பாலூட்டி
பாலூட்டி புதைப்படிவ காலம்:திராசிக் முதல் தற்போது வரை | |
---|---|
மேல் இடது மூலையிலிருந்து வலஞ்சுழியாக:ஒட்டகச் சிவிங்கி, பொன்னிறப்பழ வௌவால், சிங்கம், முள்ளெலி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
உட்தொகுதி: | |
பெருவகுப்பு: | |
(unranked) | பனிக்குடமுடையன |
வகுப்பு: | பாலூட்டி (Mammalia) L, 1758
|
Clades | |
|
பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) (Mammal) என்பது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. இவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன.
பாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008ஆம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, 5488 சிற்றினங்கள் உள்ளன.[1] இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.
பாலூட்டி வகுப்பானது, 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன.[2]
புற அமைப்பியல்
தொகுபாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலூட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
பாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்த வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன.
சூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு
தொகுகடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்சுபோசான்களின் (Retrotransposons) இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன.[3] மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (Afrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
மமாலியா |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உடற்கூறியல் மற்றும் உருவவியல்
தொகுதனித்துவமான அம்சங்கள்
தொகுஇளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக்க பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம். புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.
பல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன.
- தாடை மூட்டு (Jaw joint)
- நடுச்செவி (Middle ear)
- மாற்றுப் பற்கள் (Tooth replacement)
- பற்சிப்பி (Prismatic enamel)
- பிடரெலும்புக்குமிழ் (Occipital condyles)
உயிரியல் தொகுதிகள்
தொகுவௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் காணப்படுகிறது. கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகளில் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் காணப்படுகிறது[4]. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன[5]. கங்காரு போன்ற பைம்மாவினம் (marsupials) மற்றும் முள்ளெலி போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (monotremes) இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (corpus callosum) என்ற இணைப்பு மெய்யம் காணப்படுகிறது [6].
வாழிடம்
தொகுபாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.
உயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள், பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள், பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள், கடலில் வாழும் திமிங்கலங்கள், ஆறுகளில் வாழும் நீர்நாய்கள், காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.
பாலூட்டி வகைகள்
தொகுவௌவால்
தொகுவௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொண்ட ஒரே விலங்கு. இந்த விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
உயிரினங்களை வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை.
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும்.
கரடி
தொகுகரடி (Bear), ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.
துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் ஆர்க்டோசு (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.
ஒட்டகம்
தொகுஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
பூனை
தொகுபூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.
பண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பசு
தொகுபசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும்.
நாய்
தொகுநாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 [7] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 [8][9] ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
உசாத்துணை
தொகு- பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ "Initiatives". The IUCN Red List of Threatened Species. IUCN. April, 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Kriegs, Jan Ole; Churakov, Gennady; Kiefmann, Martin; Jordan, Ursula; Brosius, Jürgen; Schmitz, Jürgen (2006). "Retroposed Elements as Archives for the Evolutionary History of Placental Mammals". PLoS Biology 4 (4): e91. doi:10.1371/journal.pbio.0040091. பப்மெட்:16515367. பப்மெட் சென்ட்ரல்:1395351. http://www.plosbiology.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pbio.0040091.
- ↑ Dierauf, Leslie A.; Gulland, Frances M. D. (2001). CRC Handbook of Marine Mammal Medicine: Health, Disease, and Rehabilitation (2 ed.). Boca Raton: CRC Press. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-4163-7. இணையக் கணினி நூலக மைய எண் 166505919.
- ↑ Lui, J. H.; Hansen, D. V.; Kriegstein, A. R. (2011). "Development and Evolution of the Human Neocortex". Cell 146 (1): 18–36. doi:10.1016/j.cell.2011.06.030. பப்மெட்:21729779.
- ↑ Keeler, Clyde E. (1933). "Absence of the Corpus callosum as a Mendelizing Character in the House Mouse". Proceedings of the National Academy of Sciences of the United States of America 19 (6): 609–11. doi:10.1073/pnas.19.6.609. பப்மெட்:16587795. Bibcode: 1933PNAS...19..609K.
- ↑ McGourty, Christine (2002-11-22). "Origin of dogs traced". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm. பார்த்த நாள்: 2007-11-27.
- ↑ Vilà, C. et al. (1997). Multiple and ancient origins of the domestic dog. பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம் Science 276:1687–1689. (Also "Multiple and Ancient Origins of the Domestic Dog" பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்)
- ↑ Lindblad-Toh, K, et al. (2005) Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog. Nature 438, 803–819.