தாய் மேல் ஆணை

எல். இராஜா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய்மேல் ஆணை (thaaymel aanai) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை எல். இராஜா இயக்கினார். ரகுவரன் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.[1] தெலுங்கில் "ரத்த திலகம்" என்ற பெயரிலும், சிங்களத்தில் "தந்துவாமா" என்ற பெயரிலும் மற்றும் இந்தி மொழியில் "பிரதிகார்"' என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1988 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்டது.

தாய்மேல் ஆணை
இயக்கம்எல். இராஜா
தயாரிப்புஎம். எஸ். குகன்
எம். சரவணன்
இசைசந்திரபோஸ்
நடிப்புஅர்ஜூன்
மாதுரி
ஆனந்த்ராஜ்
கிஷ்மு
ரகுவரன்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
ஒய். ஜி. மகேந்திரன்
ரஞ்சனி
சரோஜாதேவி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

"தாய் மேல் ஆணை" ஒரு மகன் தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதையாகும். ராஜா தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்தவர்களை பழிவாங்க நினைக்கிறான். அவரது நண்பன் வினோத் ஒரு காவல் அதிகாரி, ராஜு சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதை அவர் விரும்பவில்லை. இறுதியில், வினோத் குடும்பத்தாரையும் வில்லனின் ஆட்கள் கடத்திச் சென்று துன்புறுத்துகின்றனர். இதை தெரிந்து கொண்ட ராஜா வினோத்தின் குடும்பத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவர்களை மீட்கும் முயற்சியில் தனது குடும்பத்தை அழித்த வில்லன்களை அழிக்கிறான். ஆனால் எதிபாராதவிதமாக, சண்டையின் போது காயமடைந்த காரணத்தால் ராஜா இறந்து போகின்றான் . வினோத் ராஜாவின் உடலை சுமந்து கொண்டு தனது குடும்பத்தாரோடு நடந்து செல்வதோடு கதை முடிகிறது.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

80களில் நடித்த பிரபல நடிகை சரோஜாதேவி மீண்டும் தமிழ்ப்படங்களில் தோன்றினார்.

ஒலித்தொகுப்பு

தொகு

ஒன்பது பாடல்கள் அடங்கிய இப்படத்தின் பாடல்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். "சின்ன கண்ணா செல்ல கண்ணா", என்ற பாடலின் மகிழ்ச்சியான பகுதியை பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாட பின்னணிப் பாடகி சித்ரா சோகமான பகுதியை பாடியுள்ளார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து இயற்றியுள்ளார். "வாய்க்கா வறப்புக்குள்ள வயசுப்புள்ள" மற்றும் "ஹே மல்லிகைப்பூ பூத்திருக்கு" எனற பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.[சான்று தேவை]

Thaimel Aanai
Studio album
Chandrabose
வெளியீடு1988
இசைப் பாணிFeature film soundtrack
இசைத்தட்டு நிறுவனம்AVM Audio
இசைத் தயாரிப்பாளர்AVM
எண் பாடல் பாடியோர் நீளம் பாடலாசிரியர் குறிப்பு
1 வாய்க்கா வறப்புக்குள்ள வயசுப்புள்ள மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் மற்றும் குழு 04:43 வைரமுத்து
2 சின்ன கண்ணா செல்ல கண்ணா சித்ரா 04:24
3 "சங்கு சக்ர சாமி வந்து" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா மற்றும் குழு 04:55
4 "போனா போறா விட்டுடு அவன" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா மற்றும் குழு 04:24
5 ஹே மல்லிகைப்பூ பூத்திருக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் குழு 04:06
6 "எந்த கதை சொல்ல" கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி 04:16
7 "போனா போறா விட்டுடு அவன (மீண்டும்) மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா மற்றும் குழு 04:24
8 சின்ன கண்ணா செல்ல கண்ணா கே. ஜே. ஜேசுதாஸ் 03:46
9 சின்ன கண்ணா செல்ல கண்ணா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:24
10 சின்ன கண்ணா செல்ல கண்ணா (Sad) சித்ரா 04:14

வரவேற்பு

தொகு

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இவ்வாறு எழுதியது: " இந்த திரைப்படம் மகிழ்ச்சியில் சுழல்வது போல சுழன்று கொண்டே போகிறது.."[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Thaimel Aanai Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2015-05-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880429&printsec=frontpage&hl=en

வெளிப்புற இணைப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_மேல்_ஆணை&oldid=3660188" இலிருந்து மீள்விக்கப்பட்டது