வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் கொழுப்பும் அதைச் சுற்றி சில நீர்த் துளிகளும் மற்றும் பால் புரதப் பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

வெண்ணெய் மற்றும் கத்தி

குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு. உப்பு, வாசனைப் பொருட்கள் மற்றும் காப்புப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து வெண்ணெயை விற்பர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணெய்&oldid=3398570" இலிருந்து மீள்விக்கப்பட்டது