997 | ஆநகனாக ஒக்க ரோஜு | தெலுங்கு | ||
அருணாச்சலம் | விஸ்வநாத் | தமிழ் | எதிர்நாயகன் | |
லவ் டுடே | சந்திரசேகர் | தமிழ் | ||
உல்லாசம் | ஜி. கே. | தமிழ் | ||
அபிமன்யூ | மாசிலாமணி | தமிழ் | எதிர்நாயகன் | |
நேருக்கு நேர் | ரகு | தமிழ் | ||
ஆஹா | ரகு | தமிழ் | ||
ரட்சகன் | ஈஸ்வர் | தமிழ் | எதிர்நாயகன் | |
1998 | சுஸ்வகதம் | தெலுங்கு | ||
ஜெய்ஹிந்த் | கன்னடம் | எதிர்நாயகன் | ||
கவர்ன்மென்ட் | கன்னடம் | எதிர்நாயகன் | ||
துள்ளித் திரிந்த காலம் | தமிழ் | |||
ஹிட்லர் | இந்தி | எதிர்நாயகன் | ||
இனியவளே | ராமநாதன் | தமிழ் | ||
பூந்தோட்டம் | தமிழ் | எதிர்நாயகன் | ||
நிலாவே வா | தமிழ் | |||
1999 | சூர்ய பார்வை | ஜெயந்த் | தமிழ் | எதிர்நாயகன் |
என் சுவாசக் காற்றே | தமிழ் | |||
என்றென்றும் காதல் | தமிழ் | |||
லால் பாத்சா | விக்ரம் சிங் | இந்தி | எதிர்நாயகன் | |
ஒருவன் | கிருஷ்ண பிரசாத் | தமிழ் | எதிர்நாயகன் | |
அமர்க்களம் | துளசி தாஸ் | தமிழ் | ||
அநாகனக ஒரு அம்மாயி | பவானி பிரசாத் | தெலுங்கு | ||
பூப்பறிக்க வருகிறோம் | ரங்கநாதன் | தமிழ் | ||
முதல்வன் | அரங்கநாதன் | தமிழ் | வெற்றி, சிறந்த எதிர்நாயகனுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது | |
இரணியன் | ஆன்டே | தமிழ் | எதிர்நாயகன் | |
பிரதயார்த்தா | கன்னடம் | எதிர்நாயகன் |
2000 முதல் 2012 வரை
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | கண்ணுக்குள் நிலவு | ராஜசேகர் | தமிழ் | |
குட்லக் | சந்திரமோகன் | தமிழ் | ||
சுதந்திரம் | ரகு | தமிழ் | ||
முகவரி | சிவா | தமிழ் | ||
வல்லரசு | தமிழ் | எதிர்நாயகன் | ||
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் | |||
பெள்ளி சம்பந்தம் | தெலுங்கு | |||
பார்த்தேன் ரசித்தேன் | பன்னீர் | தமிழ் | ||
உயிரிலே கலந்தது | ரகுவரன் | தமிழ் | ||
ஆசாத் | தேவா | தெலுங்கு | எதிர்நாயகன் | |
2001 | கிரகான் | ரகு | இந்தி | |
தோஸ்த் | ரகு | தமிழ் | ||
நரசிம்மா | ராணா | தமிழ் | ||
ஸ்டார் | தனுஷ்கோடி | தமிழ் | ||
மஜ்னு | கஜபதி | தமிழ் | ||
2002 | சீமா சிம்மம் | விஸ்வேஸ்வர ராவ் | தெலுங்கு | |
தயா | ருத்ரய்யா | தமிழ் | ||
ரோஜாக்கூட்டம் | தமிழ் | |||
ரன் | தமிழ் | |||
யுனிவர்சிடி | தமிழ் | |||
பப்பி | கே. ஆர். | தெலுங்கு | ||
ஐ லவ் யூ டா | தமிழ் | |||
பாலா | தமிழ் | |||
காதல் வைரஸ் | தமிழ் | |||
2003 | நாகா | என். டி. ஆரின் அப்பாவாக | தெலுங்கு | |
ஜானி | தெலுங்கு | |||
அலாவுதீன் | கங்காதர் | தமிழ் | ||
அலை | தமிழ் | |||
ஆஞ்சநேயா | வெங்கடேஷ்வரன் | தமிழ் | ||
திருமலை | ஆர்டிஸ்ட் | தமிழ் | ||
அன்பே உன் வசம் | தமிழ் | |||
2004 | ஜனா | தமிழ் | ||
துர்கி | கன்னடம் | |||
நானி | தெலுங்கு | |||
அரசாட்சி | தமிழ் | |||
ஜனனம் | உதய மூர்த்தி | தமிழ் | ||
மாஸ் | சத்யா | தெலுங்கு | ||
2005 | சச்சின் | கௌதம் | தமிழ் | |
2006 | சிவப்பதிகாரம் | இளங்கோ | தமிழ் | |
2007 | பசுமாசுரன் | மலையாளம் | ||
தீபாவளி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
எவடைத்தே நாகேண்டி | தெலுங்கு | |||
நல்லதோர் வீணை | தமிழ் | |||
சிவாஜி | செழியன் | தமிழ் | மருத்துவராக | |
மருதமலை | தமிழ் | |||
2008 | பீமா | பெரியவர் | தமிழ் | |
அசோகா | தமிழ் | |||
தொடக்கம் | தமிழ் | |||
பெள்ளிக்கானி பிரசாத் | தெலுங்கு | |||
சில நேரங்களில் | கிருஷ்ணன் | தமிழ் | ||
ஆட்டடிஸ்தா | தெலுங்கு | |||
யாரடி நீ மோகினி | தனுஷின் அப்பாவாக | தமிழ் | ||
எல்லாம் அவன் செயல் | ஜெகதீஸ்வரன் | தமிழ் | ||
2009 | பேங்க் | இந்தி | ||
மஞ்சீரா | தெலுங்கு | |||
2009 | கந்தசாமி | தமிழ் | ரகுவரன் இறந்துவிட்டதால் அவருக்கு பதிலாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்தார். | |
2012 | உள்ளம் | தமிழ் | திரையரங்கில் வெளியாகாமல் குறுந்தகட்டில் வெளியானது. |