இரவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு அல்லது இருட்சூழ்வு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும்.
பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப்பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப்பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.