ஆர். என். இரவி
ஆர். என். இரவி (Ravindra Narayana Ravi; பிறப்பு: 3 ஏப்ரல் 1952) என்பவர் முன்னாள் இந்திய அதிகாரி ஆவார். தமிழக ஆளுநராக 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற இவர்,[2] நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவராவார்.[3][4][5][6]
இரவீந்திர நாராயண இரவி | |
---|---|
15 ஆவது தமிழ்நாடு ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 செப்டம்பர் 2021[1] | |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | பன்வாரிலால் புரோகித் |
18 ஆவது நாகாலாந்து ஆளுநர் | |
பதவியில் 1 ஆகத்து 2019 – 17 செப்டம்பர் 2021 | |
முதலமைச்சர் | நைபியு ரியோ |
முன்னையவர் | பத்மனாப ஆச்சாரியா |
பின்னவர் | ஜகதீஷ் முகீ |
மேகாலயா ஆளுநர் | |
கூடுதல் பொறுப்பு | |
பதவியில் 18 திசம்பர் 2019 – 26 சனவரி 2020 | |
முதலமைச்சர் | கான்ராட் சங்மா |
முன்னையவர் | ததகதா ராய் |
பின்னவர் | ததகதா ராய் |
இந்திய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் | |
பதவியில் 05 அக்டோபர் 2018 – 31 சூலை 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1952 பட்னா, பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | லெட்சுமி ரவி |
வாழிடம்(s) | ராஜ் பவனம், கிண்டி, சென்னை |
குடும்பம்
தொகுபீகாரின் பாட்னாவில் பிறந்த இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் உள்ளனர்.[7]
பணி
தொகுஇந்தியக் காவல் துறை அதிகாரியான இவர், கேரள மாநில 1976ஆம் ஆண்டு தொகுதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 5, 2018 அன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் பணி
தொகுநாகாலாந்து ஆளுநர்
தொகு2014 முதல் தேசிய சோசியலிசக் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியத்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகத்து 2015 இல் கையெழுத்தானது.[8][9] 20 சூலை 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.[5]
தமிழ்நாடு ஆளுநர்
தொகுஇவர் செப்டம்பர் 9, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆல் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 2021 அன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சன்ஜிப் பானர்ஜி முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
- ↑ ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய கவர்னராக பதவியேற்பு
- ↑ "R N Ravi sworn in as Nagaland governor | DD News". ddnews.gov.in.
- ↑ "R N Ravi sworn in as Nagaland governor". 1 August 2019 – via The Economic Times.
- ↑ 5.0 5.1 "RN Ravi Sworn In As Nagaland Governor". Indo-Asian News Service. 1 August 2019. https://www.ndtv.com/india-news/rn-ravi-sworn-in-as-nagaland-governor-2078810.
- ↑ Scroll Staff. "RN Ravi, interlocutor for Naga peace talks, is new Nagaland governor". Scroll.in.
- ↑ https://ministersandgovernors.com/ravindra-narayana-ravi/
- ↑ Singh, Vijaita (2017-07-15). "Meet R.N. Ravi, who is mediating peace with the Nagas" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/meet-rn-ravi-who-is-mediating-peace-with/article19285361.ece.
- ↑ "Exclusive | Nagas Will Never Join Indian Union Nor Accept India s Constitution : NSCN (I-M) Chief". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
- ↑ "தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.