காட்டெருமை
காட்டெருமை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | காட்டெருமை
|
துணையினங்கள் | |
| |
வாழிடங்கள் |
காட்டெருமை அல்லது ஆசிய எருமை (wild water buffalo) என்பது இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படும் எருமை இனம் ஆகும். இன்று 4000 க்கு குறைவான தொகையில் காணப்படும் இந்த விலங்குகள் அழிந்து கொண்டுபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக “ஐசியுஎன்” அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில்( இவற்றின் மூன்று பரம்பரை காணும் காலப்பகுதியில்) காட்டெருமைகளின் தொகை குறைந்தபட்சம் 50 வீதத்தால் அருகியிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள். உலகெங்குமுள்ள காட்டெருமைகள் தொகை அண்ணளவாக 3400 என்ற கணிப்பீட்டில், 3100 மிருகங்கள் இந்தியாவில் (குறிப்பாக பெரும்பான்மைான தொகை அஸாம் மாவட்டத்தில்) 91 வீதமும், மீதி 9 வீதம் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வீட்டு எருமைகளின் மூதாதையர்தான் இந்தக் காட்டெருமைகள் என்று நம்பப்படுகின்றது.
உடல் அமைப்பு
தொகுஒரு வீட்டு எருமையோடு ஒப்பீடு செய்யும்போது, காட்டெருமை எடை கூடியது. இதன் எடை 600இல் ஆரம்பித்து 1200 கிலோ வரை செல்லலாம். அடைத்து வளர்க்கும் மூன்று மிருகங்களின் சராசரி எடை 900கிலோ. (1300-2600இறாத்தல்கள்) தலையிலிருந்து முழு உடம்பினதும் நீளம் 240-300செ.மீ) . வால் 60-100செ.மீற்றர் நீளம் கொண்டது. ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் இருக்கும். நெற்றியை ஒட்டிய பகுதியில் இரு கொம்புகளுக்கும் .இடையே 2மீற்றர் துார அளவிற்கு இநதக் கொம்பு படர்ந்திருக்கின்றது. தோல் சாம்பர் கலந்த கறுப்பாக இருக்கும். தலை அளவோடு ஒப்பிடும்போது இதன் காது , அளவில் சிறியது . வால் நுனியில்அடர்த்தியான உரோமம் இருக்கின்றது.
வாழும் இடங்கள்
தொகுஇந்தியா, நேபாளம், பூட்டான், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலும், உறுதிப்படுத்தப்படாத ஒரு தொகை மயன்மாரிலும், அழிந்த நிலையில் பங்களாதேஷ், லாவோஸ். இலங்கை ஆகிய நாடுகளிலும் இந்தக் காட்டெருமைகள் காணப்படுகின்றன. ஈரலிப்பான புற்றரைகளிலும், சகதி நிறைந்த வெளிகளிலும், தாவரங்கள் செறிந்து வளர்ந்த ஆற்றுப் பள்ளத்தாக்குப் பிரதேசங்களிலும் இவை நடமாடுகின்றன.நேபாளத்திலுள்ள வனவிலங்கு காப்பகமொனில் (Koshi Tappu Wildlife Reserve) இறுதியாக 2016இல் எடுத்த ஒரு கணிப்பின்படி, இங்குள்ள காட்டெருமைகள் தொகை வருடாவருடம் அதிகரித்து வருவதாகவும், 120 ஆண்கள் உட்பட முழு எண்ணிக்கை 432ஐ தொட்டு விட்டதாக அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இலங்கையிலுள்ள இனம் மிகோனா என்ற இனத்தைச் சார்ந்தது என்றும், இங்குள்ள வீட்டு எருமைகளின் வழித்தோன்றல்கள்தான் இந்த எருமைகள் என்றும் சந்தேகிப்பதால், உண்மையான காட்டெருமைகள் இங்கு இல்லையென்றே நம்பப்படுகின்றது.
சூழலியலும் குணாம்சமும்
தொகுஇவை இரவிலும், பகலிலும் காடுகளில் நடமாடும் விலங்கினங்களைச் சார்ந்தவை(diurnal and nocturnal.)நன்கு வளர்ந்த ஒரு பெண் எருமையும் அதன் கன்றுகளும் அடங்கிய பரிவாரம்(அதிக பட்சம் 30 வரை இருக்கலாம்) 170-1000ஹெக்டேக்கர்(0.66-3.86 சதுர மைல்) அளவு நிலத்தை புல்மேய்ச்சலுக்காகவும் ஓய்வெடுத்தலுக்காகவும் தம்வசமாக்கிக் கொள்கின்றன. காளைகள் குழுவில் இரு்நதாலும் வயதாளிகளான பசுக்களே கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றன. அதே சமயம் நன்கு வளர்ந்த பத்து வரையிலான ஆண் பிரமச்சாரிகள் , வயதாளிகளான ஆண் எருமைகளுடன் பிறிதான ஒரு குழுவை அமைத்துக் கொள்வதுண்டு. திமிரான ஆண் எருமைகள் இன்னொரு கூட்டத்தின் பெண்எருமைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், இதன் முடிவில் விரட்டப்பட்டு விடுகின்றன. கர்ப்ப காலம் பத்து தொடக்கம் 11 மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு கன்றே ஈனுவதுண்டு.. சில சமயங்களில் இரட்டையரும் பிறப்பதுண்டு. 18 மாதங்களில் ஒரு ஆண் கன்று பாலியல் முதிர்ச்சி கண்டுவிடுகின்றது. பெண்ணுக்கோ 3 வருட காலங்கள் தேவைப்படுகின்றன. காட்டில் உச்ச காலமாக இவற்றால் 25 வருடங்கள் வாழ முடியும்.இவை பொதுவாக மேய்ச்சல் மிருகங்கள். புல், பற்றைகள் என்று மேயும் இவை, நெல் வயல், கரும்பு வயல், சணல் வயல் ஆகியவற்றுள்ளும் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. முதலைகளுக்கும், புலிகளுக்கும் , ஆசிய கருப்பு கரடிகளுக்கும் காட்டெருமைகள் இரையாகி வருகின்றன.
அழிந்து வரும் இந்தக் காட்டெருமை இனம் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய காட்டு விலங்கினங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.iucnredlist.org/species/3129/128960945
- ↑ Castelló, José R. (2016). Bovids of the World. Princeton: Princeton University Press. p. 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691167176.