தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தானா சேர்ந்த கூட்டம் (ஆங்கில மொழி: Thaanaa Serndha Koottam), விக்னேஷ் சிவனால் எழுதப்பட்டும் இயக்கப்பட்டும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படமாகும், இது கே. இ. ஞானவேல் ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி திரைப்படமான ஸ்பெசல் 26 (Special 26) என்ற படத்தின் மறு தயாரிப்புப் படமாகும்.[1] இத்திரைபடத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்,கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரரால் இயற்றப்பட்ட இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி,[2] இந்தத் திரைப்படம் ஜனவரி 12 இல் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பரதன் பிலிம்ஸ் ஆல் வெளியிடப்பட்டது.

தானா சேர்ந்த கூட்டம்
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புஞானவேல் ராஜா
கதைவிக்னேஷ் சிவன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசூர்யா,கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில்
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு12 சனவரி 2018 (2018-01-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு75 கோடி
மொத்த வருவாய்108 கோடி

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானா_சேர்ந்த_கூட்டம்&oldid=3709426" இலிருந்து மீள்விக்கப்பட்டது