ஊத்துக்குளி

இந்தியாவின், தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், வெண்ணெய் உற்பத்தியில், உலகப் பிரசித்தி.

ஊத்துக்குளி (ஆங்கிலம்:Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஊத்துக்குளி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஊத்துக்குளி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
வட்டம் ஊத்துக்குளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,130 (2011)

1,819/km2 (4,711/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.57 சதுர கிலோமீட்டர்கள் (2.15 sq mi)

297.78 மீட்டர்கள் (977.0 அடி)

இணையதளம் www.townpanchayat.in/uthukuli

அமைவிடம்

தொகு

திருப்பூர் - ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கே 4 கிமீ ல் ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்த இப்பேரூராட்சிக்கு மேற்கில் திருப்பூர் 16 கிமீ; கிழக்கில் ஈரோடு 40 கிமீ; வடமேற்கில் அவிநாசி 31 கிமீ; வடக்கில் கோபிசெட்டிபாளையம் 35 கிமீ; தெற்கில் காங்கேயம் 25கிமீ; தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

5.57 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,000 வீடுகளும், 10,130 மக்கள்தொகையும் கொண்டது.[4]

தொழில் வளம்

தொகு

வெண்ணெய் உற்பத்திக்கு ஊத்துக்குளி மிகவும் புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஊத்துக்குளி வெண்ணெயில் தரம், சுவை ஆகியவை அதிகம். அதற்கு இப்பகுதியில் உள்ள தட்ப வெப்ப நிலை முதற்காரணம். பெரும்பாலான மாதங்கள் வறண்ட வானிலை கொண்ட பகுதி என்பதால் பசும் புல்வெளி கொண்ட மேய்ச்சல் நிலங்கள் குறைவு. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கொழுப்பு நிறைந்த தீவனங்களான பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு போன்றவற்றை கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இந்த பசு, எருமைகள் கறக்கும் பாலில் கொழுப்புச் சத்து, மற்ற சத்துகளும் அதிகமாக இருப்பதால், இதில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெயில் சத்து அதிகம் உள்ளது. அதே நேரம் சுவையும் அதிகம் என்பதால் இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது.

மேலும், ஊத்துக்குளி வெண்ணெயில் இருந்து உருக்கி எடுக்கப்படும் நெய்யின் அளவும் அதிகம். ஒரு கிலோ வெண்ணெயில் 85 பாயிண்ட் நெய் அதாவது 850 கிராம் நெய் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் வெண்ணெயில் 75 பாயிண்ட் வரையே நெய் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

போக்குவரத்து

தொகு
 
ஊத்துக்குளி தொடர்வண்டி நிலையத்தின் பக்கத் தோற்றம்

ஊத்துக்குளியில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு வழியாக நாகர்கோவில் செல்லும் பயணியர் தொடர்வண்டி, மங்களூர் இருந்து சென்னை விரைவு வண்டி இங்கு நின்று செல்லும். திருப்பூரில் இருந்தும், ஈரோட்டில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

ஆன்மிகத் தலங்கள்

தொகு

கைத்தமலை அல்லது கதித்தமலை, இவ்வூரில் இருந்து வடகிழக்காக ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறு குன்று ஆகும். இது முருகன் ஆலயம். தைப் பூச விழாவின் போது இம் மலையில் தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.

ஊத்துக்குளியின் மையப்பகுதியில் கைலாச நாதர் கோவில் (ஈஸ்வரன் கோவில்) ஒன்றும் அமையப்பெற்று உள்ளது.தைப் பூச விழாவின் போது இங்கு தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.மகா தரிசனமும் நடைபெறும் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படும்.

தொல்லியல் களம்

தொகு

கொடுமணல் தொல்லியல் களம்

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஊத்துக்குளி பேரூராட்சியின் இணையதளம்
  4. Uthukuli Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்துக்குளி&oldid=4015401" இலிருந்து மீள்விக்கப்பட்டது