செந்தில்
செந்தில் (பிறப்பு: மார்ச் 23, 1951), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
செந்தில் | |
---|---|
பிறப்பு | முனுசாமி |
பணி | நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1979 — இன்று |
அரசியல் கட்சி | பாஜக |
வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி |
பிள்ளைகள் | மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசெந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் திகதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவர் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
செந்தில் நடித்த சில திரைப்படங்கள்
தொகுஇவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
இவரது நகைச்சுவையான வசனங்கள் சில:
- அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
- நேர்மை எருமை கருமை
- பாட்றி என் ராசாத்தி
- டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
- டேய்! அண்ணன் சிகப்புடா கோயில் காளை
- புலிகுட்டி தம்பி பூனகுட்டி, பூனகுட்டி தம்பி புலிகுட்டி
- இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
- ம்ம்ம்ம்ம்ம், ர்ர்ர்ர்-அ விட்டுட்டே (இந்தியன்)
- அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
- கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்!... ... ... என்னண்ணே உடைச்சிட்டீங்க! (வைதேகி காத்திருந்தாள்)
- ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் (சேரன் பாண்டியன்)
- அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! (சின்ன கவுண்டர்)
அரசியல்
தொகுஅதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[1].முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமமுகவில் இணைந்தார்.அங்கு, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.[2] 2020 ஆம் ஆண்டு அமமுகவில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.11 மார்ச் 2021 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
- ↑ "அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்:தினகரன் அதிரடி அறிவிப்பு".
- ↑ செய்திப்பிரிவு, ed. (11 மார்ச் 2021). நல்ல கட்சி என்பதால் இணைந்தேன்: பாஜகவில் இணைந்த பின்பு செந்தில் பேட்டி. தி ஹிந்து தமிழ் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)