கவுண்டமணி

இவர் தமிழக நகைச்சுவை நடிகர் ஆவார்

கவுண்டமணி (பிறப்பு: மே 25) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

கவுண்டமணி
பிறப்புசுப்பிரமணியன் கருப்பையா
மே 25, 1939(1939-05-25)
உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் DT (1964)
தேசியம்இந்தியர்
பணிநடிகர், நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1964-2016
பெற்றோர்தகப்பனார்: கருப்பையா
தாயார்: அன்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
சாந்தி

இளமையும் வாழ்க்கையும் தொகு

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்[1] மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி (Counter) கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதனால் அவரை கவுண்டர்மணி (Countermani) என சக நடிகர்கள் அழைத்தனர். பின்னர் 16 வயதினிலே படம் நடிக்கும்போது அவருக்கு அந்தப் பெயரையே டைட்டிலில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். அந்தப் படத்திலிருந்துதான் அவர் கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரை வாழ்க்கை தொகு

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.

இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் தொகு

இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு

மேலும் பார்க்க , கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்

இவரது நகைச்சுவை சொல்லாடல்கள் சில தொகு

 • பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா (வைதேகி காத்திருந்தாள்)
 • அப்பவே நெனச்சேன்... என்னடா பத்து ரூபாய்க்கு இவ்வளவு கறி தர்றனேன்னு...
 • கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை (வைதேகி காத்திருந்தாள்)
 • ரங்கநாதங்கற பேருக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்லை (வைதேகி காத்திருந்தாள்)
 • இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது (வைதேகி காத்திருந்தாள்)
 • ஐ! மாட்டுப்பொங்கல், சேட்டுப்பொங்கல் (ஜென்டில்மேன்)
 • நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி. (சூரியன்)
 • ஊ இஸ் த டிஸ்டபென்ஸ் (சூரியன்)
 • அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா (சூரியன்)
 • சொரி புடிச்ச மொன்ன நாயி (கோயில் காளை)
 • ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற (வைதேகி காத்திருந்தாள்)
 • இங்க நான் ஒரே பிஸி (சூரியன்)
 • ஆ! இங்க பூஸ், அங்க பூஸ், ரைட்ல பூஸ், லெஃப்ட்ல பூஸ், காந்த கண்ணழகி, உனக்கு மினிஸ்டரியில் இடம் பாக்கறேன் (சூரியன்)
 • டெல்லி புரோகிராமை கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன் (சூரியன்)
 • ஒரு எளனிய எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ போடா (கோயில் காளை)
 • டேய் இந்த டகால்டி வேலைலா என்கிட்ட வச்சிக்காத (சூரியன்)
 • வாட் எ பியூட்டி யெங் கேள் (உனக்காக எல்லாம் உனக்காக)
 • டேய் தகப்பா (நாட்டாமை)
 • ஐயா தீஞ்ச மண்ட தர்மம் போடுங்க (கோயில் காளை)
 • நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா (மன்னன்)
 • இந்த நாயே 6 ஆங் கிளாஸ்ல அஞ்சு தடவ பெயில் (முறைமாமன்)
 • நாயக் கல்நாயக் (கர்ணா)
 • எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த கம்முனாட்டி பையன் நீ (சின்ன தம்பி)
 • நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன் (தங்கமான ராசா) 
 • நாலு வீடு வாங்கி திங்குற நாய்க்கி பழமய பாரு! பேச்ச பாரு! லொள்ள பாரு! எகதாளத்த பாரு! (சின்னக்கவுண்டர்)
 • ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தைபய பயப்புடுறான். (சின்னக்கவுண்டர்)
 • பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்ங்களா (கரகாட்டகாரன்)
 • மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா (உள்ளத்தை அள்ளித்தா)
 • ஹெய்! நீ சொல்றது உள்ள போடற உல்லன், நான் சொல்றது சாப்பிடற உள்ளான் (நடிகன்)
 • அடங்கொப்பா இது உலகமகா நடிப்புடா சாமி (மாமன் மகள்)
 • நல்ல சங்கீதத்த கேளுங்கப்பா - (கரகாட்டக்காரன்)
 • உலகத்திலேயே ரெண்டு புத்திசாலிங்க‌. ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம்
 • மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை! (சேரன் பாண்டியன்)
 • ஐயோ ராமா, என்ன ஏன் இந்த மாதிரி கழிசட பசங்களோடலாம் கூட்டு சேர வக்கிற?! (ஜென்டில்மேன்)
 • என்னது ஓனரா? மூணு டயரு ஒரு தார்பாயை நடுவுல தொங்கவிட்ட நீ ஓனரா அப்ப டாடா பிர்லா எல்லாம் என்னடா சொல்லறது? (வரவு எட்டணா செலவு பத்தணா)
 • ஐயோ... அது பொறம்போக்கு நாயிமா அது அங்கே  திங்குது அங்கே தூங்குது அங்கே எல்லாவேலையும்  பண்ணிக்குது அதோட  என்னையும் சேத்து பேசுறிங்களே (சின்ன ஜமீன்)
 • இப்படி கண்ட கண்ட பயலுக எல்லாம் வா தலைவா, போ தலைவா, பொந்துரு  தலைவா சொல்லறதனால தான்  ஒரிஜினல் தலைவருக்கே மரியாதை இல்லாம போயிடுச்சு இனிமே எவனயாவுது தலைவான்னா உன் பன்னி தலை பிஞ்சி போயிடும் (சின்ன பசங்க நாங்க)
 • அல்லக்கைங்க ரூல்ஸ் என்னடா வாழ்க, ஒழிக அதோட நிப்பாட்டிக்கிங்க (தாய் மாமன்) 
 • அட பிஞ்சி போன தலையா

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுண்டமணி&oldid=3707641" இருந்து மீள்விக்கப்பட்டது