ராம் நாத் கோவிந்த்

14வது இந்தியக் குடியரசுத்தலைவர்

இராம் நாத்து கோவிந்து (Ram Nath Kovind, ராம் நாத் கோவிந்த், பிறப்பு: 1 அக்டோபர் 1945)[2] இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர்.[3][4] இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.[5] மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.[6][7][8][9][10] பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.[11][12] 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.

ராம் நாத் கோவிந்த்
Ram Nath Kovind
14-வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25  சூலை 2017 – 25 சூலை 2022
பிரதமர்நரேந்திர மோடி
துணை அதிபர்வெங்கையா நாயுடு
முன்னையவர்பிரணாப் முகர்ஜி
பின்னவர்திரௌபதி முர்மு
35வது பீகார் ஆளுநர்
பதவியில்
16 ஆகத்து 2015 – 20 சூன் 2017[1]
முன்னையவர்கேசரிநாத் திரிபாதி
பின்னவர்கேசரிநாத் திரிபாதி
ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 1994 – 2 ஏப்ரல் 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1945 (1945-10-01) (அகவை 79)
தேராப்பூர், ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்தரப் பிரதேசத்தில்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி 
துணைவர்சவித்தா (தி. 1974)
பிள்ளைகள்பிரசாந்த் குமார், சுவாதி
பெற்றோர்மைக்கு லால்
கலாவதி
முன்னாள் கல்லூரிகான்பூர் பல்கலைக்கழகம்
தொழில்
 

பிறப்பும் கல்வியும்

தொகு

1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் தீராப்பூர் பகுதியில் பிறந்தார். தந்தையார் மைகு லால் தாயார் கலாவதி. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். இவர் தில்லி நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[13][14]

தொழில் வாழ்க்கை

தொகு

1971 ஆம் ஆண்டு புதுதில்லி வழக்குரைஞர் கழகத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிந்தார். ஒரு வழக்கறிஞராக, சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர், பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு புது தில்லியிலிருந்த இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலம் உதவி செய்தார். 1977 ஆம் ஆண்டிலிருந்து 1979 வரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் பதில் சட்ட ஆலோசகராக கடமையாற்றியதுடன் 1977-78 காலப்பகுதியில் அப்போதைய பிரதம மந்திரி மொரார்ஜி தேசாயின் தனிப்பட்ட உதவியாளராகவும் பணி புரிந்தார். சுமார் 16 வருட காலம் புதுதில்லி உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.[15] [16]

அரசியல்

தொகு

1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார்.[17] கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

பாஜக உறுப்பினர்

தொகு

1991 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினரானார். 1998 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பாஜக தலித் மோர்ச்சா தலைவராக செயல்பட்டார். கட்டம்பூர் மற்றும் போக்னிப்பூர் சட்டபேரவை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி பெற்றார்.

மாநிலங்களவை

தொகு

1994 ஆம் ஆண்டில் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி 12 ஆண்டுகள்வரை பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் பழங்குடியினர் நலன், சமூக நீதி போன்ற பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் இடம்பெற்றிருந்தார். மேலும் நாடாளுமன்ற அவைக்குழு தலைவராகவும் பணியாற்றினார்.

கல்வி நிலையங்களில் பதவி

தொகு
  • லக்னோவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் ஆளுகைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
  • கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஆளுநர்களின் வாரிய உறுப்பினராக இருந்தார்.[18]

குடியரசுத்தலைவர்

தொகு

பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவால் அறிவிக்கப்பட்டு[19] 25 சூலை 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இவருக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Press Releases Detail - The President of India". presidentofindia.nic.in.
  2. "Who is Ram Nath Kovind?". The Hindu. http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki. 
  3. http://www.ndtv.com/india-news/presidents-swearing-in-ceremony-live-ram-nath-kovind-takes-oath-as-14th-president-of-india-today-1728784
  4. 4.0 4.1 http://www.thehindu.com/news/national/live-updates-president-swearing-in-ceremony/article19357489.ece?homepage=true
  5. PTI (8 August 2015). "Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors" – via The Economic Times.
  6. Desk, The Hindu Net. "Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece. 
  7. "Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah" (in en-US). Firstpost. 2017-06-19. http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html. 
  8. "BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia" (in en). http://www.hindustantimes.com/. 2017-06-19. http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html. 
  9. "Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah" (in en). http://www.deccanchronicle.com/. 2017-06-19. http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html. 
  10. "Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate". theweek.in இம் மூலத்தில் இருந்து 2017-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170619132400/http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html. 
  11. "BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims".
  12. "Raj Bhavan for man who shunned TV". Archived from the original on 2017-08-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
  13. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Archived from the original on 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
  14. "Advocate Ram Nath Kovind".
  15. PTI (19 June 2017). "What you should know about BJP's presidential candidate Ram Nath Kovind" (in ஆங்கிலம்). Archived from the original on 18 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூலை 2017 – via The Economic Times. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  16. "Ram Nath Kovind, a lawyer who cracked civils but lost 2 elections - Times of India" (in ஆங்கிலம்). The Times of India இம் மூலத்தில் இருந்து 2017-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170718010835/http://timesofindia.indiatimes.com/india/ram-nath-kovind-a-lawyer-who-cracked-civils-but-lost-2-elections/articleshow/59226467.cms. 
  17. "Enact tougher laws to prevent crimes against dalits". The Hindu. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
  18. http://www.thehindu.com/news/national/who-is-ram-nath-kovind/article19103006.ece
  19. "Presidential candidate".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_நாத்_கோவிந்த்&oldid=4013917" இலிருந்து மீள்விக்கப்பட்டது