பொள்ளாச்சி

இது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.

பொள்ளாச்சி (Pollachi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. 1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.[4]

பொள்ளாச்சி
—  சிறப்பு நிலை நகராட்சி  —
பொள்ளாச்சி
இருப்பிடம்: பொள்ளாச்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°40′N 77°01′E / 10.67°N 77.02°E / 10.67; 77.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பொள்ளாச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்களவைத் தொகுதி பொள்ளாச்சி
மக்களவை உறுப்பினர்

கே. ஈஸ்வரசாமி

சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி
சட்டமன்ற உறுப்பினர்

வி. ஜெயராமன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,35,333 (2011)

9,757/km2 (25,271/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi)

293 மீட்டர்கள் (961 அடி)

குறியீடுகள்
இணையதளம் http://123.63.242.116/pollachi/

பெயர்க்காரணம்

தொகு

'பொருள் ஆட்சி', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.

பொள்ளாச்சி நகராட்சி

தொகு
பொள்ளாச்சி நகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
13.87 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 1,35,333
நகராட்சி மண்டலங்கள்
பொள்ளாச்சி நகராட்சி
நகராட்சி வட்டங்கள்
36 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°40′N 77°01′E / 10.67°N 77.02°E / 10.67; 77.02 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.

மக்கட்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 1,35,333 ஆகும். அதில் 67,285 ஆண்களும், 68,048 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.8% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,531 மற்றும் 258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.84%, இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள் 4.24% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[6]

புகழ்பெற்றவர்கள்

தொகு

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

தொகு

சிறப்புகள்

தொகு

மாட்டுச் சந்தை

தொகு

பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காகக் கேரளா கொண்டு செல்லப்படுகின்றன. இந்தச் சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

திரைப்பட படப்பிடிப்புகள்

தொகு

பொள்ளச்சி தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படப் படப்பிடிப்பு தளமாக விளங்குகிறது. இதற்கு, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையின் அழகும் சிறப்பான தட்பவெட்ப நிலையும் காரணமாக அமைகின்றன. வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படம்பிடிப்பதை விட, மிக மிகக் குறைவான செலவிலேயே இங்கே படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்பது பொள்ளாச்சியின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

தென்னை பொருட்கள்

தொகு

பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.

சுற்றுலாத் தலங்கள்

தொகு

தென்னை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய்ப் பொருள்களுக்குப் பெயர் பெற்றுக் காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்தப் பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பொள்ளச்சியின் அருகே இருக்கும் பெரிய அணைக்கட்டுகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவருகிறது.

கலைகள்

சிக்காட்டம்[7] எனும் கலை சிறப்புமிக்கதாகும். இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது.

போக்குவரத்து

தொகு

தமிழகம் மட்டுமின்றி கேரளா செல்லவும் போக்குவரத்து பெரும்பாலும் பொள்ளாச்சி நகரை கடந்து தான் செல்ல வேண்டும். இதன் காரணமாக பொள்ளாச்சி மாநகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் சரியான திட்டங்கள் இதுவரை முறையான இடாததால் போக்குவரத்து பெரும் சவாலாகவே பொள்ளாச்சிக்கு இருக்கிறது. நியூ ஸ்கீம் காந்தி நால்ரோடு முதல் பாலக்காடு ரோடு வரை மேம்பாலம் அமைந்தால் தான் போக்குவரத்து சற்று குறைந்தபாடு இருக்கும். மேலும் பொள்ளாச்சயிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலையும் பாலக்காடு,கோயம்புத்தூர், தாராபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து சாலை உள்ளது.

பேருந்து நிலையங்கள்

தொகு

பொள்ளாச்சி நகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்படுகிறது. அவை பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளது.

பழைய பேருந்து நிலையம்

தொகு

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் : இங்கிருந்து தான் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர், கிணத்துக்கடவு, பெரிய நெகமம்(ம)சின்ன நெகமம், என். சந்திராபுரம் , வீதம்பட்டி , வீ.வேலூா், சுல்தான்பேட்டை , காமநாயக்கன் பாளையம், பல்லடம், திருப்பூர், அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், கரடிவாவி, ஈரோடு, பெருந்துறை, ஊத்துக்குளி, சங்ககிரி, சேலம், கரூர், பெதப்பம்பட்டி, மூலனூர், சின்னதாராபுரம், திருச்சி, திருவரங்கம், மணப்பாறை, பழநி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சங்கரன்கோவில், தேனி, காங்கேயம், செஞ்சேரிமலை, கொடுமுடி, முத்தூர், தாராபுரம், {கருமத்தம்பட்டி, அன்னூர் (வழி: காமநாயக்கன் பாளையம்)}, வெள்ளக்கோயில் என தமிழக முக்கிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது.

புதிய பேருந்து நிலையம்

தொகு
 
பொள்ளாச்சிக்கு புறப்பட தயாராக இருக்கும் கேரள அரசுப் பேருந்து

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் : பொள்ளாச்சி புறநகர் மற்றும் வெளி மாநில பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் தான் அடங்கும். இங்கிருந்து பாலக்காடு, கோழிக்கோடு, கொல்லம், இடுக்கி, கண்ணூர், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சி, திருச்சூர், குருவாயூர், கொல்லங்கோடு, ஆனைமலை, வால்பாறை, ஆழியாறு, பரபிக்குளம், என வெளி மாநில பேருந்தகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இந்த பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை விட கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தான் அதிகம். அதாவது மொத்த பேருந்து நிலையத்தில் 70% பேருந்துகள் கேரள மாநில அரசு பேருந்துகள் ஆகும். மேலும் பொள்ளாச்சி கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.

பள்ளிகள்

தொகு
  • நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • நகராட்சி தொடக்கப்பள்ளிகள்,
  • நகராட்சி நடுநிலைப்பள்ளிகள்,
  • நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள்
  • பல தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள்.

கல்லூரிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Pollachi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  6. பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்
  7. "sikkattam kannadivenpura", YouTube, பார்க்கப்பட்ட நாள் 2018-03-05
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளாச்சி&oldid=3855454" இலிருந்து மீள்விக்கப்பட்டது